இரட்டைப்பட்டம் வழக்கு விசாரணை மீண்டும் டிசம்பர் 13ஆம் தேதி அன்று வருகிறது
இன்று ( 25.11.2013) சென்னை உயர்நீதிமன்றத்தில் முதல் அமர்வில் தலைமை நீதியரசர் மதிப்புமிகு ராஜேஸ்குமார் அகர்வால் மற்றும் நீதியரசர் சத்தியநாரயணா முன்னிலையில் 12.15க்கு விசாரணைக்கு
வந்தது. இதில் அரசு தரப்பு வழக்குரைஞர் தன்னுடைய எதிர் உரையை தாக்கல் செய்ய குறைந்தது ஒரு வார கால அவகாசம் வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
அதனை ஏற்றுக்கொண்ட நீதியரசர்கள் அரசு தரப்பு எதிர் உரையை தயார் செய்து அதற்கான பதிலை பெறுவதற்கு இரட்டைப்பட்ட வழக்கறிஞர்களிடம் 10 தினங்களுக்குள் அளிக்க வேண்டும். அவர்கள் அதற்கான பதிலை 13.12.2013க்குள் தயார் செய்து முடித்திருக்க வேண்டும் எனவும், அடுத்த கட்ட விசாரணை13.12.2013க்கு முதல் அமர்வில் நடைபெறும் எனவும் தெரிவித்தனர். டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் நீதிபதிகள் தங்கள் துறைகளை மாற்றிக்கொள்ளும் சூழலில் நீதியரசர் சத்தியநாரயணன் அவர்கள் மதுரை உயர்நீதிமன்ற கிளைக்கு மாற்றப்படவுள்ளதாக தெரிகிறது. எனவே வருகிற 13.12.2013 அன்று நீதியரசர் சத்தியநாரயணன் அவர்கள் இவ்வழக்கிற்காக சிறப்பு வரவாக சென்னை உயர்நீதிமன்றம் முதல் அமர்விற்கு வர உள்ளார். அன்று மதியம்2.15க்கு வழக்கு விசாரணைக்கு வரும். அன்று விசாரணை நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது
No comments:
Post a Comment