PAGEVIEWERS

தொடக்க கல்வி-உதவி தொடக்க கல்வி அலுவலர்/கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய பள்ளிகள் ஆண்டாய்வு,பள்ளிகள் பார்வை சார்ந்து தொடக்க கல்வி இயக்குனரின் அறிவுரைகள்.












 

Grant of notional increment to Government Servants for pensionary benefits for those who retire on superannuation on the preceding day of increment

ஊதிய பிரச்சினையில் உச்ச நீதிமன்றம் தடை ஏன் ?


தமிழ் நாட்டில் ஆசிரியர் மற்றும் அரசுழியர்களுக்கு 6 வது ஊதிய குழு முரண்பாடுகளை தீர்ப்பதற்கு 2010 ல் திரு . ராஜிவ் ரஞ்சன் .இ.ஆ.ப.அவர்கள் தலைமையில் ஒரு நபர் குழு அமைக்கப்பட்டது . அதிலும் பலவேறுபட்ட முரண்பாடுகள் ஏற்பட்டது. அதை தீர்க்க சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு படி 2012 ல் திரு .கிருஷ்ணன் அவர்கள் தலைமையில் 3 நபர் குழு அமைக்க பட்டது . அதன் அடிப்படையில் பல்வேறு அரசு ஆணைகள் வெளியிட்டது .அதில் ஆசிரியர்களுக்கு எந்தவொரு பயனுமில்லை .மேலும் இடைநிலை ஆசிரியர்கள் பற்றி உண்மையில்லாத பல்வேறு கருத்தை கூறியது .மேற்கண்ட இரு ஊதிய குழு அறிக்கை கருத்தை ரத்து செய்து உண்மையான ஆதாரங்கள் அடிப்படையில் ஊதியம் 9300 + 4200 என மாற்றம் செய்திட டாட்டா பொது செயலாளர் கிப்சன் அவர்கள் சார்பாக சென்னை உயர் நீதிமன்றம் வழக்கு எண் .33399/2013 தொடரப்பட்டது .அதில் 12.9.2014 தீர்ப்பு பெறப்பட்டது .அதன் அடிப்படையில் அரசு வெளியிட்ட அரசு கடிதம் எண் .60473/Cmpc/2014 நாள் . 10-12-2014 ல் மேற்கண்ட ஊதிய குழு அறிக்கையில் உள்ள அதே கருத்தை மீண்டும் கூறி மறுத்து விட்டது . பிறிதொரு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இரு நபர் அமர்வில் மேற்கண்ட இரு ஊதிய குழு அறிக்கைகள் சட்டப்படி சரியானவை அல்ல .இதில் பல்வேறு குழறுபடிகள் உள்ளன என்பதால் அதை ரத்து செய்து ஓய்வுபெற்ற சதீஷ்கர் மாநில தலைமை நீதிபதி .திருமிகு .வெங்கடாசல மூர்த்தி அவர்கள் தலைமையில் ஊதிய குறை தீர் ஆணையம்.மீண்டும் அமைத்து ஊதிய முரண்பாடு தீர்க்க அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது .
அதன் படி உடனடியாக நீதிமன்றம் தீர்ப்பு படி ஆணையம் அமைத்து ஊதியம் மாற்றி அமைக்க பட வேண்டும். மேலும் அரசு கடிதம் 60473/2014 -----10-12-2014 ரத்து செய்யப்பட வேண்டும். மீண்டும் டாட்டா பொது செயலாளர் கிப்சன் அவர்கள் தலைமையில் 2வழக்கு W.P. MD NO.1612/15 தாக்கல் செய்ய பட்டது .அதில். 10-2-2015 _ உரிய கால கெடுவுக்கு பின் வழக்கு தாக்கல் செய்திட உத்தரவிட்டார் .
ஆனால் தமிழக அரசு. ஆணையம் அமைக்க முடியாது எனவும். ஊதிய மாற்றம் செய்திட முடியாது எனவும் உச்ச நீதிமன்றம் சென்று. special leave petitions. Civil. no 35679 - 35838 of 2014 தாக்கல் செய்து 16-01-2015 ல் தடைகள் பெற்று உள்ளதாக அரசு கடிதம் எண் 12925/2015----27-5-2015 தெரிவித்த உள்ளது தமிழக அரசு .
கடந்த 2011சட்ட மன்ற. தேர்தல் வாக்குறுதி யாக ஊதிய முரண்பாடு தீர்க்கப்படும். பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறை படுத்தப்படும் என வாக்குறுதி கொடுத்துவிட்டு தற்போது அரசே உச்ச நீதிமன்றம் சென்று தடைகள் பெற்று இருப்பது வியப்பாக உள்ளன .
டாட்டா சங்கம் சார்பாக அனைத்து ஆசிரியர்கள் ஒத்தாசையுடன் உச்ச நீதிமன்றம் சென்று தடைகள் நீக்கம் செய்திட மனு தாக்கல் செய்யப்படும் .
டாட்டா கிப்சன் .பொது செயலாளர்
தமிழ் நாடு அனைத்து ஆசிரியர் சங்கம்
9443464081

CEO Transfer List....


✅Radhakrishnan ceo kanyakumari to Pta secretary chennai ✅Virudhu Nagar ceo Jayakumar to virudhunagar ✅Tiruvannamalai SSA ceo pugalhendhi to Viruthunagar ceo ✅Krishnagiri SSA ceo Mr.Ponkumar to Tiruvannamalai Ceo ✅ Karur ceo tiruvalarselvi to Tanjore ✅ Tanjore ceo tamilvannan to Krishnagiri ✅ Krishnagiri ceo to karur ✅Tuticorn ceo munusamy to perambalur ✅ Nagapattinam ceo Ramakrishnan to Tuticorn ✅Coimbatore ceo gnanagowri to salem. ✅ KANCHEEPURAM ceo Shanthy to pudhukottai ✅ Pudhukottai ceo arulmurugan to Coimbatore ✅ Salem SSA ceo Usha to KANCHEEPURAM

இடைநிலை ஆசிரியர் சமூகத்திற்கு வேண்டுகோள் ்......

இடைநிலை ஆசிரியர் சமூகத்திற்கு வேண்டுகோள் ்......
1999 ஜுன் மாத்த்திற்கு பின்னர் நியமனம் பெற்ற வர்கள் 2800 தர ஊதியத்தில் பணி செய்வதால் ₹10,000 இழந்து வருகிறார் கள். இந்த உண்மை பலருக்கு தெரியவில்லை .2009 பின்னர் நியமனம் பெற்றவர்களுக்கு மட்டுமே பாதிப்பு ஏற்படவில்லை அனைவரும் பாதிக்கப்பட்டு உள்ளனர் .
நமது பாதிப்பு தற்போது நீக்கம் செய்ய பட வில்லை என்றால் ஆயுள் முழுவதும் பாதிப்பு தொடரும்
இடைநிலை ஆசிரியர் சமுதாத்தில 80,000 பாதிக்கப்பட்டு உள்ளோம் இவ்வளவு பேர்கள் இருந்து நமது பாதிப்பு நீங்க பாடுபடவில்லை என்றால் நம் சமுதாயம் வருங்கால த்தில் மிகபெரிய பாதிப்பு அடையும்
ஊதிய பிரச்சினையில் தற்போது உச்ச நீதிமன்றம் தடை பிறப்பித்து உள்ளன .
இந்த தடைகள் நீக்கம் செய்ய பட்டால் மட்டுமே ஊதிய பிரச்சினை முடிவுக்கு வரும் .
தடைகள் நீக்கம் செய்திட டாட்டா. சங்கத்துடன் இனைந்து இருங்கள் .

இந்த பிரச்சினை தீர்க்கப்பட தங்கள் ஒன்றியத்தில் இடைநிலை ஆசிரியர் களை. ஒருங்கிணைந்து விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்துங்கள்
உங்களுக்கு ஏற்படும் சந்தேகங்கள் தீர்க்கப்பட தொடர்பு கொள்ளுங்கள் .
கூடுதல் விபரங்கள் அறிந்திட தேவை எனில்.நாங்கள் கலந்து கொண்டு விளக்கம் வழங்கிட தயாராக உள்ளோம்

டாடா கிப்சன் .9443464081,

இடைநிலை ஆசிரியர்களின் ஊதியத்தை மாற்றிட உடனடியாக உச்ச நீதிமன்றம் செல்வோம் வெற்றிக்கனியை டாட்டா மூலம் பெற்றிடுவோம்

TATA சங்கத்தின் 2ம் மற்றும் 3ம் ஊதிய வழக்குகளின் படிW.P.( MD ) NO.1612/2015   and W.P.( MD ) NO; 5301/2015  இடைநிலை ஆசிரியர்களின்  ஊதியத்தை மாற்றிட ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை செய்திட வழக்கு தாக்கல் செய்யப்பட்டது
அதில் ஜனவரி மாதம் பெறப்பட்ட தீர்ப்பை அடிப்படையாக கொண்டு அரசு கடிதம் எண் ;12925/ஊ.கு.தி.பி./2015 .நாள் ;27.05.2015 ன் படி வரப்பட்ட கடித்ததில் இடைநிலை ஆசிரியர்களின்  ஊதியத்தை மாற்றிட இந்திய உச்ச நீதிமன்றம் தடை உள்ளத்தால் தங்களின் கோரிக்கையை பரிசிலனை செய்திட நீதிபதி தலைமையில் ஆணையம் அமைத்திட முடியாது என தமிழக அரசு தெரிவித்து உள்ளது.

அன்பார்ந்த இடைநிலை ஆசிரியர்களே நமது ஊதிய முரண்பாடு தீர்க்க நமது சங்கத்தால் மட்டுமே முடியும். தற்போதைய நிலையில் போராட்டங்களால் முடிவு காண முடியாத நிலை உள்ளத்தால் டாட்டா சங்கத்துடன் இணைந்து இருங்கள் .உச்ச நீதிமன்றம் செல்ல உங்கள் உதவி கரங்களை நீட்டுங்கள் நமது நெற்றியை எவராலும் தடுக்க முடியாது.

உடனடியாக உச்ச நீதிமன்றம் செல்வோம் வெற்றிக்கனியை டாட்டா மூலம் பெற்றிடுவோம்



Tamilnadu school list

####### தமிழக பிரபலங்கள் ########


TAMIL NADU LEGISLATIVE ASSEMBLY GOVERNOR His Excellency Thiru. K. ROSAIAH
Office : 044 2567 0099
Intercom : 5618
Residence : 044 2235 1313
------------------------------------------------
CHIEF MINISTER Hon. Selvi J JAYALALITHAA
Telephone No : 044 2567 2345
Intercom : 5666
--------------------------------------------------
LEADER OF OPPOSITION Thiru. VIJAYKANT
Telephone No. : 044 2567 0821, 2567 0271/104
Residence: Telephone No. : 044 2376 4377
---------------------------------------------------
SECRETARY Thiru A.M.P. JAMALUDEEN, M.Sc., B.L.,
Telephone No : 2567 2611, 2567 0271/105 Cell No : 77080 70111
Residence Telephone No : 2615 6146
------------------------------------------------------
Kalaignar Karunanidhi
FB ADMIN 9941127722 (admin)
Kalaignar Arangam
+(91)-44-24327261, +(91)-9444221426
-----------------------------------------------------
All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK)
+91 – 44 – 2813 07 87
+91 – 44 – 2813 22 66
+91 – 44 – 2813 3510
####### தமிழக செய்தி ஊடகங்கள் ########
www.dailythanthi.com
044 2538 7731
********************************

இன்று 1-6-2015 புதிய கல்வி ஆண்டில் அடிகள் வைக்கும் ஆசிரியர்கள் அனைவரும் எல்லா வளங்களும் பெற்று சிறப்பாக பணி செய்திட இறைவன் அருள் செய்வாராக .
வாழ்த்துகளுடன்
டாட்டா கிப்சன் .

பணி மாறுதல் கலந்தாய்வு செய்தி ""


தமிழ்நாடு தொடக்க கல்வி இயக்குநர் திருமிகு .ரெ.இளங்கோவன் அவர்களிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது தெரிவித்த செய்தி
ஜூலை மாதம் 2 வாரம் தான். கலந்தாய்வு நடைபெற வாய்ப்புகள் உள்ளன .GO. ஜுன் கடைசி வாரம் வெளிவரும் என தெரிவித்தார் .
வாழ்த்துக்களுடன்
டாடா .கிப்சன் .

தொடக்க கல்வி-இடிந்து விழும் நிலையில் உள்ள பள்ளிகள் (DEMOLISHED CONDITION) கண்டறிந்து நடவடிக்கை மேற்கொள்ளுதல் சார்பான இயக்குனரின் உத்தரவு

முதன்மை செயலாளர் அறிவுரை

தமிழ்நாடு முழுவதும் புகாருக்கு வழி வகுக்காமல் பள்ளிக்கூடங்களை நடத்தவேண்டும் முதன்மை கல்வி அதிகாரிகள் கூட்டத்தில் முதன்மை செயலாளர் அறிவுரை-தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்துப்பள்ளிக்கூடங்களும் எந்த வித புகாருக்கும் இடம் அளிக்காமல் சிறப்பாக நடத்தவேண்டும் என்று அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா அறிவுரை வழங்கினார்.
கல்வி அதிகாரிகள் கூட்டம்
வருகிற ஜூன் 1-ந்தேதி தமிழ்நாடு முழுவதும் அனைத்து பள்ளிக்கூடங்களும் திறக்கப்பட உள்ளன. பள்ளிக்கூடங்கள் திறக்கும் முன்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளையும், அனைத்து மாவட்ட மெட்ரிகுலேசன் ஆய்வாளர்களையும் அழைத்து சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் நேற்று கூட்டம் நடத்தப்பட்டது.
கூட்டம் முடிந்ததும் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா நிருபர்களிடம் கூறியதாவது:-

2015 -2016 கல்வி ஆண்டில் செய்யப்பட வேண்டியவை ...







    
  

 
 

TRB-PROVISIONAL LIST OF CANDIDATES SELECTED & SUPPLEMENTARY PROVISIONAL LIST OF CANDIDATES SELECTED

Click here Provisional list and Supplementary list of Candidates selected after C.V 

உங்களின் மாத சம்பளம், PF, போனஸ், ARREARS போன்ற ECS தகவல்களை, நிலவரங்களை ஆன்லைனில் இங்கே அறிந்துக்கொள்ளுங்கள்

தொடக்கக் கல்வி - ஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் நீண்ட நாட்கள் விடுப்பில் உள்ள ஆசிரியர்கள் / எவ்வித தகவலின்றி பணிக்கு வராதவர்கள் மற்றும் தற்காலிக பணி நீக்கத்தில் உள்ள ஆசிரியர்களின் விவரம் 11.05.2015க்குள் அளிக்க இயக்குனர் உத்தரவு

நல்ல பயோடேட்டாவைத் தயாரிப்பது எப்படி? யோசனை கூறவும். 

இன்றைய போட்டிச் சூழலில் ஒரு பணிக்கு பலர் விண்ணப்பிக்கிறார்கள். அனைவரையும் அழைத்து அவர்களை நேர்காணல் செய்து வேலை தருவது என்பது சாத்தியமில்லை.
இதனால் பல நிறுவனங்களும் முதற்கட்டத் தேர்வாக பயோடேட்டாவைத் தான் பரிசீலித்து விண்ணப்பித்தவர்களை சுருக்கி சிலரை மட்டும்  நேர்முகத் தேர்வுக்கோ போட்டித் தேர்வுக்கோ அழைக்கிறார்கள். எனவே Resume எனப்படும் பயோடேட்டாவானது நமது பணிக்கான  அடிப்படையாக அமைகிறது. எப்படி இதைத்தயாரிக்கலாம்?
* நீங்கள் நுழைய விரும்பும் துறை சார்ந்த உங்களது அறிவுத் திறன்களை முறைப்படி வரிசைப்படுத்துங்கள். உங்களது பயோடேட்டாவின்  ஆரம்பத்திலேயே துறை சார்ந்த உங்களது திறன்கள் குறிப்பிடப்பட வேண்டும். உங்களது பயோடேட்டாவை பரிசீலிக்க இருப்பது அத்துறையைச் சேர்ந்த திறம்படைத்த ஒருவர் தான். எனினும் பொதுவாக இது போன்றவரை நமது பயோ டேட்டா சென்றடைவதற்கு முன்பு அவை  பல்வேறு நபர்களாலும் "கீ வேர்ட் சர்ச்"மூலமாகவும் வகைப்படுத்தப் படுகின்றன. எனவே சரியான வரிசைப்படுத்தவது என்பது மிக  முக்கியம்.

சென்னைப் பல்கலையின் இலவச கல்வித் திட்டம்


சென்னைப் பல்கலைக்கழகம் செயல்படுத்திவரும் இலவச கல்வித் திட்டத்தில் சேர்ந்து பயன்பெறுவதற்கு, மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வரும் கல்வியாண்டில், சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களிலுள்ள சென்னைப் பல்கலை இணைப்புக் கல்லூரிகளில்(அரசு உதவிபெறும் மற்றும் சுயநிதி) இத்திட்டத்தின் கீழ், இளநிலைப் படிப்புகளில் சேர்ந்து பயன்பெறலாம். மேற்கண்ட 3 மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே இத்திட்டம் பொருந்தும்.
ஆதரவற்ற மாணவர்கள், விவசாய கூலிகளின் பிள்ளைகள், முதல் தலைமுறையாக பட்டப் படிப்பில் சேருபவர்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்களின் பிள்ளைகள் ஆகியோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
விருப்பமுள்ளோர், பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான 15 நாட்களுக்குள், விண்ணப்பத்தை, பல்கலை பதிவாளர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
விரிவான அனைத்து தகவல்களுக்கும் www.unom.ac.in

ஈஸியா படிக்கலாம் எம்பிபிஎஸ்....

ஈஸியா படிக்கலாம் எம்பிபிஎஸ்!


ரஷ்யா மற்றும் கிரிகீஸ் குடியரசில் உள்ள அரசு மருத்துவ பல்கலைக்கழகங்கள் இந்திய மருத்துவ கழகம் மறம் உலக சுகாதார நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்றது. இங்கு பயில்வதற்கு தேவையான கல்வித் த-குதி மேல்நிலைப் பள்ளிக் கல்வியில் வேதியியல், இயற்பியல் மற்றும் உயிரியல் பாடங்களில் 50% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

இந்திய மருத்துவக் கழக கோரிக்கைப்படி, வெளிநாடுகளில் மருத்துவம் பயின்ற மாணவர்கள் இந்தியாவின் முதல் கட்டத் தேர்வான "ஸ்கிரீனிங் டெஸ்ட்" தேர்ச்சி பெற்று அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றுகின்றனர் மேலும் சில மருத்துவர்கள் ஆராய்ச்சி துறையிலும் சாதித்து வருகின்றனர்.

ராணுவ மருத்துவ கல்லூரியில் எம்பிபிஎஸ் இலவச படிப்புடன் வேலை.........

ராணுவ மருத்துவ கல்லூரியில் எம்பிபிஎஸ் இலவச படிப்புடன் வேலை புனேயிலுள்ள ராணுவ மருத்துவக்கல்லூரியில் (AFMC) MBBS படிப்பிற்கான முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். எம்பிபிஎஸ் படிப்பை முடித்தவர்கள் இந்திய ராணுவ மருத்துவமனைகளில் டாக்டராக பணியமர்த்தப்படுவர்.

பணி:

எம்பிபிஎஸ். கால அளவு:4½ வருடம் படிப்பு மற்றும் ஒரு வருடம் பயிற்சி (internship).

மொத்த இடங்கள்:

130. ஆண்கள்-105. பெண்கள்-25.

அரசு பணியில் இருப்போர், இடமாற்றம் பெற, நான்கு லட்சம் ரூபாய் கொடுக்கின்றனர். 14.40 லட்சம் அரசு ஊழியர்கள் உள்ளனர்.இவர்களில், 10 சதவீதம் பேர், ஆண்டுதோறும் இடமாற்றம் கேட்டால், ஆண்டுக்கு, 4,320 கோடி ரூபாய், அரசு ஊழியர்கள் இடமாற்றத்திற்கு, லஞ்சமாக கொடுக்க வேண்டி உள்ளது.டிரைவர் பணிக்கு, 1.75 லட்சம்; ஆசிரியர் பணிக்கு, 7 லட்சம்

'பினாமி அரசு, செயல்படாத அரசு, பொம்மை அரசு, ஆலோசகர் அரசு' என, பல பெயர்களை பெற்றுள்ள, தமிழக அரசுக்கு புதிதாக, தற்போது, '45 சதவீத அரசு' என்ற பெயர் கிடைத்துள்ளது.

பொதுப்பணித் துறையில், எந்த பணி செய்வதாக இருந்தாலும், ஒப்பந்தத் தொகையில், 45 சதவீதத்தை, கமிஷனாக கொடுக்க வேண்டி உள்ளது என, ஒப்பந்ததாரர்கள் கூறிய குற்றச்சாட்டு, தமிழகத்தை உலுக்கி உள்ளது.கமிஷனாக, 45 சதவீதம் கொடுத்தால், வேலை தரம் எப்படி இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.'பொதுப்பணித் துறையில் ஊழல் அதிகம் வாங்குவோர் பெயர் பட்டியலை வெளியிடுவோம்' என, பொதுப்பணித் துறை பொறியியல் ஒப்பந்ததாரர்கள் சங்கம் அறிவித்துள்ளது.இது குறித்து, 'தினமலர்' நாளிதழில், நேற்று முன்தினம் விரிவான செய்தி வெளியானது.

இதை படித்த, அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் தன், 'முகநுாலில்' எழுதி இருப்பதாவது:
என்ன ஒரு வெட்கக்கேடு? கீழ் மட்டத்தில் இருந்து, மேல் மட்டம் வரை, ஊழல் என்பது வாழ்க்கை முறையாக மாறியுள்ளது. அனைத்து வகையான வேலைகளுக்கும், 'டெண்டர்' எடுப்போர், 45 சதவீதம் கமிஷன் கொடுப்பதை, செய்திகள் வெளிப்படுத்தி உள்ளன.இவ்வளவு கமிஷன் கொடுப்பவர்கள், எப்படி நல்ல உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்க முடியும்? பொதுப்பணித் துறை மற்றும் இதர துறைகள் மூலம் கட்டப்படும், கட்டடம், பாலம், சாலை போன்றவை எப்படி தரமாக இருக்கும்?தமிழக அரசின் மொத்த பட்ஜெட் தொகை, 1.42 லட்சம் கோடி ரூபாய். இதில், 40 ஆயிரம் கோடி ரூபாய், உட்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக ஒதுக்கப்படுகிறது. இதில், 18 ஆயிரம் கோடி ரூபாய், கீழ்மட்டத்தில் இருந்து, மேல் மட்டம் வரை, ஊழல் பணமாக செல்கிறது. பட்ஜெட்டில், 41,215.57 கோடி ரூபாய், அரசு ஊழியர் சம்பளத்திற்காகவும், 18,667.86 கோடி ரூபாய், ஓய்வூதியம் மற்றும் இதர சலுகைகளுக்காக ஒதுக்கப்படுகிறது. இது அரசின் மொத்த வருவாய் செலவில், 40.65 சதவீதம்.இத்தொகை, மக்கள் செலுத்தும் வரிகள் மூலம் வருகிறது. துாய்மையான நிர்வாகத்தை தருவதற்காகவும், தரமான சேவையை வழங்கவும், வரி செலுத்துகிறோம்.

'தினமலர்' நாளிதழில் வெளியான செய்தியில், 45 சதவீதம் கமிஷன் தொகை, அதிகார மட்டத்திற்கு செல்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது. நாம் செலுத்தும் வரிப்பணம், ஊழலுக்காக செலவிடப்படுவது, வெட்கப்பட வேண்டிய விஷயம்.நடப்பாண்டு பட்ஜெட்டில், மானியம் வழங்குவதற்காக, 59,185.47 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டள்ளது. இதில், 11,837 கோடி ரூபாய் (20 சதவீதம்) ஊழல் நடைபெற வாய்ப்புள்ளது.நடப்பாண்டு பட்ஜெட்டில், இலவச லேப் - டாப், கிரைண்டர், மிக்சி, மின்விசிறி வழங்க, 10,364.02 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், 3,109 கோடி ரூபாய் (30 சதவீதம்) ஊழல் நடைபெற வாய்ப்புள்ளது.மூலதன செலவு, 2014 - 15ம் ஆண்டு திருத்தப்பட்ட மதிப்பீட்டில், 23,808.96 கோடி ரூபாயாக இருந்தது. இத்தொகை, நடப்பு பட்ஜெட்டில், 27,213.17 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. வளர்ச்சி விகிதம், 14.30 சதவீதம்.மூலதன செலவில், 10,713 கோடி ரூபாய் (45 சதவீதம்) ஊழல் நடைபெற வாய்ப்புள்ளது. இவற்றின் மூலம் மட்டும், கடந்த ஆண்டு, 25,659 கோடி ரூபாய், ஊழல் நடந்திருக்க வாய்ப்புள்ளது. இது, 17.98 சதவீதம் ஆகும்.

இதன் காரணமாகத்தான், அரசியலில் நுழையவும், அரசு பணிக்கு செல்லவும், பலத்த போட்டி ஏற்பட்டுள்ளது.ஆனால், மக்கள் ஏழைகளாக உள்ளனர். அரசியல் கட்சியினர், பொதுமக்களுக்கு கட்சி மீது உள்ள பற்று, ஜாதி மற்றும் பணத்தின் மூலம், எளிதாக வெற்றி பெற்று விடலாம் என, நினைக்கின்றனர்.ஆனால், 60 சதவீதம் இளைஞர்கள் மற்றும் பொதுவான மக்கள், நடுத்தெருவில் நிற்கின்றனர். அவர்கள் தினசரி வாழ்க்கையை எவ்வாறு நடத்துவது எனத் தெரியாமல் தவிக்கின்றனர்.பத்திரிகைகளில் வந்த செய்தி அடிப்படையில், 1.92 லட்சம் பொறியியல் பட்டதாரிகள், 4 லட்சம் இதர பட்டதாரிகள், ஆண்டுதோறும் வேலை இல்லாமல் தவிக்கின்றனர்.அனைவரும் இளைஞர்கள். அவர்கள் எங்கே செல்வர்? நீர், எரிசக்தி, வேளாண்மை, உணவு பதப்படுத்துதல், தொழிற்சாலை மற்றும் சேவை நிறுவனங்களில், எவ்வித முன்னேற்றமும் இல்லை.புதிய தொழிற்சாலைகள் இல்லை. ரியல் எஸ்டேட் மற்றும் கட்டடத் தொழில், சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

டாக்டர் படிப்புக்கான 'சீட்' பெற, தனியார் மருத்துவக் கல்லுாரிகளில், ஒரு 'சீட்,' 1 கோடி ரூபாய்க்கு விற்கப்படுகிறது; எம்.டி., 'சீட்,' 3 கோடி ரூபாய்.அரசு பணியில் இருப்போர், இடமாற்றம் பெற, நான்கு லட்சம் ரூபாய் கொடுக்கின்றனர். தமிழகத்தில், ஓய்வூதியர்கள் உட்பட, 18 லட்சம் அரசு ஊழியர்கள் உள்ளனர்.இவர்களில், ஓய்வூதியம் பெறுவோர், 3.60 லட்சம் என எடுத்துக் கொண்டால், 14.40 லட்சம் அரசு ஊழியர்கள் உள்ளனர்.இவர்களில், 10 சதவீதம் பேர், ஆண்டுதோறும் இடமாற்றம் கேட்டால், ஆண்டுக்கு, 4,320 கோடி ரூபாய், அரசு ஊழியர்கள் இடமாற்றத்திற்கு, லஞ்சமாக கொடுக்க வேண்டி உள்ளது.டிரைவர் பணிக்கு, 1.75 லட்சம்; ஆசிரியர் பணிக்கு, 7 லட்சம்; கல்லுாரி விரிவுரையாளர் பணிக்கு, 20 லட்சம்; துணைவேந்தர் பணிக்கு, 3 முதல் 7 கோடி ரூபாய் வரை, லஞ்சமாக பெறப்படுகிறது.இந்த பட்டியல் நீண்டபடி செல்கிறது. இதுகுறித்து சிந்தித்தால், எதிர்காலம் பயங்கரமாக காட்சி அளிக்கிறது.அதேநேரம், அரசு கடன் சுமை அதிகரித்தபடி உள்ளது. தற்போது, 2.11 லட்சம் கோடி ரூபாய் கடன் உள்ளது. ஒவ்வொருவர் தலையிலும், 30 ஆயிரம் ரூபாய் கடன் உள்ளது.நடப்பாண்டு, 30,446.68 கோடி ரூபாய், கடன் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த மார்ச், 31ம் தேதி வரை, 2.11 லட்சம் கோடி ரூபாய் கடன் உள்ளது. நடப்பாண்டு பட்ஜெட் பற்றாக்குறை, 4,616.02 கோடி ரூபாய்.
லஞ்சம் கொடுத்து, வேலை பெற்றவரால், அரசுக்காக, மக்களுக்காக சேவை செய்ய முடியாது. அவரது மனம், கொடுத்த பணத்தை திரும்ப எடுப்பதிலேயே செல்லும். இதனால் பாதிக்கப்படுவது பொதுமக்கள்.பாதிக்கப்படும் மக்கள் அனைவரும், ஒவ்வொரு தேர்தலிலும், ஓட்டு போடுகின்றனர். வெற்றி பெறும் கட்சி, தங்கள் வாழ்க்கையை முன்னேற்றும் என நம்புகின்றனர்.பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. அவர்களுக்கு என்ன மாதிரியான வேலைவாய்ப்பை ஏற்படுத்தி உள்ளோம். உயர்கல்வி வாய்ப்பை எப்படி வழங்க உள்ளோம். எங்கும் ஊழல் நிறைந்திருந்தால், அவர்களுக்கு எப்படி தரமான வாழ்க்கையை அளிக்க முடியும்?இவற்றை அலசி பார்த்தால், சில கேள்விகள் நம் மனதில் எழுகின்றன. அதற்கு விடைகளை கண்டறிய வேண்டும்.அடுத்த ஆண்டு, தேர்தல் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எந்த கட்சி, ஊழலற்ற வெளிப்படையான நிர்வாகத்தை தருவதாக அறிவிக்கிறது என, பார்க்க வேண்டும்.எந்த கட்சி, வேலைவாய்ப்புக்கான சூழலை ஏற்படுத்துவதாக உறுதி அளிக்கிறது என, பார்க்க வேண்டும்.எந்த கட்சி, நதிகளை இணைப்பதாகவும், வேளாண்மை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதாகவும், தொழிற்சாலைகளை உருவாக்குவதாகவும், மின்சக்தியை அதிகரிப்பதாகவும் கூறுகிறது என, பார்க்க வேண்டும்.இளைஞர்களே... இந்த கேள்விகளை, உங்களுக்குள் கேட்டுப் பாருங்கள்! உங்கள் நண்பர்கள் மற்றும் பெற்றோருடன் விவாதியுங்கள்! எந்த கட்சி, லோக்பால் சட்டத்தை அமல்படுத்தும்; தரமான சேவையை அளிக்க தயாராக உள்ளது யார்; ஊழலற்ற நிர்வாகத்தை தரும் மாற்று யார் என, சிந்தியுங்கள்!இவ்வாறு, பொன்ராஜ் தெரிவித்துள்ளார்.

தி.மு.க., துணைப் பொதுச் செயலர் துரைமுருகன்:

பொதுப்பணித் துறை மட்டுமல்ல; நெடுஞ்சாலைத் துறை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும், கமிஷன் பெறுவது, அ.தி.மு.க., ஆட்சியில் சகஜமாகி விட்டது. திட்டப் பணிகளுக்காக, கமிஷன் பெற்றால், அந்த பணிகள் முழுமை பெறாது. கட்டடப்பணி, எர்த் பணி, துார்வாரும் பணிகளில் கமிஷன் கொடுத்தால், தரம் வாய்ந்த பணிகளாக நிறைவு பெறாது.துார்வாரும் கான்ட்ராக்டர்கள் மண் அள்ளும் இயந்திரத்திற்கு வாடகை தர வேண்டும்; பணியாளர்களுக்கு கூலி தர வேண்டும். கமிஷனை கொடுத்து விட்டால், மற்ற பணிகளை எப்படி செய்து முடிக்க முடியும்? அதனால் தான் அனைத்து பணிகளிலும் தரம் கெட்டு காணப்படுகிறது.

ஞானதேசிகன், த.மா.கா., மூத்த தலைவர்:

கமிஷன் வாங்கும், கொடுக்கும் குற்றச்சாட்டுக்களை தடுக்கத் தான், த.மா.கா., பொதுக்குழுவில் லோக்பால், லோக் ஆயுக்தா சட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றினோம். கையூட்டு, கமிஷன் போன்ற குற்றச்சாட்டுகள் வராமல் இருக்க, மாநிலத்திலும் லோக் ஆயுக்தா அமைப்பை கொண்டு வர வேண்டும். அப்போது தான் குற்றச்சாட்டுகள் வராமல் இருக்கும். லஞ்சம் பெறுவதையும், கொடுப்பதையும் கட்டுப்படுத்த முடியும்.

ஜி.ராமகிருஷ்ணன், மார்க்.கம்யூ., கட்சி மாநில செயலர்:

பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை, உள்ளாட்சி துறை கான்ட்ராக்டர்களிடம், கமிஷன் பெறுவது நீக்கமற இருக்கிறது. ஊழல் நடக்காமல் இருக்க, லஞ்சம் கொடுத்தாலும் குற்றம், வாங்கினாலும் குற்றம் என்ற அச்சத்தை உணர்த்தும், லோக் ஆயுக்தா சட்டத்தை, சட்டசபையில் நிறைவேற்றி, மாநில அரசு அமல்படுத்த வேண்டும்.

விஜயதாரணி, காங்கிரஸ் எம்.எல்.ஏ.,:

தமிழகத்தில் உள்ள அனைத்து துறைகளிலும், ஊழல் உச்சக்கட்டம் அடைந்துள்ளது. மக்கள் வரிப் பணம், மக்கள் நலத்திட்டத்திற்கு சென்றடைவதில்லை.மக்கள் வரிப்பணம், தனிநபர்களை சென்றடைவதால், அவர்கள் பணக்காரர்களாக உருவாகி வருகின்றனர். நல்ல அரசு நடந்தால், அதிகாரிகளுக்கு எந்த நிர்ப்பந்தமும் இருக்காது; ஊழல் செய்ய 'செக்' வைக்கப்படும்.ஆனால், அமைச்சர்களின் நிர்ப்பந்தத்தினால், ஊழல் நடக்கிறது. அதிகாரிகளும் அதற்கு துணை போகின்றனர். நேர்மையான அதிகாரிகளும் உள்ளனர்.அவர்களை, செயல்பட முடியாத வகையில் அழுத்தம் தரப்படுகிறது. ஓட்டு அளித்த மக்களுக்கு, நல்ல ரோடு வசதியை செய்து கொடுக்க, ஆட்சியாளர்கள் முன்வருவதில்லை. தமிழகத்தில் நடப்பது, மக்கள் ஆட்சியா அல்லது ஊழல் ஆட்சியா என்ற கேள்வி எழுந்துள்ளது.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

பின்வாங்கிய ஒப்பந்ததாரர்கள்:

பொதுப்பணித் துறை பொறியியல் ஒப்பந்ததாரர்கள் சங்க நிர்வாகிகள், அதிக லஞ்சம் வாங்கிய, 10 அதிகாரிகள் குறித்து, சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள, ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்பு பிரிவில், புகார் செய்ய முடிவு செய்தனர்.இதற்காக, சங்க நிர்வாகிகள் கையெழுத்திட்ட, புகார் கடிதம் தயாரிக்கப்பட்டது. சங்கத் தலைவர் குணமணி, செயலர் பிரகாஷ், பொருளாளர் குமார், தொழில்நுட்ப ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் அங்கு சென்றனர்.அதிகாரிகள் அவர்களை, மொபைல்போனில் அழைத்து, மாலை, 6:00 மணிக்குள், பிரச்னையை தீர்ப்பதாக உறுதி அளித்தனர். அதை ஏற்று, ஊழல் ஒழிப்பு பிரிவில் புகார் கொடுக்கும் திட்டத்தை, அவர்கள் கைவிட்டனர். இதனால், இப்பிரச்னையில் சிக்கிய, அரசியல் பிரமுகர்கள் மற்றும் அதிகாரிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.

- நமது நிருபர் குழு -

G.K.VASAN NEWS


பொது மாறுதல் கலந்தாய்வு தாமதம் பள்ளி ஆசிரியர்கள் ஏமாற்றம்





BT to PG Promotion Panel

பட்டதாரி ஆசிரியர் பதவியிலிருந்து முதுகலை ஆசிரியர் பதவி உயர்விற்கான முன்னுரிமைப்பட்டியல் (01.01.2015 நிலவரப்படி) (தமிழ, ஆங்கிலம், வேதியியல், தாவரவியல், விலங்கியல். இயற்பியல், கணிதம், வணிகவியல், புவியியல், அரசியல் அறிவியல், உடற்கல்வி இயக்குநர் நிலை-1)

CLICK FOR      TAMIL....                        ENGLISH CM & SM.. . ...       
                    MATHS.....                   PHYSICS.......              
                  CHEM,BOT,ZOO....          POL.SCIENCE CM.....
                  GEOGRAPHY CM...        GEOGRAPHY SM....  
                   COMMERCE CM....         COMMERCE SM......
                     PHY.DR I.......  

அழைப்பு-வாருங்கள் பிச்சாவரத்திற்கு!...


பிச்சாவரத்தில் சுற்றுலாவை ஊக்குவிக்கும் பொருட்டு ஒவ்வொரு வருடமும் கடலூர் மாவட்ட நிர்வாகத்தால் 'விடியல் விழா' கொண்டாடப்படுகிறது.
இந்த விழாவின் போது நாம் இந்த பகுதியில் காலம் காலமாக வசித்து வரும் இருளர் பழங்குடிகள் நண்டு மற்றும் இறால் பிடிக்கும் நுட்பத்தை காணலாம். படகுகளில் மிதந்தபடியே நடக்கும் நாட்டுப்புற இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளை பார்த்து ரசிக்கலாம்
இரவு பரிமாறப்படும் சுவையான கடல் உணவுகளை சாப்பிடலாம், அதிகாலையில் எழுந்து கண்கள் மகிழ சூரிய உதயத்தையும், பறவைகளையும் காணலாம்.
பிச்சாவரம் செல்ல உகந்த நேரம்:
செப்டம்பர் முதல் ஏப்ரல் வரையிலான காலம் பிச்சாவரம் வர உகந்ததாக இருக்கிறது. அதிலும் நவம்பர் முதல் ஜனவரி வரையிலான காலத்தில் இங்கு பறவைகள் மிக அதிக அளவில் புலம்பெயர்ந்து வருவதால் அந்த மாதங்களில் இங்கே நிச்சயம் சென்று வாருங்கள்.
எப்படி அடைவது: தேசிய நெடுஞ்சாலை எண் 45A-ல் அமைந்துள்ளதால் கடலூரை சாலை வழியே எளிதில் அடைந்து விட முடியும். அருகிலுள்ள நகரங்களான சென்னை, சேலம், திருச்சி, கோவை மற்றும் திருவண்ணாமலை ஆகிய நகரங்களிலிருந்து பேருந்துகள் கடலூருக்கு எப்பொழுதும் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் பெங்களூரிலிருந்தும் சில பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. எங்கு தங்குவது: கடலூர் மாவட்டத்தில் குறைந்த விலையில் நல்ல வசதிகளுடன் கூடிய அறைகள் வாடகைக்கு கிடைக்கின்றன. கடலூரில் இருக்கும் ஹோட்டல்கள் பற்றிய விவரங்களை இங்கே அறிந்து கொள்ளுங்கள்.
cuddalore, nature, ecotourism, tamil nadu English summary Pichavaram Mangrove forest - A natural wonder in Tamil Nadu Pichavaram Mangrove forest is a natural wonder in Tamil Nadu.It is the Second largest mangrove forest in the world. Lets take a one day trip to Pichavaram.

நெல்லை மாவட்டத்தில் ''நிர்வாக பணி மாறுதல் ''ஊழல் -தடுப்பு காவல் துறை 02.05.2015 ல் விசாரணை ;-

நெல்லை மாவட்டத்தில் கடந்த 2010 முதல் பெரும்பாலும் காலிப்பணியிடங்கள் பொது மாறுதல் கலந்தாய்வில் காட்டப்படுவது இல்லை பல பணியிடங்கள் ''நிர்வாக பணி மாறுதல் '' என்ற பெயரில் 7 இலச்சம் வரை பெற்றுக்கொண்டு நிரப்பி விடுகிறார்கள் .இதனால் பலர் பாதிக்கப்பட்டனர் இதை தடுக்கவும் நேர்மையான முறையில் அனைத்து பணியிடங்களும் நிரப்ப பட டாட்டா சங்கம் மட்டுமே போராடி வருகிறது.நாங்கள் தான் பெரிய சங்கம் என்பவர்கள் எல்லாம் சில பணியிடங்களை பெற்றுக்கொண்டு எந்த ஊழலை கண்டு கொள்வது இல்லை .
இதற்கு நிரந்தர முடிவு கட்டப்பட ஊழல் தடுப்பு காவல் துறை விசாரணை வேண்டி பல முறை ஆதரங்களுடன் புகார் கொடுக்கப்பட்டது .மேற்படி புகார் படி 2010 க்கு பின் மாவட்ட தொடக்க கல்வி அலுவலராக பணி செய்த ( 4 ) அனைவர் மற்றும் அலுவலக பணியாளர்கள் 3 மீதும் FIR பதிவு செய்திட Crl.OP.(MD) NO.17068/2014 .மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு பதிவு செய்து வழக்கு நடத்தி வருவதன் பயனாக தற்போது விசாரணைகள் உச்ச கட்ட நிலையை அடைந்து உள்ளது .தொடக்க கல்வி இயக்குனர் அவர்களின் ஆணை படி கடந்த 23.4.2015 மற்றும் 24.4.15 ஆகிய நாள்கள் நெல்லை DEEO அலுவலகத்தில் வைத்து இணை இயக்குனர் தலைமையில் நடைபெற்றது .மறுபக்கம் ஊழல் தடுப்பு காவல் துறை விசாரணைநடந்து வருகிறது வருகிற 02.05.2015 அன்று காவல் துறையிடம் ஆஜர் ஆகி ஆதரங்களை சமர்பிக்க டாட்டா பொது செயலாளர் கிப்சன் அவர்களுக்கு அழைப்பு கொடுக்கப்பட்டு உள்ளது.ஏற்கனவே கடந்த 23.04.2015 அன்று  இணை இயக்குனர் அவர்களிடம் நேரில் ஆஜர் ஆகி கிப்சன்அவர்களால் 140 பக்கம் கொண்ட சட்ட ஆவணங்கள் ஊச்ச நீதிமன்ற தீர்ப்புகள் அரசு ஆணைகள் மற்றும் 640 நிர்வாக மாறுதல் ஆணைகள் சமர்பிக்கப்பட்டு உள்ளது .மேற்படி இதே ஆதாரங்கள் ஊழல் தடுப்பு காவல் துறை விசாரணையில் கொடுக்கப்பட உள்ளது .
    டாட்டா சங்கத்தின் பெரிதான முயற்சியால் கடந்த வருங்காலங்களில் நேர்மையான முறையில் கலந்தாய்வு நடை பெற ஊழலை எதிர்க்கும் ஆசிரியர்கள் டாட்டா சங்கத்திற்கு தோல் கொடுக்க அழைக்கிறோம் .நாங்கள் தான் பெரிய சங்கம்என்பவர்களால் ஏன் மேற்படி ஊழலை ஒழிக்க முடிய வில்லை சிந்தியுங்கள் -???? 

சேம நல நிதி - பொது வைப்பு நிதி - 2015-16ம் நிதியாண்டிற்கான வட்டி விகிதம் 8.7% நிர்ணயித்து தமிழக அரசு உத்தரவு

GO.129 FINANCE (ALLOWANCES) DEPT DATED.27.04.2015 - PROVIDENT FUND– General Provident Fund (Tamilnadu) – Rate of interest for the financial year 2015-2016 – Orders Click Here...

 நிதி துறை - படிகள் - பழைய ஊதிய விகிதத்தில் அகவிலைப்படி - 01.01.2015 முதற்கொண்டு உயர்த்தப்பட்ட அகவிலைப்படி வீதம் - ஆணைகள் - வெளியீடு

இணை. இயக்குனர்கள் பதவி உயர்வு மற்றும் இடமாறுதல்

முதன்மை கல்வி அதிகாரி அந்தஸ்தில் நிதி அமைச்சரிடம் தனி அதிகாரியாக பணிபுரிந்த பாஸ்கர சேதுபதி இணை இயக்குனர் (தொழில்கல்வி) ஆக பதவி உயர்வு பெற்றார். சேலம் முதன்மை கல்வி அதிகாரி செல்வக்குமார், மதுரை பிற்பட்டோர் மற்றும் கள்ளர் சீரமைப்பு துறை இணை இயக்குனராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.


*திருவண்ணாமலை முதன்மை கல்வி அதிகாரி பொன்னையா பதவி உயர்வு பெற்று இணை இயக்குனர் (நாட்டு நலப்பணி திட்டம்) ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

*நாட்டு நலப்பணித்திட்ட இணை இயக்குனர் உஷாராணி அனைவருக்கும் கல்வி திட்ட இணை இயக்குனராக மாற்றப்பட்டார்.
*அனைவருக்கும் கல்வி திட்ட இணை இயக்குனர் குப்புசாமி மாற்றப்பட்டு அரசு தேர்வுகள் இணை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

*பள்ளிச்சாரா வயது வந்தோர் கல்வி இயக்க இணை இயக்குனர் சுகன்யா நூலக இணை இயக்குனர் கூடுதல் பொறுப்பையும் கவனிப்பார்.

இந்த தகவலை பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.

பள்ளிக்கல்வி - 01.01.2015 நிலவரப்படி இடைநிலை/சிறப்பாசிரியர் பதவியிலிருந்து பட்டதாரி ஆசிரியர் (ஆங்கிலம்) பதவி உயர்விற்கு தகுதிவாய்ந்தோர் பட்டியல் வெளியிடுதல்

 
 

பள்ளிக்கல்வி - 01.01.2015 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பதவியிலிருந்து முதுகலை ஆசிரியர் பதவி உயர்விற்கான முன்னுரிமைப் பட்டியல்

DSE - BT TO PG ASST PANEL (TAMIL) AS ON 01.01.2015 CLICK HERE...

DSE - BT TO PG ASST PANEL (ENGLISH) AS ON 01.01.2015 CLICK HERE...

DSE - BT TO PG ASST PANEL (CHEMISTRY / BOTANY / ZOOLOGY) AS ON 01.01.2015 CLICK HERE...

DSE - BT TO PG ASST PANEL (PHYSICS) AS ON 01.01.2015 CLICK HERE...

 

RMSA KH மற்றும் BC தலைப்பின் கீழ் நிதி ஒதுக்கீடு (மாவட்ட வாரியாக) விவரம்

RMSA KH HEAD ALLOTMENT GO

PAGE 1 

PAGE2

RMSA KH HEAD ALLOTMENT PARTICULARS ALL DISTRICTS

PAGE1 

PAGE 2



RMSA BC HEAD ALLOTMENT GO

PAGE1 

PAGE2

RMSA BC HEAD ALLOTMENT PARTICULARS ALL DISTRICTS

PAGE1 

PAGE2
ஜனநாயகத்தின் நாற்றுகளை 'உற்பத்தி' செய்யும் அரசுப் பள்ளிகள் - மார்ச் 2, தி இந்து இணையத்தில் வெளியான கட்டுரை.
----------------------------------------------------------------------------------------------
'தி இந்து' தமிழ் இணையதளத்தில் பிப்ரவரி 27-ல் வெளியான மாணவர்களை அரசுப் பள்ளிகள் "உற்பத்தி" செய்வது எப்படி? என்ற கட்டுரையை வாசித்தேன்.
ஒட்டுமொத்த சமூக அமைப்பின் யதார்த்தமான சமூக, அரசியல், பொருளாதார அவலங்கள் அனைத்தையும் சமூக அமைப்பின் ஒரு சிறு நிறுவனமான அரசுப் பள்ளியின் கல்வி முறையின் விளைபொருள் என்று எழுதுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

ஆசிரியைகள் சேலையுடன், மேலங்கி (வழக்கறிஞர் கோட் போல) அணிந்து வர வேண்டும்.

வரும் கல்வியாண்டு முதல், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு
உடை கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது. மேலும், பள்ளிக்கு மொபைல் போன் எடுத்து வரவும் தடை விதிக்க, பள்ளிக் கல்வித் துறை
திட்டமிட்டுள்ளது.

அரசுப்பள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க தேவையான சான்றிதழும், பாடத்திட்டமும்.

காலிப்பணியிடம் : 4360 
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி
அடிப்படைஊதியம் விகிதம் : 5,200- 20,200 ..
தர ஊதியம் - 2400.
தேவைப்படும் சான்றிதழ் :
*பத்தம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்

*சாதிச்சான்றிதழ்
*முன்னாள் இராணுவத்தினர் , மாற்றுத்திறனாள் சான்றிதழ் ( இருப்பின்)
*பணு அனுபவ சான்றிதழ் இருப்பின் ( மாவட்ட்க்கல்வி அலுவலரால் அங்கீகரிக்கப்பட்டது மட்டும்)
* மாவட்ட வேலைவாய்ப்பக அடையாள அட்டை
*தமிழ்வழி முன்னுரிமை சான்றிதழ்
வயதுவரம்பு: *எஸ்.ஸி 18 முதல் 35
*பி.சி,எம்.பி.சி 32,
*.சி 30
தேர்வுக்கட்டனம் - 100 rs( எஸ்.சி,எஸ். சி. விலக்கு)
சேவைக்கட்டணம் -50rs அனைவருக்கும்

பாடத்திட்டம் : 120 அறிவியல் கொள்குறி வகை வினாக்கள் ( பத்தாம் வகுப்பு தரம் ) 30 பொது அறிவு வினாக்கள் - மொத்தம் 150
 

அரசுப்பள்ளி ஆய்வக உதவியாளர் மாவட்டவாரியாக காலிப்பணியிட விவரம்

Tamil Nadu District Wise
Thiruvallur – 179
Salem - 176
Chennai – 33
Dharmapuri – 173
krishnagiri – 208

Coimbatore – 105
Nilagiri – 081
Tirupur – 141
Cuddalore - 166
villupuram – 317
Theni - 65
Dindigul – 96
Erode – 147
Madurai – 52
Ramanathapuram – 106
sivagangai – 105
Kanyakumari  - 94
TirunelVeli - 108
Nagapattinam – 138
Thanjavur – 167
Ariyalur – 87
Karur – 84
Pudukkottai – 170
Tiruchirapalli – 144
perambalur – 41
Vellore -286
Other District in Tamil Nadu – 1067 ( Other District List of Post Notification Available Soon)
Educational Qualifications: 10th Pass

23.4.15 இன்றைய -செய்திகள்: வழங்குவது -VOICE OF TATA.




📚தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 6 சதவிகித அகவிலைப்படி உயர்வு.
📚Direct Recruitment of Senior Lecturers in DTERT / DIET - 2010 - 11
📚அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 6% அகவிலைப்படிஉயர்த்தி தமிழக அரசு உத்தரவு- அரசு ஆணை
📚சத்துணவு சமையல் உதவியாளருக்கு ரூ.300 முதல் ரூ.400 வரை சம்பள உயர்வு அரசுக்கு சத்துணவு ஊழியர்கள் நன்றி
📚அரசு பள்ளிக்கூடங்களுக்கு ஆய்வக உதவியாளர் 4360 பேர் எழுத்துத்தேர்வு மூலம் நியமனம் 24–ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம்
📚பிளஸ்1 தேர்வு முடிவு வரும் முன்பு பிளஸ் 2 தொடக்கம் அரசு பள்ளிகளிலும் கோடை சிறப்பு வகுப்புகள்
📚முதியோர் உதவிக்கான விதிகளை தளர்த்தியது அரசு: வாரிசு இருந்தாலும் உதவி கிடைக்கும்
📚ஏ.டி.எம்.,மில் பணம் வரவில்லையா? வங்கி அபராதம் அளிக்கும்
📚பெயிலானால் தற்கொலை முடிவுக்கு போகாதீர்கள் மாணவ-மாணவிகளுக்கு பெண் போலீசார் விழிப்புணர்வு
📚அரசுப்பள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க தேவையான சான்றிதழும், பாடத்திட்டமும்.
📚பகுதிநேர சிறப்பாசிரியர்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு...
📚பி.எட். அட்மிஷன் நடைமுறைக்கு அரசு அனுமதி அளிப்பதில் சிக்கல் படிப்பு காலம் இன்னும் முடிவு செய்யப்படாததால் பிரச்சினை
📚பள்ளிகளுக்கு இன்று முதல் கோடை விடுமுறை.
📚10ம் வகுப்பு தேர்வில் போனஸ் மதிப்பெண்
📚சத்துணவு ஊழியர் போராட்டம் வாபஸ் ஏன்
சத்துணவு சமையல் உதவியாளருக்கு ரூ.300 முதல் ரூ.400 வரை சம்பளஉயர்வு அரசுக்கு சத்துணவு ஊழியர்கள் நன்றி

📚அலைபேசி மூலம் முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்: இன்று முதல் நாடு முழுவதும் அறிமுகம்
📚விருதுநகர் மாவட்ட பள்ளிகளில் ஆய்வாக உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
📚இன்று உலக புத்தக தினம்.

G.O - 121 நிதித்துறை : 6% அகவிலைப்படி உயர்வுக்கான அரசானை வெளியீடு....

66A சட்டம் 8 நிகழ்வுகளுக்கு பொருந்தும் அதில் ஒன்று நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்கை பற்றி நீதிமன்றத்துக்கு அவமதிப்பு ஏற்படும் வகையில் கருத்துக்களை பதிவிட்டால் 66A படி தண்டிக்கப்படுவர் 
சில சங்கத்தினர் நம் ஊதிய வழக்கை பற்றி விமர்சித்து பதிவிட்டால் நாம் அவர்கள் மீதுவழக்கு தொடரலாம் அல்லது காவல் துறை மூலம் நடவடிக்கை எடுக்க முடியும் .
இன்று (21-04-2015 )டாட்டா வின் 3ம் ஊதிய வழக்கு மதுரை உயர் நீதி மன்றம் கிளையில் W.P (MD)No; 5301/2015. -ல் 31 வது வழக்காக நீதிபதி திரு .வைத்தியநாதன் அவர்கள் முன்னிலையில் விசாரணை க்கு வந்தது .அரசு வழக்கறிஞர் 4 வாரம் கூடுதல் அவகாசம் கேட்டு மனு தாக்கல் செய்தார் .நமது மூத்த வழக்கறிஞர் திரு .அஜ்மல் கான் அவர்கள் ஆஜர் ஆகினார்கள் .நீதிபதி 4 வாரம் வழங்க முடியாது என கூறி நீதிமன்றம் விடுமுறை முடிந்ததும் வருகிற ஜுன் மாதம் முதல் வாரத்திற்கு வழக்கை ஒத்திவைக்கப்பட்டது-டாட்டா கிப்சன் 9443464081.
2004 முதல் 2006 வரை தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களின் பணிக்காலத்தை முறையான பணிக்காலமாக அறிவிக்க வேண்டி சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளையில் வழக்குகள்.
2004 முதல் 2006 வரை தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களின் பணிக்காலத்தை முறையான பணிக்காலமாக அறிவிக்க வேண்டி சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளையில் வழக்குகள் பதியப்பட்டுள்ளது.
இவ்வழக்குகளை
க.பரமத்தி ஒன்றிய ஆசிரியர்கள் சார்பில் மதுரை உயர்நீதிமன்றக்கிளையில் வழக்கு தொடரப்பட்டு தமிழக அரசுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. வழக்கு எண் விவரம். WP.15724, WP.15725, WP.15726, WP.15727, WP.15728/2014.
வசூல் வேட்டை மே மாதத்தில் 650 தலைமை ஆசிரியர் ஓய்வு:காலியிடங்களை பிடிக்க வசூல் வேட்டைக்கு வாய்ப்பு
அரசுப் பள்ளிகளில், 650 தலைமை ஆசிரியர்கள், மே மாதத்துடன் ஓய்வு பெறஉள்ளனர். அந்த இடங்களை பிடிக்க ஆசிரியர்களிடம் போட்டா போட்டிஏற்பட்டுள்ளது. அரசியல் கட்சியினர், சங்கங்கள் மற்றும் அதிகாரிகளின் சிபாரிசை நாடி வருகின்றனர்.

அனைவருக்கும் கல்வி இயக்கம் - 2015-2016 ஆம் ஆண்டில் பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் மாற்றுதிறன் கொண்ட குழந்தைகள் கணக்கெடுப்பு வாக்காளர் சரிபார்த்தல்.


பி.எஃப் தொகை எவ்வளவு: 5 நிமிடத்தில் கண்டறியும் வழிகள்!

பிஎஃப் கணக்கு விவரத்தை அக்டோபர் 16ம் தேதி முதல் அந்தந்த மாதமே தெரிந்துக் கொள்ள முடியும் என பிஎஃப் தலைமை அலுவலகம் தெரிவித்துள்ளது. இதற்காக 12 இலக்கம் கொண்ட நிரந்தர எண் (Universal
ActivationNumcer) உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி அக். 16ம் தேதி துவக்கி வைக்க உள்ளர்.
இந்த எண்ணை வைத்து இந்தியாவில் எந்த பகுதியில் இருந்து வேண்டுமானாலும் பிஎஃப் கணக்கு விவரத்தை தெரிந்துக் கொள்ள முடியும். ஒரு ஊழியர் வேலைக்கு சேர்ந்து பணியிலிருந்து ஓய்வு பெறும் வரை இந்த எண் தான் அவருடைய பி.எஃப் கணக்கு எண்ணாக இருக்கும். அதனால், நிறுவனம் மாறினாலும் சர்வீஸ் காலம் விட்டுப் போகாது.
இதுவரை கட்டிய பிஎஃப் தொகை எவ்வளவு என அறிந்து கொள்ள 5 நிமிடம் போது அதற்கு நீங்கள் செய்ய வேண்டிய வழிமுறைகள் இதோ:
1. http://members.epfoservices.in/ என்ற இணையதள முகவரிக்கு சென்று UAN நம்பரை ஆக்டிவேட் செய்வதற்கான லின்க்கை க்ளிக் செய்ய வேண்டும்.

தமிழகம் முழுவதும் அதிகாரிகள் உடந்தையுடன் முறையில்லாமல் நடக்கும் பணியிட மாற்றம்

தமிழகம் முழுவதும் அதிகாரிகள் உடந்தையுடன் முறையில்லாமல் நடக்கும் பணியிட மாற்றம்-தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்களுக்கு உயர் அதிகாரிகளால் மன உளைச்சலை ஏற்படுத்தும் சம்பவமும், அதனால் அரசு ஊழியர்கள் தற்கொலை செய்வது அல்லது தற்கொலை முயற்சியில் ஈடுபடுவதும் தொடர்கதையாகி வருகிறது.
அரசு ஊழியர்களின் மன உளைச்சலுக்கு முக்கிய காரணமாக இருப்பது பணியிட மாற்றம்தான் என்றும் கூறப்படுகிறது. வழக்கமாக, அரசு ஊழியர்கள் தொடர்ச்சியாக ஒரே இடத்தில் 3 ஆண்டுகள் பணி செய்யக்கூடாது என்பது விதியாக உள்ளது. இது அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் பொருந்தும். ஆனால், இந்த விதிமுறைகள் அரசு அலுவலகங்களிலோ, அரசு பள்ளிகளிலோ, ஏன் போலீஸ் நிலையங்களில் கூட இந்த நடைமுறை பின்பற்றப்படுவதில்லை. உயர் அதிகாரிகளுக்கு பிடித்த அரசு ஊழியர்கள் என்றால் எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் ஒரே இடத்தில் பணியாற்ற முடிகிறது. ஆனால், தனக்கு பிடிக்காத ஊழியர்களோ அல்லது ஆசிரியர்களோ ஒரு சில மாதம் பணியாற்றினால்கூட, நிர்வாக நடவடிக்கை என்ற போர்வையில் உடனடியாக அவர்களை பணியிடம் மாற்றம் செய்து மனஉளைச்சல் ஏற்படுத்துகிறார்கள்.
படாதபாடுபடும் ஊழியர்கள்

ஊதியம் மட்டும் ஆசிரியர்களின் பிரச்சனை அல்ல?


1.அரசு தொடக்க , நடு நிலைப் பள்ளிகளில் ஒருபுறம் வாசிப்புத்திறன் மறுபுறம் விதவிதமான கற்பிப்பு முறைகள்.
2.இடைனிலை ஆசிரியர்கள் வகுப்பின் 1-5 பட்டதாரிகள் கிஞ்சித்தும் கவனிப்பதில்லை என பல புகார்கள்,மாணவர்கள் 6,7,8 விட அதிகம் ஆனால் 2 அல்லது 3 ஆசிரியர்கள் 5 வகுப்புகள்/6.7.8 30 அல்லது 40 ஆசிரியர்கள் 3 அல்லது 4 /
3.மாறுதலில் ஊழல் அதனால் காலிப்பணியிடம் அவ்வகுப்பிற்கு 2 அல்லது 3 வகுப்பிற்கு ஒரே ஆசிரியர்.
4.தலைமை ஆசிரியர் ஒர் மெசேஜ் அல்லது தொலைபேசி தகவலில் அலுவலகம் செல்லனும் ,ஏதாவது கற்பித்தல் அல்லாத பணி
5.இந்த பி.எல்.ஓ டூட்டி ஏன் ஆசிரியர் செய்யனும்
6.கம்பூட்டரில் ஈ பே, வசூல் பாவம் ஆசிரியர்கள்
7.அதிகம் படித்த இடை நிலை ஆசிரியருக்கு பள்ளிக்கல்வித்துறையில் பதவி உயர்வல்லை
8.பள்ளி மேம்பட உழைக்கும் ஆசிரியர்களுக்கு அங்கீகாரமில்லை
9.சரியான திட்டமிடல் ,வழிகாட்டலின்றி தொடக்க கல்வி சீரழிகிறது.
10.பள்ளி என்றால் மாணவர்கள்,படிப்பு என்பதை மறந்து அ.க.இயக்கம்
கட்டிடங்கள்,வீணான பயிற்சி,புள்ளி விவரம் மீட்டிங் ,பல்வேறுஆபடிவங்களை வழங்கி ஆசிரியர்களின் கற்பித்தலை முடக்கி தொடக்க , நடுனிலைப் பள்ளிகளை மூடு விழா நோக்கி அழைத்துச் செல்கிறதோ என ஆசிரியர்கள் மத்தியில் வெறுப்பினையும் வேதனையையும் வளர்க்கிறது. .

11.கட்டிடம் உண்டு,கம்பூட்டர் உண்டு,புரொஜெக்டர் உண்டு ,கம்பிய்யூட்டர் வாத்தியாரில்லை,அல்லது கற்பிக்க பாடத்திட்டமில்லை,அல்லது ஆசிரியருக்கு நேரமில்லை.இணையதள வசதியில்லை.
12.வட்டார வள மையத்தில் சரியான வசியில்லை,வீடியோ கான்பரென்ஸ் என கோடிகோடி கொட்டி அழுத பணம் வீணானது.வட்டாரத்தில் இருந்தே டெல்லி வரை பேசுவோம் என்ற வார்த்தைகள் வீணானது.
14.என்ன சொல்ல யாருக்கும் வெட்கமில்லை
ஆசிரியர்குரல் அருணாசலம்
நிதி உதவி பெரும் தனியார் மற்றும் சிறுபான்மை பள்ளி நிர்வாகியால் பாதிப்பா ? - ஆசிரியர்களை பாதுக்காக்க டாட்டா சங்கம் இருக்கிறது .9443464081/9025054081.

 பள்ளி நிர்வாகி என்ற போர்வையில் ஆசிரியருக்கு ஏற்படுத்தும் தொல்லைகள் ;-

1) மாதந்தோறும் ஊதியத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை வசூல் செய்வது .

2) சிறு விடுப்பு , மருத்துவ விடுப்புகள் மற்றும் அரசின் சலுகைகளை அனுமதிக்க மறுப்பது .

3) வருடாந்திர ஊதிய உயர்வு மற்றும் பிற பண பலன்களை உரிய காலத்தில் பெற்று தர மறுப்பது 

4) தேவையில்லாமல் மெமோ கொடுத்து மன உளைச்சல் ஏற்படுத்துவது 

5)  பணி நியமனங்களுக்கு பணம் வாங்குவது 

6) பிற அனைத்து வகை தொல்லைகளில் இருந்து விடுதலை பெற பள்ளி நிர்வாகத்தை அரசின் நேரடி கட்டு பாட்டில் கொண்டு வந்திட தொடர்பு கொள்ளவும்