PAGEVIEWERS

மக்கள் நலப்பணியாளர்கள் பணிநீக்கம் விவகாரம்.. உயர்நீதிமன்ற உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது...



வழக்கை விசாரித்த நீதிபதி சுகுணா மக்கள் 
நலப்பணியாளர்களுக்கு மீண்டும் வேலை தர வேண்டும் என்று உத்தரவிட்டடார். தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல் முறையீடு செய்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் வேலை தர தேவையில்லை என்றும், அதற்கு பதிலாக 5 மாத ஊதியம் அவர்களுக்கு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து, மக்கள் நலப்பணியாளர்கள் சங்கம் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இதனையடுத்து இந்த மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது வாதிட்ட மக்கள் நலப்பணியாளர்கள் தரப்பு வழக்கறிஞர், அரசியல் காரணங்கள் கருத்தில் கொண்டு மக்கள் நலப்பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறினார். மனுதாரர் தரப்பு வழக்கறிஞரின் வாதத்தை அரசு தரப்பு வழக்கறிஞர் மறுத்தார்.

இருதரப்பு வாதங்களை கேட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள், மக்கள் நலப்பணியாளர்கள் நீக்கப்பட்டதற்கான உண்மை காரணத்தை கண்டறிய வேண்டும் என்று கூறினர். மேலும், திடீரென 13,500 மக்கள் நலப்பணியாளர்களை நீக்கியது சரியானது அல்ல என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

மேலும், இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று கூறிய நீதிபதிகள், பணி நீக்கம் செய்ய உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவையும் ரத்து செய்தனர். மேலும், இந்த வழக்கை இரு தரப்பினரும் தள்ளிப்போடும் நோக்கில் செயல்பட கூடாது என்றும் நீதிபதிகள் கூறியுள்ளன
ர்

No comments:

Post a Comment