PAGEVIEWERS

இரண்டு கோரிக்கைகள் மட்டும் வைத்த போராட்டம் என்றால் அதற்கு மறுகேள்வியே இல்லை.--டாடா வாழ்த்தி வரவேற்கும் ்...டாட்டா கிப்சன் ்...

போராட்டம் வேண்டாம் என்றோ, போராட்டத்திற்குப் போக வேண்டாம் என்றோ யாரிடமும் சொல்லவில்லை. போராட்டம் வேண்டாம் என்று நாங்கள் ( இளைய தலைமுறை) சொல்லவில்லை. போராட்டத்தின் முக்கிய அம்சமாக என்ன உள்ளது, என்ன இருக்க வேண்டும் தற்போது என்பது கேள்வியாக அனைவரது மனதிலும் உள்ளது. 2800 கிரேடு பேவில் உள்ள இடைநிலை ஆசிரியர்கள் அனைவரும் இந்த 6 வது ஊதியப் பரிந்துரை முழுவதும் பெரும் பொருளாதார இழப்பைச் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். இந்த நிலை நீடித்தால் அடுத்த ஊதியக்குழுவில் இன்னும் மாபெரும் இழப்பு. இதைக் கருத்தில் கொண்டு இ. ஆ ஊதியம் மற்றும் cps cancel ஆகிய இரண்டு அதிமுக்கிய கோரிக்கையை மட்டுமே வைத்து நம் தொடக்கப்பள்ளி சங்கங்கள் மட்டும் இணைந்து ( அரசு கூற்றின்படி இ.ஆ 1,00,000 பேர்+ ) போராட்டம் செய்திருக்கலாமே? என்பது பலரது கேள்வி. அதைவிடுத்து 15 கோரிக்கைகள்( உட்பிரிவு வேறு) எதற்கு? மற்றவர் கோரிக்கையும் பெற வேண்டியதுதான், ஆனால் அதிமுக்கியமான கோரிக்கைகளை அதுவும் இத்தனை வருடம் இதோ, அதோ என்று ஏமாற்றிய கோரிக்கைகளை மட்டும் வைத்திருக்கலாமே?

No comments:

Post a Comment