PAGEVIEWERS

குழந்தைகள் கற்பதற்கான பயன்மிகு வலைதளங்கள்!


         உங்கள் குழந்தைக்கு ஆரம்ப நிலையில் வீட்டிலிருந்தபடியே கற்றுக்கொடுக்க நீங்கள் விரும்பினால், அதற்கு சிறந்த ஒரு உபகரணம் இணையதளம்தான். அதில் பல சிறப்பான வலைதளங்கள் உள்ளன. அதன்மூலம் உங்கள் குழந்தை, கற்றலை நன்கு அனுபவித்து தொடர முடியும்.

           உங்கள் குழந்தையின் கற்றலுக்கு உதவக்கூடிய சில முக்கிய வலைதள விபரங்கள் இங்கே தரப்பட்டுள்ளன.
www.starfall.com

பள்ளி செல்வதற்கு முன்னதாக, ஒரு குழந்தை வாசித்துப் பழகுவதற்கு ஒரு நல்ல வாய்ப்பை தருவது இந்த இணையதளம். Alphabets, Learning to read, Its fun to read and I am reading என்ற 4 நிலைகளில் வாசித்தல் செயல்பாடுகள் இதில் உள்ளன. புதிய வார்த்தைகளை சொல்லித் தருவதற்கான எளிய விளையாட்டுகளும், சிறுகதை புத்தகங்களும் உள்ளன.

நமக்கு விருப்பமான புத்தகத்தை நாம் தேர்வுசெய்து, ஒவ்வொரு பக்கமாக செல்லலாம். உங்களுக்கு ஒரு வார்த்தை தெரியவில்லை எனில், அதை கிளிக் செய்தால், அது phonetic அடிப்படையில் படிக்கப்படும். இதன்மூலம், குழந்தைகள் தங்களின் ஆரம்பநிலை வாசித்தலை அருமையாக தொடங்கலாம்.

www.funbrain.com

கணிதம் மற்றும் வாசிக்கும் திறனை இந்த வலைதளம் மேம்படுத்துகிறது. அனைத்துமே, விளையாட்டுக்களை விளையாடுவதன் மூலமாக இணைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் ஆரம்ப வயதிலேயே பகுப்பாய்வு திறனை உங்கள் குழந்தைக்குள் நீங்கள் விதைக்க முடியும். கிரியேடிவிட்டி மற்றும் லாஜிக் அடிப்படையில் இங்கு விளையாட்டுகள் உள்ளன.

ஆன்லைனில் படிக்க காமிக்ஸ் போன்ற புத்தகங்களும் உள்ளன. இந்த இணையதளம், ஒரு சந்தோஷம் நிறைந்த கற்றல் அனுபவத்தை வழங்கும். இதிலுள்ள சில கேம்களை, பெற்றோரும், குழந்தைகளும் சேர்ந்தே விளையாடலாம்.

www.abcya.com

5ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு பல்வேறு வகையான கல்வி மூல வளங்களை இது வழங்குகிறது. கணிதம், கலை மற்றும் பொதுத்திறன் ஆகிய அம்சங்களின் அடிப்படையிலான விளையாட்டுகள் இதில் உள்ளன.

சில விளையாட்டுகள், குழந்தைகளின் திறனாய்வு வல்லமையை வளர்ப்பனவாய் உள்ளன. மேலும், ABC கற்றுக்கொள்ளும் விளையாட்டுகள் உள்பட, பள்ளி செல்வதற்கு முந்தைய காலகட்டத்திற்கு ஏற்ற பல விளையாட்டுகள் உள்ளன.

www.ixl.com

8ம் வகுப்பு வரையில் படிக்கும் குழந்தைகளுக்கு, கணிதம் தொடர்பான திறன்களை வளர்ப்பதற்கு இந்த வலைதளம் பெரிதும் உதவுகிறது. உங்களின் குழந்தை எந்த பிரிவில் பயிற்சி பெற நீங்கள் விரும்புகிறீர்களோ, அந்தப் பிரிவில் நீங்கள் கவனம் செலுத்தலாம். ஒவ்வொரு வகுப்பிற்கும், குறிப்பிட்ட தலைப்புகளில் வகுப்புகளும் இதில் இருக்கும்.

மாணவர்கள், தங்களின் பாடங்களில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தீர்க்கவும் இந்த வலைதளம் உதவுகிறது. இதன்மூலம் உயர் வகுப்புகளுக்கு செல்லும்போதே, அவர்கள் ஒரு வலுவான அடித்தளத்துடன் செல்ல முடிகிறது.

www.kidsknowit.com

ஒவ்வொரு பாடம் தொடர்பாகவும், உங்களின் குழந்தை தெளிவான மற்றும் சிறப்பான அறிவைப் பெறுவதற்கு ஏற்ற வகையில், இந்த வலைதளம் பல அம்சங்களைக் கொண்டுள்ளது. இங்கு படங்கள் மற்றும் இசையும் உள்ளன. ஒவ்வொரு பாடத்திற்கும் ஒரு தனி இணைப்பு உண்டு. எனவே, ஒரு மாணவர், தனக்கு தேவையான பாடத்தின் இணைப்புக்கு சென்று, அதைப் பற்றிய தெளிவான அறிவைப் பெறலாம்.

No comments:

Post a Comment