PAGEVIEWERS

நாட்டிலிருந்து ஊழலை ஒழிக்கும்

பொருட்டு, இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் பல்வேறு புதுமைகளை மத்திய அரசு புகுத்தி வருவதாக மத்திய பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார். இதுதொடர்பாக, லோக்சபாவில் எழுத்துப்பூர்வமாக நாராயணசாமி அளித்துள்ள பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஊழல் தடுப்பு நடவடிக்கையின் பொருட்டு, 2011ம் ஆண்டிலேயே லோக்பால், மற்றும் லோக்ஆயுக்தா மசோதாக்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதுமட்டுமல்லாது, ஊழல் குறி்த்து தகவலளிப்போருக்கு பாதுகாப்பு அளிக்கும் மசோதா உள்ளிட்ட மசோதாக்களையும் மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. நாட்டிலிருந்து ஊழல் ஒழிப்பு என்பது ஒருநாளில் முடிந்துவிடக் கூடிய வேலை அல்ல என்றும் இது ஒரு தொடர் நடவடிக்கை என்றும், அப்பணியை மத்திய அரசு செவ்வனே செய்து வருவதாகவும் நாராயணசாமி அதில் குறிப்பிட்டுள்ளார்

No comments:

Post a Comment