PAGEVIEWERS


நிலவில் முதன்முதலாக காலடி வைத்த நீல் ஆம்ஸ்டிராங் 82 வயதில் மரணம்


 Neil Armstrong First Man On The Moon Dies
Neil Nitin Mukesh to support Think ...
வாஷிங்டன்: நிலவில் முதன் முதலாக காலடி எடுத்து வைத்த அமெரிக்க விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்டிராங் தனது 82வது வயதில் காலமானார்.
1969ம் ஆண்டு ஜூலை மாதம் 20ம் தேதி அப்பல்லோ மிமி என்ற விண்கலம் சந்திரனில் தரை இறங்கியது. அதில் இருந்து நீல் ஆம்ஸ்ட்ராங் தான் முதல் ஆளாக இறங்கிநிலவில் காலடி எடுத்து வைத்தார். இதன் மூலம் சந்திரனில் முதன் முதலாக நடந்த விண்வெளி வீரர் என்ற பெருமை அவருக்கு கிடைத்தது. பூமி திரும்பிய பின்னர் நீல் ஆம்ஸ்ட்ராங் உலக ஹீரோவானார்.
கடந்த 5ம் தேதி அவர் தனது 82வது பிறந்தநாளைக் கொண்டாடினார். கடந்த 7ம் தேதி அவருக்கு இதய அறுவை சிகிச்சை நடந்தது. அதில் இருந்து உடல் நலம் குன்றி இருந்த ஆம்ஸ்டிராங் காலமானார் என்று அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர். ஆனால் அவர் எங்கு, எப்போது இறந்தார் என்று அவர்கள் தெரிவிக்கவில்லை.
நீல் ஆம்ஸ்டிராங் நிலவில் நட்டுவைத்த அமெரிக்ககொடி ஏற்கனவே அழிந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment