PAGEVIEWERS

இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வின் போது தனி ஊதியம் 

ரூ.750/- அடிப்படை ஊதியத்துடன் சேர்த்து கணக்கில்

எடுத்துக்கொள்ளப்பட்டு ஊதிய நிர்ணயம் செய்யப்படுதல் சார்ந்து 

நண்பர்களுக்கு எழுந்துள்ள சந்தேகம் (ஆதங்கம்) சார்ந்த விளக்கம்.


    நிதித்துறை கடித எண்.8764, நாள்.18.4.12. இல்  இத்தனி ஊதியம்  அடிப்படை ஊதியத்துடன் சேர்த்து கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு ஊதிய நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

   இதே கடிதத்தில் பார்வை 5 - இல் குறிப்பிடப்பட்டுள்ள கடிதத்திலும் இதற்கான விளக்கம் 19.7.11 இல்  அளிக்கப்பட்டுள்ளது.

 ஆனால் சில ஒன்றியங்களில் பதவி உயர்வின் போது 3% ஊதிய உயர்வுக்கு மட்டுமே இத்தனி ஊதியம் கணக்கில் கொள்ளப்படுகிறது. அடிப்படை ஊதியத்துடன் சேர்த்துக்கொள்ளப்படுவதில்லை.             
( ஆதங்கப்படுபவர்கள் எல்லோரும் ஆறுதல் அடைந்துகொள்ளுங்கள்.)

  சில இடங்களில் பதவி உயர்வின் போது அடிப்படை ஊதியத்துடன் இத்தனி ஊதியத்தை சேர்த்து ஊதிய நிர்ணயம் செய்கின்றனர். (ஆதங்கப்படுகிறவர்கள் மூன்றாவது ஒரு தெளிவுரையை பெற்று இந்த பயனையும் கெடுத்து விடுங்கள். மன நிம்மதி பெறுங்கள்.)

    புதிய நியமனதாரர்கள் 1.6.2009 - க்கு பின்னர் நியமிக்கப்பட்டவர்களுக்கு ஆறாவது ஊதிய குழுவினால் ஊதிய இழப்புதான். பழைய ஊதிய விகிதமே இருந்தால் கூட அவர்களுக்கு, தற்போது பெற்றுவருவதைவிட கூடுதல் ஊதியம் கிடைத்திருக்கும். இதன் விளக்கத்தை மற்றொரு பதிவில் விளக்குகிறேன். இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய பாதிப்புகளை முன்வைத்து கோரிக்கை மற்றும் போராட்டங்கள் நடத்தி இன்று இடைநிலை ஆசிரியர்களை தவிர மற்றவர்கள் அனைவரும் தேவையானவற்றை பெற்றுவிட்டனர். தற்போது பதவி உயர்வின் போது  தனி ஊதியம் அடிப்படை ஊதியத்துடன் சேர்க்கப்படுவது குறித்து சந்தேகம் கேட்பதாக கூறி ஆதங்கத்தை வெளிக்காட்டுவது வேதனையான ஒன்று.

முந்தைய ஊதிய குழுவில் இருந்த தனி ஊதியம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

தலைமை ஆசிரியர் பதவி உயர்வின் போது 5% தனி ஊதியம் அளிக்கப்பட்டுவந்தது.  மற்றும் தேர்வு நிலையின் போது அந்த ஊதிய நிலையில் அமையாத தொகை தனி ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டது. அடுத்து வந்த ஆறாவது ஊதிய குழுவில் இத்தனி  ஊதியங்கலெல்லாம் அடிப்படை ஊதியத்துடன் சேர்த்துதான் ஊதிய நிர்ணயம் செய்யப்பட்டது. 

இன்று இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வின்போது தனி ஊதியம் அடிப்படை ஊதியத்துடன் சேர்க்கப்படுவதில் எத்தனை கேள்விகள், கணக்குப்பார்த்தல்கள் !!!!!!!
இடைநிலை ஆசிரியர்களே விழிப்படையுங்கள்.

    பதவி உயர்வின்போது தனி ஊதியம் அடிப்படை ஊதியத்துடன் சேர்க்கப்பட்ட விவரம் மதுரை தணிக்கை அலுவலக கடித நகல் மூலம் அறியலாம். இதனை நம் பெரும்பாலான கல்விசார் வலைதளங்கள்  வெளியிட்டதை இங்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். 

    நன்றி.

No comments:

Post a Comment