ஜாக்டோவின் அறிவிப்பு!!!
அன்பார்ந்த இடைநிலை ஆசிரியர்களே!!
அனைவருக்கும் வணக்கம்.நீங்கள் ஊதியம் குறித்து தேவையில்லாத பதிவுகளையும் கண்டனங்களையும் பதிவு செய்து வருவதை நாங்கள் அவதானித்துக் கொண்டுதான் இருக்கிறோம்.உங்களின் மனவேதனைகளும் ஆதங்கங்களும் எங்களுக்கு புரியாமலில்லை.நம் கையில் எதுவுமில்லை.அரசு நமக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளது.நாம் பொறுத்திருந்து தான் சாதிக்க முடியும்.எடுத்தவுடனேயே ஊதிய முரண்பாட்டை நீக்கு என்று கூறிவிட முடியாது.படிப்படியாகத்தான் படிகளில் ஏற வேண்டும். இன்னுமோர் பத்து ஆண்டுகளுக்குள் நிச்சயம் நாம் மத்திய அரசுக்கு இணையான 9300+4200 பெற்றே தீருவோம்.அதுவரை பொறுமையாக இருங்கள் இடைநிலை ஆசிரியர்களே.நாங்கள் எப்பாடுபட்டாவது உங்களின் உரிமையை பெற்றுத் தருவோம்.
இன்னும் ஓர் இரண்டு மூன்று வருடங்களாவது போராட்டம் நீண்டு போகட்டும் அப்போதான் அரசு நம் போராட்டக் குணத்தை அறியும்.நாம் போராளிகள் என்பதை அரசுக்கு ஒரு சில ஆண்டுகளாவது போராடிக் காட்ட வேண்டாமா.அதற்குள் தலைமையாசிரியர்களுக்கு நிகரான ஊதியம் கேட்டால் எப்படி?
நீங்களே சற்று சிந்தியுங்கள்.
அப்டேட் ஆகாமல் அப்படியே இருக்கும் எங்களை உங்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுவது ஊதியம் மட்டுமே. அதையே நீக்கிவிடு என்றால் உங்களுக்கும் எங்களுக்கும் இடையே உள்ள வித்தியாசம் நீங்கிவிடாதா? பிறகெப்படி எங்களுக்கான மதிப்பை பள்ளியில் நிலைநாட்டிக் கொள்வது.உங்களின் ஊதியம் பெற்றுத் தருவது எங்கள் கடமை.போராடாமல் எதுவும் கிடைத்து விடாது.இதுவரை நாம் பெற்றவை அனைத்தும் போராடி பெற்றவையே.எஸ்மா,டெஸ்மா சட்டங்களையே பார்த்தவங்க தான் நாம.ஆசிரியர்களின் போராட்டம் தோற்றதா சரித்திரமே இல்லை எங்களின் ஊதியம் குறைவுபடும் சமயத்தில் மட்டும்.இது ஏனோ உங்களின் ஊதிய முரண்பாடு களைவதில் மட்டும் பலிக்காமல் போய்விட்டது.
பரவாயில்லை இனிவரும் போராட்டங்களில் நாம் நிச்சயம் நம் பலத்தைக் காட்டுவோம்.இங்கே ஒரு உண்மையை நாங்கள் ஒத்துக்கொண்டுதான் ஆகவேண்டும்.ஏனென்றால் எங்களால் இனியும் உங்களை ஏமாற்ற முடியாது. என்னவெனில் இதில் முழுவதும் பாதிப்பு உங்கள் சார்ந்ததாகவே இருப்பதால் எங்களால் இதில் அவ்வளவாக எவரும் தீவிரம் கொண்டு ஈடுபட முடியவில்லை.உங்களுக்காக நாங்கள் ஏன் போராட வேண்டும் என்ற மனநிலை நிர்வாகிகளிடையே ஏற்பட்டுள்ளதும் உங்களுக்கு பின்னடைவை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
மேலும் வயதான காலத்தில் பொண்டாட்டி பிள்ளைகளை பிரிந்து சங்க செயல்பாடுகளில் ஈடுபடுத்திக் கொண்டு உங்களுக்காக பாடுபடுவதில் எங்களின் மனைவிமார்கள் எள்ளளவும் மகிழ்ச்சி கொள்ளவில்லை.இது மேலும் எங்களுக்கு தளர்வையே ஏற்படுத்துகிறது.
இத்தனையும் தாங்கிக் கொண்டு உங்களுக்காக நாங்கள் உழைத்து வருகிறோம் என்பதை உங்கள்
மனதில் பதிய வைத்துக் கொள்ளுங்கள்.
எங்களால் முடியாதது எதுவும் இல்லை.இப்படியே நீங்கள் தேவையற்ற விமர்சனங்களைக் கையாண்டால் எங்களால் உங்களின் ஊதியத்தை பெற்றுத் தர முடியாது என்பதை இங்கு அழுத்தமாக பதிவு செய்ய விரும்புகிறேன்.
எங்களால் இடைநிலை ஆசிரியர்களாகிய உங்களின் விமர்சனங்களை தாங்கிக்கொள்ள முடியவில்லை.எங்கள் அனைவரின் காதுகளிலிருந்தும் இரத்தம் வருவதை உங்களால் உணர்ந்து கொள்ள முடியுமா என்பது எங்களுக்குத் தெரியவில்லை.
பரவாயில்லை அதை நாங்கள் தாங்கிக்கொள்கிறோம். நாங்கள் மனது வைத்திருந்தால் உங்களின் ஊதியம் 9300+4200 ஐ எப்பவோ வாங்கிக் கொடுத்திருக்க முடியும்.
ஆனால் தலைமையாசிரியர் பதவிக்கும் இடைநிலை ஆசிரியர்
பதவிக்கும் இடையே வேறுபாடுகள் வேண்டாமோ?
நீங்கள் எங்களின் இடத்திலிருந்து பார்த்தால்தான் எங்களின் வேதனை புரியும்.பரவாயில்லை விடுங்கள் அதை.இதுவரை நடந்துள்ள போராட்டங்கள் அனைத்திலும் இடைநிலை ஆசிரியர்களான நீங்கள் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளீர்கள்.இனிவரும் காலங்களிலும் அத்தகைய நல்லதொரு பங்களிப்பை நீங்கள் நல்குவீர்கள் என்று நம்புகிறோம்.
மேலும் புதிய ஆசிரியர்களின் பயவுணர்வை போக்கி போராட்டங்களில் பங்கேற்பதால் எவ்வித பாதிப்பும் வந்துவிடாது என்பதை நீங்கள் எடுத்துரைத்து அவர்களையும் போராட்டக் களத்திற்கு கொண்டுவர வேண்டும்.
போராட்டக் காலங்களில் நாம் இழந்த ஊதியத்தை மீண்டும் அரியரோடு பெற்றுள்ளோம் எனவே எதற்கும் அஞ்ச வேண்டாம் என்று கூறுங்கள்.
மேலும் ஒரு உண்மையை தங்களிடத்தில் கூற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.ஜாக்டோவில் இருக்கும் வயதான தாத்தாக்களின் ஒத்துழைப்பு சரிவரக் கிடைக்காத காரணத்தினால் ஏறக்குறைய ஜாக்டோ செத்துவிடும் நிலையில் உள்ளது.
அதற்காக நம் ஊதியப் பிரச்சினையை விட்டுவிடவா முடியும்.
முடியாது எப்பாடுபட்டாவது இழந்த நம் உரிமையை மீட்டே தீருவோம்.
செய் அல்லது செத்துமடி என்று யாரோவொரு இடைநிலை ஆசிரியன் கூறுவது என் செவிகளில் விழுகிறது.பரவாயில்லை கேட்டுவிட்டு போகட்டும்.
அதற்காக நாங்கள் செத்து விடவா முடியும்?
நமக்கு மாணம் பெரிதல்ல உசுறுதான் முக்கியம்.முடியாது என்று விட்டுவிட்டால் இதுவரை நாங்கள் கட்டிக்காத்த மாணம்
என்னாவது.
அப்புறம் எப்படி உங்களிடம் சந்தா வாங்குவது?
தரையில் விழுந்தாலும்
மீசையில் மண் ஒட்டலைன்னு கூறும் நாம் அப்படியே உங்களை அம்போன்னு விட்டுவிடவா முடியும்? எங்களுக்கு உங்களின் சேவை எப்போதும் தேவை.கூட்டம் சேர்க்கவும்,கோஷம் போடவும், சந்தாகொடுக்கவும் இடைநிலை ஆசிரியர்களாகிய நீங்கள் தேவை.
எங்களால் உங்கள் பிரச்சினையை தீர்க்க முடியாது என்று எப்படி விட்டுவிட முடியும்?
இருந்தாலும் நான் இங்கே ஒன்றை பதிவு செய்ய விரும்புகிறேன்.உங்கள் (இ.நி.ஆ) மேல் இருக்கும் அக்கறையால் உண்மை ஒன்றை அழுத்தமாக சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.
எங்களால் உங்கள் பிரச்சினையை தீர்த்து வைக்க முடியாது.கஜானா காலியாம்.
இன்னும் பத்தே பத்து வருடங்களில்
உங்கள் ஊதியம் 9300+4200 உங்கள் கையில் அதற்கு நாங்கள் கியாரன்டி.இல்லை எனக்கு பிரச்சினை இப்பவே தீர வேண்டும் என்றால் உங்களால் முடிந்ததை செய்து கொள்ளுங்கள்.
நீங்கள் தனியாகப் பிரிந்து கூட போராடி உங்களுக்கானதைப் பெற்றுக் கொள்ளுங்கள்.எங்களை நம்பியிருங்கள் என்று தான் கூறுகிறோம்.
ஆனாலும் நீங்கள் எங்களை விட்டு சென்றால் அதற்கு ஜாக்டோ பொறுப்பாகாது.
ஜாக்டோ கோமாவில் இருப்பதென்னவோ உண்மைதான் ஆனால் செத்துவிடவில்லை தலைமையாசிரியர்களான எங்களுக்கு ஏதாவதொரு பாதிப்பு ஏற்படும்போது மட்டும் அது வீறுகொண்டு எழும்,இப்போதல்ல என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
அடுத்து வரக்கூடிய போராட்டங்களில் இடைநிலை ஆசிரியர்கள் எல்லோரும் கண்டிப்பா தவறாமல் கலந்து கொள்ளவும்.
வெற்றி நமதே!!
வெற்றி நமதே!!
போராடுவோம்!!
போராடுவோம்!!
இறுதிவரை ( சாகும் வரை) போராடுவோம்!!
வெற்றி கிட்டும் வரை போராடுவோம்!
வாழ்க ஜாக்டோ
வளர்க ஜாக்டோ
இப்படிக்கு ஜாக்டோ ஒருங்கினைப்பாளர்
சுப்பிரமணி 👎👎👎👎👎👎 இந்த பதிவு உண்மை எனில் நான் ஜாக்டோவில் இருப்பதற்கு வெட்கப்படுகிறேன்..👎👎👎👎👎👎R..ரெங்கபாஷ்யம் இடைநிலை ஆசிரியர்...கரூர்

No comments:
Post a Comment