PAGEVIEWERS

சென்னையில் உள்ள தமிழக அரசுக்கு சொந்தமான அச்சகத்தில் ஏற்பட்ட தீ விபத்தி்ல் ஆவணங்கள் எரிந்து சாம்பலானது.

சென்னை தங்கசாலையில் அரசு மைய அச்சகத்தில் பள்ளிக் கல்வித்துறைக்கு தேவையான அனைத்து பாட புத்தகங்கள் மற்றும் கல்வித் துறைக்கு தேவையான முக்கிய ஆவணங்கள் அச்சடிக்கப்படுகின்றன. அரசுக்கு தேவையான அறிக்கைகள், காலண்டர், டைரி போன்றவையும் இங்கு அச்சடிக்கப்படுகின்றன. இங்கு 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள், மாற்றுத் திறனாளிகள், பெண்கள் வேலை செய்து வருகின்றனர். இன்று காலை 9.30 மணியளவில் இங்குள்ள ஒரு
அறையில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக, அச்சக ஊழியர் கோதண்டராமன் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தார். தீயணைப்பு படையினர் விரைந்து வந்து 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் அச்சக அறையில் இருந்த முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசமாயின. அச்சகத்தில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் நிருபர்களும், புகைப்படகாரர்களும் அங்கு விரைந்து சென்றனர். அப்போது, புகைப்படக்காரர்கள் உள்ளே புகுந்து படம் எடுக்க முயன்றனர். அவர்களை தாக்கிய ஊழியர்கள் சிலர், கேமரா, செல்போனை பறித்தனர். பத்திரிக்கையாளர்கள் போராட்டம் இதை கண்டித்து பத்திரிகையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த அச்சக இயக்குனர் ஆபிரகாமிடம் பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டது பற்றி தெரிவிக்கப்பட்டது. அப்போது அவருக்கும் பத்திரிகையாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் பத்திரிகையாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்கு ஏழு கிணறு போலீசார் விரைந்து வந்து இருதரப்பினரிடையே சமரசம் பேசினர். இதையடுத்து பரபரப்பு அடங்கியது. 

No comments:

Post a Comment