PAGEVIEWERS

திண்டுக்கல்: கவுன்சலிங்கின் போது தலைமையாசிரியையை கேலி, கிண்டல் செய்ததாக தலைமையாசிரியர்கள் மீது போலீசார் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.திண்டுக்கல் சிஎஸ்ஐ போர்டிங் நடுநிலைப்பள்ளியில் ஆசிரியர் பணி மாறுதல் கலந்தாய்வு நேற்றுமுன் தினம் நடந்தது. இதில் திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். குஜிலியம்பாறை
ஊராட்சி ஒன்றியம் வடகம்பாடி ஆரம்பப்பள்ளி தலைமையாசிரியர் அய்யப்பன் (43) கலந்து கொண்டார். இவரை நாகனம்பட்டி பள்ளி தலைமையாசிரியை இந்திரா (46) ஆபாசமாக பேசி தாக்கியதாக, அய்யப்பன் திண்டுக்கல் வடக்கு போலீசில் புகார் செய்தார். அவர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.அதேபோல அய்யப்பன் மற்றும் திருக்கோகர்ணம் பள்ளி தலைமையாசிரியர் முருகன் ஆகிய இருவரும் சேர்ந்து தனது ஊனத்தைப் பற்றி கேலி, கிண்டல் செய்து சாதியை சொல்லி மிரட்டியதாக இந்திராவும் வடக்கு போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் இருவர் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர். கவுன்சலிங்கில் ஆசிரியர்கள் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment