PAGEVIEWERS

ஒற்றுமையை வெளிப்படுத்தி ஒன்று கூடியதன் நோக்கத்தை வெளிக்காட்டுவது மனித சங்கிலி. இப்போதோ சங்கம் எனும் சங்கிலி அறுந்து போய் விடுமோ என்ற அச்சத்தோடு அறிவிக்கப்பட்டிருப்பதுவே மனித சங்கிலி போல உள்ளது.
சங்கிலி, கோட்டை பேரணிக்கு பின்னர் 25 ஆம் தேதிக்குள் அறிவிப்பு வராவிட்டால் 26 ஆம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்தம் என்றவர்களுக்கு, தற்போது அறிவிப்பு வந்துவிட்ட பின்னர் வேறு என்ன அறிவிப்பு வரும் என்று நினைக்கிறார்கள் என்று புரியவில்லை. எதிர்பார்த்தது ஒன்றும் இல்லை என்ற பின்னர் எதற்காக இன்னமும் 25 வரை காத்திருப்பு. நாளை கடத்தி தேர்தல் ஆணையம் மீது பழி சுமத்தி அப்படியே நெளிந்து வளைந்து திரும்பவும் நம்பிய இடைநிலை ஆசிரியர் சமூகம் மீது மிளகாய் அரைக்கவா?
இடைநிலை ஆசிரியர் கல்வி தகுதி பத்தாம் வகுப்பு மற்றும் சர்ட்டிபிகேட் கோர்ஷ் என்று அறிக்கையில் குறிப்பிட்ட போதே அதை எதிர்த்து குரல் கொடுத்து அதை மக்கள் முன் கொண்டு சென்றிருக்க வேண்டும். மீடியாவும் மக்களும் கல்வி தகுதியை ஏன் குறைத்து தவறான அறிக்கை தருகிறீர்கள் என்று கேட்டிருப்பார்கள். நியாயம் வென்றிருக்கும். அதைவிட்டு ஊதியம் குறைவு என்று மக்கள் மேடைக்கும் செல்ல இயலாது.
பெற்று வந்த ஊதியத்தை விட குறைவாக பெறும் நிலையில் ஊதியம் நிர்ணயம் செய்த அழகையும், இ.நி.ஆசிரியர்களின் கல்வி தகுதியை குறைத்து அறிக்கை வெளியிட்டதையும் மக்கள் மேடைக்கு எடுத்து செல்வதே இடைநிலை ஆசிரியரின் ஊதியப் பிரச்சினையை அதிகாரிகள் நின்று கவனிக்கச் செய்யும். மனித சங்கிலி மனங்களின் சங்கிலியாக இருக்க வேண்டும். Upper Primary CRC எனக்கு அடுத்த வாரம்தான், அதனால் சும்மா வந்திட்டு போனேன் என்பதல்ல மனித சங்கிலி.
ஆசிரியர் சமூகம் ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய நேரம்.

No comments:

Post a Comment