PAGEVIEWERS

தற்போது நமது டாட்டா சங்கம் மூலம் 1989 முதல் +2 ,உடன் DIPLOMA என நமது தகுதி மாற்றப்பட்டு உள்ளதாக TRB,DTERT, அரசு தேர்வு இயக்கம்  ஆகியன தகவல் பெரும் சட்டம் மூலம் தெரிவித்து உள்ளது ,இந்த வழக்கு ஒட்டு மொத்த (தர ஊதியம் ரூ 2800 ல் உள்ள 72,000 பேர்   இடை நிலை ஆசிரியருக்கு ஊதியம் 9300+ 4200 என மாற்றம் செய்யப்பட வேண்டும் என நடந்து வருகிறது .நமது ஊதிய வழக்கு 1.86 கேட்டு குறிகிய நேக்கத்தொடு நடை பெற வில்லை. தற்போது  Diploma in  Elementary Education ( தொடக்க கல்வி படையத் தேர்வு  )சான்று 2011-2012 கல்வி ஆண்டு முதல் அ .ஆ .எண் ;237 கல்வி .நாள் 16.08.2010மூலம் வழங்கப் படுவதாக அரசு தேர்வு வாரியம் தெரிவித்து உள்ளது .D.T.Ed சான்று என்பது அரசு ஆணை ;305 பள்ளிகல்வி 2000 ம ற்றும்  அரசு ஆணை26ல்  1987-88 முதல்
+2, DIPLOMA என உள்ளதாக உள்ளது .

 இடை நிலை ஆசிரியருக்கு 9300+4200 போராட்டத்தின் மூலம் 
பெற முடியுமா ?

 TATA ஏன் வழக்கு தொடர்ந்தது ?

 1984 ம் ஆண்டு  இடை நிலை ஆசிரியரும்,இளநிலை உதவியாளரும் சம ஊதியத்தில் இருந்தனர் ( ரூ 610) 

ஆனால் 5 வது ஊதிய குழுவில் 1-6-88 ல்  இளநிலை உதவியாளருக்கும்இடை நிலை ஆசிரியரும், ஊதியம் ரூ 975 நிர்ணயம் செய்யப்பட்டு  வழங்கப்பட்டது .இதே காலத்தில் இடை நிலை ஆசிரியரின் கல்வி தகுதி டிப்ளமாவாக மாற்றப்பட்டதின் விளைவாக மத்திய அரசு ஆசிரியருக்கு இணையான   ஊதியம்  ரூ 1200 என மாற்றப்பட்டது . இளநிலை உதவியாளருக்கு  ஊதியம்  ரூ  975+5% PP  என மாற்றப்பட்டது .

1996 ஊதிய குழுவில்  இளநிலை உதவியாளருக்கும்இடை நிலை ஆசிரியரும், ஊதியம் ரூ4000 நிர்ணயம் செய்யப்பட்டு  வழங்கப்பட்டது.பின்னர்  மத்திய அரசு ஆசிரியருக்கு இணையான   ஊதியம்  ரூ 4500என மாற்றப்பட்டது.நமக்கு ஊதியம் உயர்ந்ததும்  இளநிலை உதவியாளர் போராடினர் அதனால் அவர்களுக்கு ஊதியம்  ரூ4000+5% PP  என மாற்றப்பட்டது .

2006  ஊதிய குழுவில் இடை நிலை ஆசிரியருக்கு

 1.கிராமபுரத்தில் பணி செய்கிறார்கள்  அங்கு விலைவாசி குறைவு 
2.எண்ணிக்கை அதிகம் 1,16,129பேர் .
3.கிட்டதட்ட மத்திய அரசு ஆசிரியருக்கு இணையான   ஊதியம் ரூ 11,150. வழங்கப்பட்டு உள்ளது .
4. இடை நிலை ஆசிரியருக்கு வழங்கினால் ,இளநிலை உதவியாளர் பாதிக்க படுவர் 
5. SSLC.யுடன்  சான்றிதழ்  படிப்பு மட்டுமே !
6.இந்தி ,ஆங்கிலம் ,கணினி அறிவு இல்லை .
7. டிப்ளமா படிக்க வில்லை அதனால்  மத்திய அரசு ஆசிரியருக்கு இணையான   ஊதியம் கேட்பது சடடத்திற்கு எதிரானது .
8.9300+4200 வழங்கினால் அதிக நிதி தேவை படும் என காரணம் கூறி மறுக்கப் பட்டு உள்ளது .

  TATA சங்கம் இவை அனைத்திற்கும் உரிய ஆதாரங்கள் 172 பக்கம் சேகரித்து வழக்கு தாக்கல் செய்து உள்ளது .நிதியை காரணம் காட்டி மறுத்துவிட கூடாது என்பதற்கு மத்திய திட்டக்குழு தலைவர் மண்டெசிங் அலுவாலியா அவர்கள் தமிழக அரசின் நிதி நிலை சிறப்பாக உள்ளது என பாராட்டி கொடுத்த சான்று RTI மூலம் பெற்று இணைத்து உள்ளோம் .

பணி ஒய்வு பெற்றோர்   தலைமையில் செயல் படும்     சங்கத்தில் உள்ள ரூ 2800    இடை நிலை ஆசிரியரே  உங்கள் சங்கம் நிதி துறையிடம் கொடுத்த மனுவை   RTI மூலம் பெற்று படித்து பாருங்கள் , உண்மை தெரியும் ..  TATA வின் மனுவையும் ஆதாரங்களையும் பெற்று படித்து பாருங்கள் , உண்மை தெரியும் மேலும் ஊதிய பிரச்சனைக்காக உயர் அலுவலர்களை சந்தித்து பேசும்போது நமது உண்மை நிலை குறித்து ஒருவருக்கும் தெரியவில்லை .நீங்கள்  சொல்வதை கேட்க வேண்டும் என்றால் உங்களிடம் எண்ணிக்கை இல்லை என்கின்றனர் .1,50,000 அரசு ஆணைகள் ,60 சட்ட புத்தகங்கள் ,அனைத்து சங்கங்களின் டைரிகள்  ( வரலாறு ) 1940 முதல் ஊதிய நிர்ணய அறிக்கைகள் அனைத்தும் எம்மிடம் உள்ளது அதன் படி கிடைத்த தகவல் படி அரசுக்கும் , அலுவலர்களுக்கும் உண்மையை புரியவைக்க வழக்கு தாக்கல் செய்துள்ளோம் . அதிக எண்ணிக்கை உறுப்பினர் கொண்டுள்ள சங்கம் உண்மையை அறியவில்லை , அறிய முயற்ச்சிக்க வில்லை .இந்த வழக்கு மூலம் இடை நிலை ஆசிரியரின் இழந்த உரிமை மீட்கப்படும்.

முந்தய   ( வரலாறு ) போராட்டங்களில் பதிப்பு தலைமை முதல் அடிப்படை உறுப்பினர் வரை இருந்தது அதனால் வெற்றி கிடைத்தது  ,தற்போது தலைமை பணி ஒய்வு பெற்றோர் என்பதால் அவர்களுக்கு பதிப்பு இல்லை. இன்று  இடை நிலை ஆசிரியருக்கு 1.ஊதிய பாதிப்பு அதனால் வருடத்திற்கு ரூ 1,50,000 வரை இழப்பு .2.CPS திட்டத்தால் எதிர்காலம் பாதிப்பு .3.தொகுப்புதிய காலம் பணிக்காலமாக ஏற்கப்படத்து ,அதனால் 2004 நியமனம் பெற்றவரும் 2006 நியமனம் பெற்றவரும் 1.6.2006 ல் பணியில் சேர்ந்ததாக கருதப்படுவதால் இளையோர் ,முத்தோர் எனற நிலை இல்லாமல் போனது.. இது போல் இன்னும் எத்தனையோ பாதிப்புகள்   .நம் முன் இனிக இனிக பேசி நம்மை எமாற்றி விட்டனர். அரசிடம் உண்மையை எடுத்து கூற தெரியவில்லையா ? அல்லது பெற்று தர மனம் இல்லையா ? .
 மேற்கண்ட காரணங்களால் ஊதியம் மறுக்கப் பட்டு உள்ளதால் தான்   இடை நிலை ஆசிரியரின்  உரிமையை நிலை நாட்ட   வழக்கு தாக்கல் செய்து உள்ளது .இந்த காரணங்களை மறுத்து ஆதரங்களை சேகரித்து எந்த ஒசங்கமும் மனு கொடுக்கவில்லை .

kipson
235.north street.,parappadi-627110
bank name;  SBI, AMBASAMUTHRAM.நெல்லை 
மாவட்டம் 
bank code no;804. 
A/C  NO;30486085987.
CALL  Me  9443464081//9840876481.
நமது ஊதிய வழக்கு முடிந்து விட்டது .ஆனால் வழக்கறிஞருக்கு கொடுக்க வேண்டிய பாக்கி தொகை உள்ளது  நிதி  கொடுத்து உதவிட வேண்டுகிறோம்

 அன்புடன் இயக்கப் பணியில்  TATA.KIPASON.9443464081.

No comments:

Post a Comment