PAGEVIEWERS

செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்காக ரூ450 கோடி செலவில் உருவாக்கப்பட்ட மங்கல்யான் விண்கலம், பி.எஸ்.எல்.வி சி-25 ராக்கெட் மூலம் கடந்த 5ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. புவி வட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட்ட மங்கல்யான், பூமியை சுற்றி வருகிறது. இந்நிலையில் மங்கல்யா னின் நீள்வட்ட பாதையை ஒவ்வொரு சுற்றாக அதிகரிக்கும் பணியை பெங்களூரில் உள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டு மையம் கடந்த 7ம் தேதி தொடங்கியது. 


விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ள நியூட்டன் திரவ இன்ஜினை இயக்கி, விண்கலத்தின் நீள்வட்டபாதையை படிப்படியாக ஒரு லட்சம் கி.மீ அதிகரிக்க திட்டமிடப்பட்டது.  கடந்த 11ம் தேதி விண்கலத்தை 71 ஆயிரத்து 623 கி.மீ தூரத்திலிருந்து 78 ஆயிரத்து 276 கி.மீ நகர்த்தியபோது இன்ஜின் நின்று விட்டது. இதையடுத்து, விண்கலத்தை நகர்த்தும் பணி கடந்த 12ம் தேதி தொடங்கியது. விண்கலம் 1 லட்சத்து 18 ஆயிரத்து 642 கி.மீ தூரம் வரை வெற்றிகரமாக நகர்த்தப்பட்டது. 

இந்நிலையில், விண்கலத்தை பூமியிலிருந்து நீள்வட்ட பாதையில் 2 லட்சம் கி.மீ வரை நகர்த்த இஸ்ரோ முடிவு செய்துள் ளது. இந்த பணி டிசம்பர் 1ம் தேதி தொடங்குகிறது.

No comments:

Post a Comment