PAGEVIEWERS

EMIS பணிகளை 15 ம் தேதிக்குள் முடிக்க ஆசிரியர்கள் திணறல்

மாணவமாணவிகளுக்கு ஆதார் எண்ணுடன் பல் நோக்கு பயன்மிக்க
ஸ்மார்ட் கார்டுகள் வழங்க ஏற்பாடுகள் நடைபெற்று
வருகின்றன.
இந்த கார்டுகளை வரும் 15 ஆம் தேதிக்குள் முடிக்க உத்தரவிடப்பட்டது.
ஆனால் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க ஆசிரியர்கள் திணறி
வருகிறார்கள்.

1,821 இடைநிலை ஆசிரியர்கள், 11,922 பட்டதாரி ஆசிரியர்கள், 2,881 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் ஆசிரியர்கள் விரைவில் நியமனம் - பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர்

அரசுப் பள்ளிகளில் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் இவர்கள் பணி நியமனம் செய்யப்படுவார்கள் என பள்ளிக் கல்வித்
துறைச் செயலாளர் டி.சபிதா கூறினார்.

சென்னை சாந்தோம் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் குழந்தைகள் தின விழா மற்றும் சிறந்த நூலகர்களுக்கான டாக்டர் எஸ்.ஆர்.அரங்கநாதன் விருது வழங்கும் விழா இன்று (14.11.2013 வியாழக்கிழமை) நடைபெற்றது.
இந்த விழாவில் அவர் பேசியது:

அகஇ - தொடக்க / உயர்தொடக்கநிலை ஆசிரியர்களுக்கான டிசம்பர் 2013 மாதத்திற்கான குறுவளமையப்பயிற்சி "சமூக சமநிலை நேர்மறை எண்ணங்களை வளர்த்தெடுத்தல்" எனற தலைப்பில் 07.12.2013 அன்று நடைபெற உள்ளது.

இரட்டை பட்டம் சார்பான வழக்கு ஒரு தரப்பு வாதம் முடிந்தது, அரசுதரப்பு வாதங்கள் மற்றும் மூன்று வருட படிப்பு சார்பாக வாதம் எஞ்சியுள்ள நிலையில் வருகிற 25ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு இன்று 12மணியளவில் முதன்மை அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இதையடுத்து மூத்தவழக்கறிஞ்சர்கள் பிரகாஷ் மற்றும் முத்துகுமாரசாமி வாதிட்டார்கள். அதை தொடர்ந்து மதிய உணவு இடைவெளிக்கு பிறகு அரசு தரப்பு வழக்கறிஞ்சர் வாதிட்டார், அப்பொழுது அரசின் நிலை குறித்து கேட்டறிந்த நீதியரசர்கள் வருகிற 25ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளனர்.
அன்றைய தினம் எஞ்சிய வாதங்கள் அதாவது அரசுதரப்பு, அதற்கடுத்து மூன்று வருட பட்டப்படிப்பு சார்பான வழக்கறிஞ்சர்கள் ஆகியோர் ஆஜராக உள்ளனர்.

இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு மீண்டும் நாளை (14.11.2013 ) விசாரணைக்கு வருகிறது

இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு இன்று (13.11.2013) சென்னை உயர்நீதிமன்றத்தில் முதன்மை அமர்வு முன் பிற்பகல் 2.45 மணி அளவில் விசாரணைக்கு வந்தது. வரிசை எண் 23-ல்  வழக்கு

விசாரணை இருந்தாதால் மதியத்துக்குள் விசராணைக்கு வரும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.அனால் பிற்பகலே விசராணைக்கு வந்தது.ஒரு வருட வழக்கறிஞர் திரு.பிரகாஷ் அவர்கள் தன்னுடைய வாதங்களை எடுத்துரைத்தார்.

மேலும் தலைமை நீதிபதி ஜார்கண்ட் மாநிலத்தில் பதவி ஏற்க உள்ளதால் அவர்களுக்கு இன்று பிரிவு உபசார விழா நடைபெற இருந்ததால் நீதி மன்றம் விரைவாக முடிக்கப்பட்டது. எனவே இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு  மீண்டும் நாளை (14.11.2013 ) விசாரணைக்கு வருகிறது

தகுதி தேர்வில் தவறான விடைகளுக்கு மதிப்பெண் வழங்கியுள்ளதாக வழக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு ஐகோர்ட்டு நோட்டீசு

சரியான விடைக்கு மதிப்பெண் அளிக்காததால் சென்னை உயர் நீதி மன்றம் உத்தரவு மேலும் ......

நமது TATA சங்கம் கோரிக்கைக்கு செயல் வடிவம் 


  தொடக்கக்கல்வி இயக்ககத்தின் சார்பில் 2013-14ஆம் ஆண்டிற்கான நாட்காட்டி வெளியீடு

விடுமுறை - 14.11.2013 அன்றைய மொகரம் பண்டிகை 15.11.2013 வெள்ளிகிழமைக்கு மாற்றம் செய்து அரசானை வெளியீடு

 தமிழக அமைச்சர்கள் இலாகாக்கள் இன்றுமாற்றம் 

செய்யப்பட்டன. இதன்படி நிதி அமைச்சர் ஓ.பி. 

பன்னீர்செல்வத்திற்கு கூடுதல் பொறுப்பாக 

பொதுப்பணித்துறை மற்றும் நீர்ப்பாசனம் 

வழங்கப்பட்டுள்ளது. அமைச்சர் வீரமணியிடம் 

இருந்த விளையாட்டு மற்றும் இளைஞர்நலம் 

அமைச்சர் கே.வி., ராமலிங்கத்திடம் 

ஒப்படைக்கப்பட்டது. வீரமணி பள்ளிக்கல்வி துறை 

அமைச்சராக நீடிப்பார்.
லக்னோ: உபி.யில் சமாஜ்வாதி கட்சி ஆட்சி 

நடக்கிறது முதல்வராக ர் அகிலேஷ் யாதவ் 

உள்ளார்.மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான 

சம்பளம் வழங்க வேண்டும்என்பன உள்ளிட்ட 

பல்வேறு கோரி்க்கைகளை வலியுறுத்தி உ.பி.யில் 

அரசு ஊழியர்கள் நாளை முதல் வேலை 

நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். 

இம்மாநிலத்தில் 200-க்கும் மேற்பட்ட அரசு 

ஊழியர்கள் சங்கங்கள் உள்ளன. இது தொடர்பாக 

அரசுடன் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தின.இதில் 

உடன்பாடு எட்டப்பட வில்லை இதையடுத்து 

நாளை முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் 

இறங்க முடிவு செய்துள்ளன. இந்த போராட்டத்தில் 

16 லட்சம் அரசு ஊழியர்கள் பங்கேற்க முடிவு 

செய்துள்ளனர்.

மொஹரம் விடுமுறையில் மாற்றம் - நவம்பர் 14 ஆம் தேதிக்கு பதில் நவம்பர் 15 ஆம் தேதி விடுமுறை

click here-: F.No.l2/10/2013-JCA-2 Government of India Change in the date of Holiday onthe occasion of Muharram -reg.

மொஹரம் பண்டிகையை முன்னிட்டு வரும் 15ம் தேதி விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. முன்னதாக நவம்பர் 14ம் தேதி மொஹரம் பண்டிகையை முன்னிட்டு விடுமுறை என அறிவிக்கப்பட்டிருந்தது. பிறை தென்படாததால் நவம்பர் 15ம் மொஹரம் என தலைமை ஹாஜி அறிவித்துள்ளார்.

மக்கள் நலப்பணியாளர்கள் பணிநீக்கம் விவகாரம்.. உயர்நீதிமன்ற உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது...


Candidate Instruction for TET Certificate verfication

டி.இ.டி. தேர்வு: தேர்ச்சி பெறாதவர்களை குறி வைத்து உலா வரும் ஊழல் கும்பல்கள்

தூத்துக்குடி: தமிழ்நாடு முழுவதும் டி.இ.டி. தேர்வில் வெற்றி பெற்ற அனைவருக்கும் ஆசிரியர் வேலை கிடைக்குமாஎன்ற கேள்வி எழுந்துள்ள நிலையில்வெற்றி பெறாதவர்களையும் வெற்றி பெற
வைக்கும் முயற்சியில் தமிழ்நாடு முழுவதும் ஊழல் கும்பல் ஒன்று முழு முயற்சியில் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இடைநிலை ஆசிரியர் தர ஊதியம் மாற்றம், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் ரத்து என 2 கோரிக்கைகளை முன் வைத்து போராட டிட்டோஜாக் கூட்டத்தில் முடிவு

இன்று சென்னையில் நடைபெற்ற டிடோஜாக் கூட்டத்தில் தொடக்கக்கல்வித்துறையை சார்ந்த முக்கிய 7ஆசிரியர் இயக்ககங்கள் பங்கேற்றன. கூட்டத்தில் இடைநிலை ஆசிரியர் தர ஊதியம் மாற்றம் மற்றும் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி டிட்டோஜாக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இதன் முதற்கட்டமாக வருகிற நவம்பர் 13ஆம் தேதி அனைத்து ஆசிரியர் சங்கங்களை சேர்ந்த தலைவர்கள் அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகளை சந்திப்பதென முடிவெடுக்கப்பட்டது.
அதற்கடுத்தகட்ட கூட்டம் வருகிற நவம்பர் 20ஆம் தேதி தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் தலைமையகத்தில் கூடுவதென முடிவு செய்யப்பட்டது.

ஆசிரியர் தேர்வு வாரியம் தொடர்பாக எந்த சந்தேகமாக இருந்தாலும் நேரில் வரலாம். அல்லது 7373008134 மற்றும் 7373008144 ஆகிய செல்போன்களில் தொடர்பு கொள்ளலாம்.

ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு மனு கொண்டுவருபவர்களுக்கு கம்ப்யூட்டர் உதவியுடன் உடனடியாக பதில் அளிக்கிறார்கள்.


ஆசிரியர் தேர்வு வாரியம்

தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர்களை தேர்வு செய்யும் பணியை ஆசிரியர் தேர்வு வாரியம் செய்கிறது. அதுமட்டுமல்ல அரசு என்ஜினீயரிங் கல்லூரிகளில் உதவி பேராசிரியர்களை எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்கிறது. மேலும் அரசு கலை கல்லூரிகளுக்கு உதவி பேராசிரியர்களை தேர்வு செய்கிறது. இப்படியாக வருடம் முழுவதும் ஆசிரியர்களை தேர்வு செய்யும் பணியை நடத்தி வருகிறது.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான ஜனவரி 2014 -க்கான அகவிலைப்படி உயர்வு 10 முதல் 12 சதவீதமாக உயர்த்தலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான ஜனவரி 2014 -க்கான அகவிலைப்படி உயர்வு 10 முதல் 12 சதவீதமாக உயர்த்தலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. செப்டம்பர் 2013 மாதத்தில் மத்திய தொழிலாளர் துறை மூலம் வெளியிட்ட இந்திய நுகர்வோர் குறியீட்டு எண் (AICPIN) அத்தியாவசிய பொருட்கள் விலை ஏற்றத்தின் காரணமாக செப்டம்பர் மாதத்தில் 1புள்ளி அதிகரித்துள்ளது. அதேபோல் விலை ஏற்றம் அடுத்த 3 மாதத்தில் இந்த விலைவாசி தொடர்ந்து உயரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஒய்வூதியதரர்களுக்கான அகவிலைப்படி 10% முதல் 12% ஆக உயரக்கூடும்

ஆசிரியர்கள் சங்கங்கள் கூட்டு போராட்டம் நடத்த முடிவு

ஆசிரியர்கள் சங்கங்கள் கூட்டு போராட்டம் நடத்த முடிவு மேலும் இது தொடர்பாக

டி.ஆர்.பி.,க்கு அடுத்த சிக்கல் - நீதிமன்றம் செல்ல தயாராகும் பாதிக்கப்பட்டவர்கள்

முதுகலை ஆசிரியர் தேர்வு விவகாரம்இடியாப்ப சிக்கலாக மாறியதில் மூச்சுவிட முடியாமல் திணறி வரும் டி.ஆர்.பி.,க்கு,அடுத்த நெருக்கடி உருவாகி உள்ளது. டி.இ.டி.தேர்வின்,உத்தேச விடைகளை
டி.ஆர்.பி., வெளியிட்டபோதுகுளறுபடியான கேள்விகள்,விடைகள் குறித்துதேர்வர்கள் அளித்த விண்ணப்பங்களின் மீதுடி.ஆர்.பி.சரியான முடிவை எடுக்கவில்லை என,தேர்வர்கள் குற்றம் சாட்டுகின்றனர். சரியான விடைகளுக்கு,மதிப்பெண் அளிக்காததால்ஒரு மதிப்பெண்இரு மதிப்பெண் வித்தியாசத்தில் தோல்வியுற்ற தேர்வர்கள் பலரும் கோர்ட்டில் வழக்கு தொடர முடிவு எடுத்துள்ளனர்.

1,743 பேரின் பணி நியமனம் கேள்விக்குறி

தமிழக அரசு 2010-11-ம் ஆண்டுக்கான 1743 ஆசிரியர்களின் பணியிடங்களைத் தோற்றுவித்து 3.6.2010-ம் தேதி அரசாணை (எண் 153)
வெளியிட்டது.

தமிழக அரசு 2010-11-ம் ஆண்டுக்கான 1743 ஆசிரியர்களின் பணியிடங்களைத் தோற்றுவித்து 3.6.2010-ம் தேதி அரசாணை (எண் 153) வெளியிட்டது. இதில் மாநில பதிவு மூப்பு அடிப்படையில் நிரப்பப்பட வேண்டியவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி 2011 டிசம்பர் 34 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.

பள்ளிக்கல்வி- EMIS - பள்ளிக்கல்வி இயக்கத்தின் கட்டுப்பாட்டிலுள்ள அனைத்துவகை மேலாண்மையின் கீழ் செயல்படும் உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் புகைப்படும் எடுக்க உத்தரவு

TET RESULT -CONFUSION STARTS


இது, "தினமலர்' நாளிதழில், திங்கள்தோறும், வெளியாகவிருக்கும் புதிய பகுதி."நான், இந்த தேசத்தை நேசிக்கிறேன்; எனது கடமையை செய்ய, ஒருபோதும் லஞ்சம் வாங்கமாட்டேன்...'என, வெளிப்படையாக அறிவித்து, கண்ணியத்துடன் கடமையாற்றி, மற்றவர்களுக்கு முன் உதாரணமாக திகழ விரும்பும் அரசு அதிகாரிகள், ஊழியர்களின் விவரம், இப்பகுதியில் வெளியாகும். விருப்பமுள்ள அதிகாரிகள், ஊழியர்கள் தங்களது பாஸ்போர்ட் அளவு போட்டோ, பெயர், வகிக்கும் பதவி, பணியாற்றும் துறை, தொலைபேசி எண் குறித்த விபரங்களை அனுப்பலாம்.
அரசு அதிகாரிகள், ஊழியர்கள் என்றாலே, "லஞ்சம் வாங்குபவர்கள்' என்ற எண்ணம், பெருவாரியான மக்களிடம் மேலோங்கியுள்ளது. குறிப்பிட்ட ஒரு சாராரின் லஞ்ச முறைகேடுகள், ஒட்டுமொத்த பணியாளர்கள் மீதும் கறை பூசச்செய்து விடுகிறது. இதனால், வெட்கித் தலைகுனியும் பலரும், "லஞ்சம் வாங்குவது போன்ற ஈனச் செயலில் நாங்கள் ஈடுபடுவதில்லை. ஒட்டுமொத்த பணியாளர்கள் மீதும் பழி சுமத்துவது நியாயமல்ல...' என, குமுறுகின்றனர். இவர்களின் மனக் காயத்துக்கு மருந்திடுவதே,
"லஞ்சம் தவிர்! நெஞ்சம் நிமிர்!' சிறப்பு பகுதியின்

குழந்தைகள் கற்பதற்கான பயன்மிகு வலைதளங்கள்!


         உங்கள் குழந்தைக்கு ஆரம்ப நிலையில் வீட்டிலிருந்தபடியே கற்றுக்கொடுக்க நீங்கள் விரும்பினால், அதற்கு சிறந்த ஒரு உபகரணம் இணையதளம்தான். அதில் பல சிறப்பான வலைதளங்கள் உள்ளன. அதன்மூலம் உங்கள் குழந்தை, கற்றலை நன்கு அனுபவித்து தொடர முடியும்.

           உங்கள் குழந்தையின் கற்றலுக்கு உதவக்கூடிய சில முக்கிய வலைதள விபரங்கள் இங்கே தரப்பட்டுள்ளன.
www.starfall.com

பள்ளி செல்வதற்கு முன்னதாக, ஒரு குழந்தை வாசித்துப் பழகுவதற்கு ஒரு நல்ல வாய்ப்பை தருவது இந்த இணையதளம். Alphabets, Learning to read, Its fun to read and I am reading என்ற 4 நிலைகளில் வாசித்தல் செயல்பாடுகள் இதில் உள்ளன. புதிய வார்த்தைகளை சொல்லித் தருவதற்கான எளிய விளையாட்டுகளும், சிறுகதை புத்தகங்களும் உள்ளன.

நமக்கு விருப்பமான புத்தகத்தை நாம் தேர்வுசெய்து, ஒவ்வொரு பக்கமாக செல்லலாம். உங்களுக்கு ஒரு வார்த்தை தெரியவில்லை எனில், அதை கிளிக் செய்தால், அது phonetic அடிப்படையில் படிக்கப்படும். இதன்மூலம், குழந்தைகள் தங்களின் ஆரம்பநிலை வாசித்தலை அருமையாக தொடங்கலாம்

கற்பித்தல் பாதி கணக்கெடுப்பு பாதி : அலைக்கழிக்கப்படும் ஆசிரியர்கள்

கற்பித்தல் பாதி கணக்கெடுப்பு பாதி : அலைக்கழிக்கப்படும் ஆசிரியர்கள் பல்வேறு கணக்கெடுப்புவாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம் என கற்பித்தலுடன்பல பணிகள் கூடுதலாக செய்ய வேண்டி
உள்ளதால், ஆசிரியர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

15,000 பேருக்கு அரசுப்பள்ளி ஆசிரியர் பணி உறுதி

டி.இ.டி  தேர்வில் தேர்ச்சி பெற்ற 27,000 பேரில் 15,000 பேருக்கு அரசுப்பள்ளி ஆசிரியர் பணி உறுதி மேலும்12ஆயிரம்பேருக்கு ஏமாற்றம். டி.இ.டி.தேர்வில்,தேர்ச்சி பெற்ற, 27 ஆயிரம் பேரில், 15 ஆயிரம் பேருக்குஅரசு பள்ளிகளில்ஆசிரியர் வேலை உறுதி; 12 ஆயிரம் பேர்ஏமாற்றம் அடையும் நிலை எழுந்துள்ளது.

தமிழ்நாட்டில் மத்திய அரசு தனியார் கூட்டுமுயற்சியில் துவங்கப்பட இருக்கின்ற 356 சி.பி.எஸ்.இ. பள்ளிகள் பட்டியல் மாவட்டம் வாரியாக

ஆசிரியர் தகுதித்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்கள் பட்டியல் வெளியீடு

முதல் தாள் (இடைநிலை ஆசிரியர் தேர்வு)
1. சி. இராஜம்மாள் - ஈரோடு மாவட்டம் - 126 மதிப்பெண் - முதல் இடம்

2. பி. சத்யா - திண்டுக்கல் மாவட்டம் - 122 மதிப்பெண் - இரண்டாவது
இடம்
ஆர்.இராமசந்திரன் - விழுப்புரம் மாவட்டம் - 122 மதிப்பெண்

பள்ளிக்கல்வி - அனைத்து CEO / ACEO / DEO / DEEO / IMS ஆய்வுக்கூட்டம் 09.11.2013 அன்றைய தினத்திற்கு ஒத்திவைப்பு

ஆசிரியர் நியமனத்திற்கு வெயிட்டேஜ் மதிப்பெண் 

கணக்கிடுவது எப்படி?

Click here -G.O-252,dt 5.10.2012 for TET Weigtage marks 

ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு 60 சதவீத மதிப்பெண் (150க்கு 90 மதிப்பெண்) எடுக்க வேண்டும். இடைநிலை ஆசிரியர் நியமனத்தைப் பொருத்தவரையில், ஆசிரியர் நியமனம் தொடர்பான சுப்ரீம் கோர்ட்டு வழக்கில் தீர்ப்பு வரும்வரை தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் மாநில அளவிலான பதிவுமூப்பு அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள். பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்குதகுதி தேர்வு மதிப்பெண்பிளஸ்2 மதிப்பெண்பட்டப் படிப்பு மற்றும் பி.எட். மதிப்பெண் ஆகியவற்றின் அடிப்படையில் நியமனம் நடைபெறும். தகுதித்தேர்வுக்கு 60 மதிப்பெண்ணும்பிளஸ்2 தேர்வுக்கு 15 மதிப்பெண்ணும்பட்டப் படிப்புக்கு 15 மதிப்பெண்ணும்பி.எட். படிப்புக்கு 15 மதிப்பெண்ணும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. மொத்தம் 100 மதிப்பெண். தகுதித்தேர்வில் ஒருவர் எடுக்கும் மதிப்பெண் 60க்கு மாற்றப்படும். பிளஸ்2டிகிரிபி.எட். தேர்வில் மதிப்பெண் ஒதுக்கீடு விவரம் பின்வருமாறு:

12ம் வகுப்பு
90 சதவீதம் மற்றும் அதற்கு மேல் மதிப்பெண் பெற்றிருந்தால் – 10 (அதிகபட்ச முழு மதிப்பெண்)
80 சதவீதம் முதல் 90 சதவீதத்திற்குள் – 8 மதிப்பெண்
70 சதவீதம் முதல் 80 சதவீதத்திற்குள் – 6 மதிப்பெண்
60 சதவீதம் முதல் 70 சதவீதத்திற்குள் – 5 மதிப்பெண்
50 சதவீதம் முதல் 60 சதவீதத்திற்குள் – 2 மதிப்பெண்
பட்டப் படிப்பு
70 சதவீதம் மற்றும் அதற்கு மேல் – 15 மதிப்பெண் (முழு மதிப்பெண்)
50 சதவீதம் முதல் 70 சதவீதத்திற்குள் – 12 மதிப்பெண்
50 சதவீதத்திற்கு கீழ் – 10 மதிப்பெண்
நெல்லை DEEO அலுவலகம் முன்பு   TATA  சார்பில் 

பள்ளிகல்விதுறையில்  1000 கோடி ஊழல்  மீது 

 நடவடிக்கை  எடுக்க கோரிவெளியிருப்பு 

 போராட்டம் 














அகஇ - 2013-14ம் ஆண்டில் மாணவர்களின் கல்வி தர மேம்பாட்டை அளவிடும் பொருட்டு அரசு / நகராட்சி / நலத்துறை / உதவி பெறும் தொ / ந.நி / உ.நி / மே.நி பள்ளிகளில் 3, 5 மற்றும் 8ம் பயிலும் மாணவர்களிடம் அடைவுத் தேர்வு மேற்கொள்ள முடிவு

பொது சேவைகள் - பல்வேறு பல்கலைக்கழங்களால் வழங்கப்படும் இளங்கலை / முதுகலை பட்டப் படிப்புகள் இணையானதாக கருதி தமிழக அரசு ஆணை வெளியீடு.

paper 1

12596 person passed which is 4.80% in 262187 canditates

TET தேர்வு முடிவு வெளியீடு

                                                

தமிழகத்தில் கடந்த  ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஆசிரியர் தகுதி தேர்வு முடிவு வெளியீடு .சென்னையில் உள்ள ஆசிரியர் தேர்வு வாரியத்தின் 
(TRB) தகவல் பலகையில் மதிப்பெண்கள் ஒட்டப்பட்டுள்ளது.

Source-jaya+

மேலும் TRB - WEBSITE-ல்  தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும்

SSA SPD ஆய்வு கூட்ட அறிக்கை: நாள் 18.10.2013- மேற்கண்ட அறிவுரைகள் வழங்கப்பட்டன.

த.அ.உ.ச 2005 - பி.எஸ்.சி., பி.எட்., முடித்த பின் பி.ஏ., (ஆங்கிலம்) மூன்றாண்டுகள் படித்தவர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றபின் ஆங்கில பட்டதாரி ஆசிரியராக பணியமர்த்தலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் பதில்.


தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்துக்கு மழை...





சென்னை: தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்துக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக நல்ல வெயில் அடித்து வந்தது. இந்நிலையில், சென்னை உள்பட தமிழகத்தில் பல பகுதிகளில் நேற்று பலத்த மழை பெய்தது. காலை நேரத்தில் பெய்த மழையால் தீபாவளி பட்டாசுகள் வெடிக்க முடியாத நிலை ஏற்பட்டது. அதன் பின்னர், காலை 10 மணியளவில் வெயில் அடிக்க தொடங்கியது. இதனால், பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்தனர்.
   
இந்நிலையில், சென்னை எழும்பூர், திருவல்லிகேணி, சென்ட்ரல், புரசைவாக்கம், கோயம்பேடு, வடபழனி, அண்ணா நகர், அமைந்தகரை சாந்தோம், பட்டினப்பாக்கம் மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று அதிகாலை 2 மணி முதல் 5 மணி வரை பலத்த மழை பெய்தது. அதன் பின்னர், காலை 7 மணி வரை சாரல் மழை அடித்து கொண்டிருந்தது. இதனால், பல இடங்களில் சாலைகளில் மழைநீர் தேங்கியது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறுகையில், இலங்கை அருகே வங்க கடலில் குறைந்த தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அடுத்த 24 மணி நேரத்துக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் மழை பெய்ய கூடும் என்றனர்
.

தமிழ்நாடு பள்ளிகல்வித்துறை -INCENTIVE மற்றும் INCREMENT பெறுவதற்கான-அரசாணை -OLD IS GOLD- G.O

EMIS - முறையில் பதியப்பட்ட  மாணவர்களின் விபரங்களில் மாணவனின் ஆதார் அடையாள அட்டையில் உள்ள EID/UID எண்ணினை பதிவு செய்தல் சார்பான  - பள்ளிக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் 


தமிழகத்தில் புதிதாக 356 சி.பி.எஸ்.இ. பள்ளிகள்

தமிழ்நாட்டில் மத்திய அரசு தனியார் கூட்டுமுயற்சியில் 356 சி.பி.எஸ்.இ. பள்ளிகள் தொடங்கப்படுகின்றன. இதையடுத்து, அரசு பள்ளிகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.மாணவ, மாணவிகளுக்கு உயர்தரமான கல்வி கிடைத்திடும் வகையில் மத்திய மாதிரி பள்ளி (ராஷ்ட்ரிய ஆதர்ஷ் வித்யாலயா) என்ற திட்டத்தை நாடு முழுவதும் செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது.

‘யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை’ செவ்வக கட்டத்தில் ‘நோடா’ பட்டன்....




புதுடெல்லி : தேர்தலில் போட்டியிடும் எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்க விரும்பாத வாக்காளர்கள், அதை பதிவு செய்வதற்காக, வாக்குப்பதிவு இயந்திரத்தில் செவ்வக வடிவ கட்டத்தில் ‘நோடா’ பட்டன் சேர்க்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தேர்தலில் தங்கள் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் யாருக்கும் வாக்களிக்க விரும்பாத வாக்காளர்கள், வாக்குப்பதிவு மூலம் அதை பதிவு செய்வதற்காக ‘யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை’ (நோடா) என்ற பட்டனை வாக்குப்பதிவு இயந்திரத்திலும், வாக்குச்சீட்டிலும் சேர்க்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, இந்த மாதமும், டிசம்பரிலும் நடக்க உள்ள 5 மாநில தேர்தலிலேயே இதை அமல்படுத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக தனி சின்னத்தை அது அறிமுகம் செய்துள்ளது.

கொலைக்களமாகும் கல்வி கூடங்கள்





சென்னையில் தனியார் பள்ளி ஒன்றில் வகுப்பறையில் வைத்து ஆசிரியை உமா மகேஸ்வரி , 9ம் வகுப்பு மாணவர் ஒருவரால் குத்தி கொலை செய்யப்பட்டார். இந்த கொடூர கொலை சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை  உண்டாக்கியது. இந்த சோக சம்பவத்தின் சுவடுகள் கூட ஆறாத நிலையில், மீண்டும் ஓர் அதிர்ச்சி சம்பவமாக தூத்துக்குடி மாவட்டம் கீழ வல்லநாட்டில் இன்பேன்ட் ஜீசஸ் பொறியியல் கல்லூரி முதல்வராக இருந்த சுரேஷ் (49), மாணவர்கள் 3 பேரால்  வெட்டி கொலை செய்யப்பட்டார். 

01.01.2014 முதல் அகவிலைப்படி உயர்வு 100 சதவீததுக்கும் மேலாக உயருகிறது!

செப்டம்பர் - 2013 விலைவாசி குறியீட்டு எண் அக்டோபர் 31 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதன்படி அகவிலைப்படி 95.59% ஆக உள்ளது. ஆகவே 01.01.2014 முதல் அகவிலைப்படி உயர்வு 10சதவீதத்துக்கும் மேலே உயர வாய்ப்பு உள்ளது. அதாவது 01.01.2014முதல் அகவிலைப்படி உயர்வு 100 சதவீததுக்கும் மேலாக உயரும் வாய்ப்பு அதிகம். மேலும் விவரங்களுக்கு