PAGEVIEWERS

ஐகோர்ட்டில் அரசு தகவல்

கட்டிட அனுமதி பெறாமல் இயங்கும் 19,861 தனியார் பள்ளி, கல்லூரிகள்


மதுரை: தமிழகத்தில் 2 ஆயிரத்து 861 தனியார் கல்லூரிகளும், 17 ஆயிரம் பள்ளிகளும் கட்டிட அனுமதி பெறாமல் இயங்குவதாக, ஐகோர்ட் கிளையில் அரசு தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள கல்வி நிறுவனங்களில் கட்டிடம் கட்ட அனுமதி பெறாத கல்லூரிகளுக்கு சமீபத்தில் நகரமைப்பு அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பினர். கட்டிடங்களுக்கு 15 நாட்களுக்குள் அனுமதி பெறாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என நோட்டீசில்
கூறப்பட்டிருந்தது. இந்த நோட்டீசை ரத்து செய்யக்கோரி, கரூர் செட்டிநாடு இன்ஜினியரிங் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி சார்பில் ஐகோர்ட் கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. 

மனுவில், ‘நாங்கள் ஏற்கனவே புலியூர் பஞ்சாயத்து நிர்வாகத்திடம் கட்டிடம் கட்ட அனுமதி பெற்று விட்டோம். எனவே நகரமைப்பு துறையிடம் தனியாக அனுமதி பெற வேண்டியதில்லை‘ என கூறப்பட்டிருந்தது. மனுவை நீதிபதிகள் சுதாகர், வேலுமணி விசாரித்தனர். இந்த விவகாரம் தொடர்பாக நகரமைப்பு துறை ஆணையாளர் கார்த்திக் அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் 2013ம் ஆண்டு ஜூலை 13ம் தேதி கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தின் நகலை, சிறப்பு வக்கீல் கோவிந்தன் தாக்கல் செய்தார். அதில், ‘நகரமைப்பு அதிகாரிகள் மாநிலம் முழுவதும் கல்வி நிறுவனங்களில் நடத்திய திடீர் ஆய்வில் பல கல்வி நிறுவனங்கள் அனுமதியில்லாமல் கட்டிடம் கட்டியது தெரியவந்துள்ளது. 

தோராயமாக கணக்கிட்டதில் தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 2 ஆயிரத்து 906 இன்ஜினியரிங், மருத்துவ, துணை மருத்துவ, கலை மற்றும் அறிவியில் கல்லூரிகள், பாலிடெக்னிக்குகளில் வெறும் 45 கல்லூரிகள் மட்டுமே கட்டிடங்கள் கட்டுவதற்கு நகரமைப்பு துறையிடம் முன் அனுமதி பெற்றுள்ளன. இது தவிர 17 ஆயிரம் பள்ளிகள் கட்டிட அனுமதி பெறவில்லை. இது மாணவர்களின் பாதுகாப்பில் கல்வி நிறுவனங்கள் காட்டும் அலட்சியத்தை வெளிப்படுத்து கிறது. எனவே அனுமதியில்லாமல் கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு அனுமதியை முறைப்படுத்த மாவட்ட கலெக்டர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்Õ என கூறப்பட்டிருந்தது. இதையடுத்து, நீதிபதிகள் அடுத்த விசாரணை யை நாளை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment