PAGEVIEWERS

டாட்டா சங்க ஊதிய வழக்கு தற்கால நிலை


8.3.2015 அன்று ஊதிய பிரச்சினை சார்ந்த கடிதம் " ஊதிய குறை தீர்வு ஆணையம் "தலைவர் .ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி .திரு .வெங்கடாசல மூர்த்தி அவர்களிடம் இருந்து வர பெற்று உள்ளன .
அதன். அடிப்படையில் நமது ஊதிய வழக்கு மார்ச்சு மாதம் 16 ல் வர. இருந்து ஏப்ரல் முதல் வாரம் மீண்டும் மதுரை உயர் நீதிமன்றம் கிளையில் வர உள்ளன .அன்று நமது ஊதிய பிரச்சினை யை விசாரணை செய்து ஊதியம் 9300 + 4200 என மாற்றி அமைத்திட அரசுக்கு பரிந்துரைகள் செய்திட ஓய்வுபெற்ற உயர் நீதிமன்றம் நீதிபதி அவர்கள் தலைமை யில் ஆணையம் அமைத்திட அரசுக்கு ஆணை வழங்கிட தீர்ப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது . ஊதியம் மாற்றம் டாட்டா சங்கத்தால் மட்டுமே ஊதியம் 9300 + 4200 என மாற்றிட முடியும் .புதிய வரலாறு நீதிமன்றம் துணையுடன் டாட்டா உருவாக்கும் .
தற்போது உள்ள நிலை யில் சட்ட போராட்டம் மற்றும் கள. போராட்டம் இரண்டும் சேர்ந்து நடைபெற்றால் தான் நாம் வெற்றி பெற முடியும் .எனவே தான் டாட்டா மூலமாக சட்ட போராட்டமும் ஜாக்டா மூலமாக கள போராட்டம் என இரண்டு வகையான போராட்டங்களை டாட்டா நடத்தி வருகிறது .தற்போது உள்ள அரசியல் நிலையில் இரண்டு வகையான போராட்டம். முன்னெடுத்து சென்றால் மட்டுமே இடைநிலை ஆசிரியர் ஊதியம் மாற்றிட முடியும் .--,டாட்டா
கிப்சன் .

 

No comments:

Post a Comment