PAGEVIEWERS

சாதிச் சான்றா
சாரைப் பார்
ஆதார் அட்டையா
ஆசிரியர் அங்கே
வாக்காளர் சேர்ப்பா
வாத்தியார் உள்ளார்
இலவசப் பொருள்கள்
இறக்கவும் ஏற்றவும்
இருப்பவர் யார்
கண்பரிசோதனையை
கச்சிதமாய் செய்வார்
கட்டிடம் கட்ட
கொத்தனாராவார்
கக்கூஸ் கழுவும்
ஆயாவாகவும்
கைகழுவும்
சோப்புநீர் தயாரிப்பார்
ஒரேநேரத்தில்
தமிழும் பேசுவார்
ஆங்கிலமும் பேசுவார்
அடேங்கப்பா


இவரோ நவீன
மேஜர்சுந்தரராஜன்
இரண்டுநாள்கள்
பயிற்சி தந்தால்
போதும்
சதுரங்கம்
சொல்லித்தருவார்
சுற்றுச்சூழல் மன்றம்
சூப்பராய் வைப்பார்
பல் மருத்துவராவார்
கண்மருத்துவராவார்
சுகாதாரம் கற்பிப்பார்
மண்புழு உரம்
தயாரிப்பார்
கணிப்பொறி
கற்ப்பிப்பார்
பொம்மைகள்
செய்வார்
பொம்மலாட்ட
பொம்மைகூட
இவர்போல ஆட முடியாது
ஏபிஎல் என்றால்
எடுப்பார்
வேண்டாம் புத்தகம்
என்றாலும் சரி
என்பார்
மீண்டும் எஸ்ஏபிஎல்
என்றால்
சலிக்காமல் சரி என்பார்
இதற்கெல்லாம்
கின்னஸ் விருதேதரலாம்
......
ஆனால் கிடைப்பது
என்ன.....
விளக்கம்... 17அ......
17ஆ.....
காரணம் கேட்டால்
அடைவுத்திறன் குறைவு......
........
ஆசிரியர்களுக்கு
இத்தனையெல்லாம்
தருவதற்கு பதிழ்
ஆல் பாஸ் என்ற
ஒன்றை மட்டும்
எடுத்துவிட்டால்
போதும்.......
இது யாருக்கெல்லாம்
தெரியாதோ....
அவர்களெல்லாம்
அதிகாரியாவதற்கு
தகுதியானவர்கள்

No comments:

Post a Comment