PAGEVIEWERS

-TATA -சங்கம் போலியான இந்த போராட்டத்தில் கலந்து கொள்ளாது.---டாட்டா கிப்சன் ...

என் இனிய இ.நி.ஆசிரியர் சமுதாயமே! மார்ச் - 8 ல் அவசியம் கலந்து கொள்ளுங்கள். அது நம் இ.நி.ஆ. சமுதாயம் மீது பழி வராமலிருக்க உதவிடும். ( அப்படியே TATA மீதும் பழி வராது ) போராட ஆக்கபூர்வமான வழியை விட்டுவிட்டு TATA பொய் சொல்கிறது ஏமாற்றுகிறது என்று தூற்றித்திரியும் சா(ன்றோ)ர்களின் கவனத்திற்கு மற்றும் இ.நி.ஆ. சமுதாயத்திற்கான விழிப்புணர்வு மடல் : முந்தைய கால போராட்டங்களில் இ.நி.ஆ. அதிகம் பங்கேற்கவில்லை. எனவே தான் இன்னமும் ஊதிய முரண்பாடு தீர்க்கப்படவில்லை என்று நம் மீது ஒரு பழி இருந்து கொண்டே உள்ளது. எனவே அனைவரும் கலந்து கொள்ளுங்கள். நாம். ஏமாற்றப்படாமல் இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருங்கள். நம் பிரச்சனைகளை முன்வைத்து போராடி, இறுதியில் நம்மைத் தவிர்த்து இவர்களுக்குரிய பயன்களையெல்லாம் பெற்று விட்டனர். இந்திய மக்கள் தொகையைவிட நாங்கள் எண்ணிக்கையில் அதிகம் என்று சொல்லாத குறையாக, நாங்கள் தான் பெரியவர்கள் என்று சொல்பவர்கள் ஜனவரியில் நடந்த முதல் TETOJAC கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. தனிவழியில் சென்றவர்கள் பின்னர் பிப்ரவரியில் நடந்த கட்டத்திலேயே கலந்து கொண்டனர். அப்படி Buildup பண்ணுகிறார்களாம்.யாரும் இதை மறக்கவில்லை. மறைக்கவும் முடியாது. தனியாக வேண்டாம் கூட்டாகவே இருக்கலாம் என லேட்டாக முடிவு செய்திருக்கிறார்கள். இவர்கள் எங்களை விமர்சிக்கிறார்கள் அறிவை விரிவு செய் அகண்டமாக்கு என்று . ஜனவரியில் இது தெரியவில்லையோ! பிப்ரவரியில் தான் இவர்களுக்கு தெரிந்ததோ! சரி அது போகட்டும். முத்தாக கோரிக்கை வைப்பார்கள் என்று பார்த்தால் கொத்தாக கோரிக்கை வைத்திருக்கிறார்கள். முதன்மையான பிரச்சனை இ.நி.ஆசிரியர்களுடையது. அதனை முதல் கோரிக்கையாக வைப்பது போல் வைத்து இ.நி.ஆசிரியர்களுடன், அவர் இவர் என சுவர் விளம்பரம் போலக் குறிப்பிட்டு கோரிக்கை வைத்துள்ளனர். இ.நி.ஆசிரியர்களே உஷார். கட்டாயம் கலந்து கொள்ளுங்கள். அப்போது தான் நீங்கள் உங்கள் உரிமையை கேட்க முடியும். அடுத்தாக இவர்களின் மிகமுக்கிய கோரிக்கையை, திட்டமிட்டு அரசு கண்ணில் பட வேண்டும் என்பதற்காக கடைசியில் வைத்திருக்கிறார்கள். முதலாம் கோரிக்கையை பார்த்து விட்டு கடைசி கோரிக்கையை பார்ப்பார்களாம். என்னே ஐடியா. தொடக்கப்பள்ளிகள் பொறுத்தவரையில் இந்த. கோரிக்கை நிறைவேற்றப்பட்டாலே ஆளுக்கு முந்தி நன்றி சொல்லி விட்டு நடையை காட்டுவார்கள். கடை காலியாகி விடும். இப்படி சொன்னால் காமாலைக்காரனுக்கு பார்ப்பதெல்லாம் மஞ்சளாக தெரியும் என்று தத்துவம் பேசாதீர்கள். உங்கள் P.P. யை யாரும் மறக்க முடியாது. அது போல பதவி உயர்வுக்கு 6% வேண்டுமாம். ஏற்கனவே இ.நி.ஆசிரியர்கள் பெயரைச்சொல்லி போராடி தேர்வு /சிறப்பு நிலைகளுக்கு. 6% பெற்றவர்கள் தானே இக்கூட்டம். மத்திய அரசிலேயே இப்படியொன்று இல்லையென்று நினைக்கிறோம். இ.நி.ஆ. பெயரைச் சொல்லி போராடி, அவர்கள் அதிகம் பங்கேற்கவில்லை என்று குற்றம்சாட்டி இவர்களுக்கு ஆக வேண்டியதை பார்த்து விட்டு அமைதி காப்பதே வாடிக்கையாகிவிட்டதே. இந்த முறை அப்படியொரு நிகழ்வு நடக்காத வண்ணம் கவனமாயிருங்கள். எனவே அனைவரும் கலந்து கொள்ளுங்கள். ஏமாற்றப்படாமல் இருக்க விழிப்பாயிருங்கள்.----டாட்டா வை குறை கூறி கூட்டம் சேர்காதீர்கள் .உங்கள் 5//15//25//35//45//கோரிக்கைகளை விளக்கி கூறி போராட்டத்திற்கு கூட்டம் சேர்த்து கொள்ளுங்கள்

No comments:

Post a Comment