PAGEVIEWERS


1.86 ஆசிரியர்கள்
1.86 பெறாத ஆசிரியர்கள்
State Seniority ஆசிரியர்கள்
TET Appointment ஆசிரியர்கள்
New Appointment ஆசிரியர்கள்
இவ்வாறு பல
பிரிவு பட்ட,
பிளவு பட்ட ஆசிரியர்கள்
அனைவரும் 2800 பெற்றுவரும் ஆசிரியர்கள் என்பதை முதலில் உணர, உணர்த்த வேண்டும்..

6வது ஊதியக்குழுவில் இப்போதைக்கு பெற்றுவரும் சப்பைகட்டு ஊதியம்
அடுத்து வரவிருக்கும் 7ல் ஒன்றாகிவிடும் என்ற தெளிவு பெறவேண்டும்..

6ஐத்தாண்டி 7க்கு கணக்கிட தயாராய் மடிக்கணினியை தூக்கிக்கொண்டு அலைபவர்களுக்கு மத்தியில் 6ல் தவழ்ந்து கொண்டு தள்ளாடும் இடைநிலை ஆசிரியர்களாகிய நமது நிலையை நமக்கு (பாதிப்பு பற்றி அறியாத, தெரியாத, புரியாத இடைநிலை ஆசிரியர்களுக்கு) விளக்கமாய் விளங்க வைக்க வேண்டும்..
ஒரே பணிநிலைக்கு (இடைநிலை ஆசிரியர்) தற்போது பெற்றுவரும் பலவித மாறுபட்ட, முரண்பட்ட ஊதியமானது அடுத்து வரும் 7ல் சங்கமித்து அனைத்து இடைநிலை ஆசிரியர்களுக்கான பேரிடியாக, ஒரே ஊதியமாக இருக்கப்போகிற உண்மையை அறியச்செய்ய வேண்டும்..
பெற்றவரும்
ஊதிய கட்டு (தர ஊதியம்) கொண்டு தான் அடுத்தடுத்து வரவிருக்கும் ஊதியக்குழுவில் ஊதிய நிர்ணயம் செய்யப்படும் என்ற உண்மையை உணரச்செய்ய வேண்டும்..

பொழுதுபோக்கான,
வேடிக்கையான,
வினோதமான,
விரும்பத்தக்க விசயங்களை பகிர விடாதபடி
இடைநிலை ஆசிரியர்கள் விழித்தெழ வைக்க இப்படியான விழிப்புணர்வு விசயங்களை பகருகின்ற இந்த அவலத்தின் தேவை மற்றும் அத்தியாவசிய அவசியத்தை பிரிந்து கொண்டு புரிய வைக்க வேண்டும்..

இடைநிலை ஆசிரியர்கள் அனைவரும் இயக்க வேறுபாடு பார்க்காமல் "நமக்காக நாம்" என்று நமது ஊதிய முரண்பாடு களைய தேவையான நடவடிக்கைகள் குறித்து கலந்தாலோசிக்க, முடிவெடுக்க, ஊதிய முரண்பாடு மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் ஒற்றுமையின்மைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஒன்றிணைய ஆயத்தமாக வேண்டும்..
ஊதிய முரண்பாடு களைய முதலில் இயக்க வேறுபாடு களைய நாம் ஒவ்வொருவரும் நம்மைப்போன்ற பாதிக்கப்பட்ட அனைவரையும் ஆர்வமூட்ட, ஆயத்தப்படுத்த வேண்டும்..
இதற்கு பாதிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் அனைவரும் ஓரிடத்தில் ஒற்றுமையாக ஒன்றிணைய வேண்டும்..
We Must Conduct
"GP:2800 Teachers Meeting"
Very Soon

வரவிருக்கும் CRC Meeting-ஐ களமாக்கி அனைவரையும் ஒன்றிணைக்க முயற்சி செய்ய வேண்டும்..
நமக்காக நாம்..

No comments:

Post a Comment