PAGEVIEWERS

என் அன்பிற்கும் மரியாதைக்குரிய ஆசிரியர் சமுதாயமே. அனைவருக்கும் எந்தன் பணிவான வணக்கம். ,,,,???


கடந்த ஜாக்டோ போராட்டத்தில் கலந்தவர்களுக்கு எந்தன் நன்றிகள்.
ஏனெனில் இக்கேள்வி உங்களுக்கு தான்.
எத்தனை இடங்களில் இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு பற்றி பேசப்பட்டது? ???
எத்தனை தலைவர்கள் உண்மையாக இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு கலைய வேண்டும் என்று ஆணித்தரமாக இருந்தார்கள்? ????
ஏன் நிறைய இடங்களில் இடைநிலை ஆசிரியர்கள் ஓரங்கட்டப் பட்டனர் ????
சபிதாவை மாற்றம் வேண்டும் என்பது போராட்டத்தின் கோரிக்கை என்று கூறிய பொழுது அங்கு இருந்தவர்கள் ஏன் அதை எதிர்த்து குரல் கொடுக்க வில்லை? ???
சபிதாவை தெரிந்தவர்க்கு இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு பற்றி தெரியாமல் போனது ஏன்? ??
கூட்டம் கூட்டி அவர்கள் நலனை காக்க இன்னும் எத்தனை நாளைக்கு நீங்கள் அவர்கள் பின் செல்ல போகிறீர்கள்? ???
பல பட்டதாரி ஆசிரியர்கள் பகிரங்கமாக பேசுகிறார்கள் அவர்கள் 4200 பெற்றால் நமக்கு என்ன மரியாதை என்று, ஆனால் நம்மிடம் ஒற்றுமை என்கிறார்கள். இன்னும் எத்தனை நாள் இப்படி ஏமாற போகிறீர்கள்? ????
உங்களுக்கு என்று உண்மையாக உழைக்க ஒரு சங்கம் கூட தமிழகத்தில் இல்லையா? ???
இடைநிலை ஆசிரியர் இனமே உனக்கு என்று உலகில் தனி இடம் உண்டு.
ஒழுக்கம், ஆரம்ப கல்வி, சுகாதாரம் மற்றும் குடும்பநலம் போன்றவற்றை கற்று தரும் நம்மை தொடர்ந்து ஏமாற்றும் அவர்களை ஏன் எதிர்த்து கேள்வி கேட்க தயங்குகிறீர்கள்? ???
நாளை உன் மனக்குமுறல் களை வெளியே கொண்டு வா. உன் நண்பர்களிடம் பேசுங்கள், உண்மை நிலை எடுத்து சொல்லுங்கள், உனக்காக உழைக்க காத்திருக்கும் சங்கத்தை நோக்கி காலடி எடுத்து வையுங்கள்.
நாளைதான் உன் சகாக்களை கூட்டமாக பார்க்கும் கடைசி நாள்.
ஓங்கட்டும் நமது குரல் உரிமைக்காக.
வெற்றி நம்வசம் ஆகட்டும். நாளை நமதே. வெற்றியும் நமதே.
இது உரிமைப் போர், இடைநிலை ஆசிரியர்கள் தகுதிப் போர்.
இதில் நாம் வெல்வது உறுதி.
டாட்டா மட்டுமே இன்றைய சூழலில் இடைநிலை ஆசிரியர்களின் உண்மை நண்பன். இணைந்திடுவோம் டாட்டா வில்.

No comments:

Post a Comment