PAGEVIEWERS


தமிழ் உறவுகளே... நாம் தமிழில் பேசவேண்டாம்; இனி தமிழில் பேச முயற்சிப்போம்...

 

இங்கிலாந்தில் 5 லட்சம் தமிழர்கள் தான் வாழ்கிறார்கள் . ஆனால் அவர்களுக்கு மதிப்பளித்து இலண்டன் தொடர்வண்டித்துறை தமிழில் பயணச் சீட்டு பெறுவதற்கு உதவி செய்கிறது. தானியங்கி இயந்திரம் மூலமாக தமிழில் பயணச் சீட்டை தேர்வு செய்ய உதவுகிறது.


தமிழ்நாட்டில் எட்டு கோடி தமிழர்கள் உள்ளனர் . ஆனால் அவர்களுக்கு மதிக்களிக்காமல் இந்தியிலும் ஆங்கிலத்திலும் மட்டுமே பயணச் சீட்டை கொடுக்கிறது இந்திய தொண்டர்வண்டித்துறை. தமிழை பயன்படுத்த மறுக்கிறது. பல முறை நேரில் சென்று மனு அளித்தும் தொடர்வண்டித்துறை நிர்வாகம் தமிழர்களின் புகாரை கண்டு கொள்வதில்லை. தமிழர்களை அலட்சியப்படுத்துகிறது. தமிழக அரசும் இதற்காக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை . நடுவண் அரசின் அராஜக இந்தித் திணிப்பை தமிழக அரசு தட்டிக் கேட்பதாக தெரியவில்லை.

சொந்த நாட்டில் மொழி உரிமை மறுக்கப்பட்டு நிற்கிறது தமிழினம் . இன்று நாம் மொழியுரிமை மறுக்கப்பட்டு நிற்கிறோம் . நாளை குடியுரிமை மறுக்கப்பட்டு நிற்கப் போகிறோம் . இதற்கு நாம் என்ன செய்யப்போகிறோம் ? தமிழ் நாட்டை உண்மையான தமிழினப்பற்றாளர் ஆளும் நிலை வந்தால் தவிர தமிழர்களுக்கும் தமிழ் மொழிக்கும் உயர்வில்லை. இந்த செய்தியை தமிழ் வளர்ச்சித்துறையும் பார்க்கும். பார்த்துவிட்டு கண்டும் காணானது போல் நடிக்கும்.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நடுவண் அரசு நிறுவனங்களிலும் தமிழையே அலுவல் மொழியாக பயன்படுத்த வேண்டும் என்பதை நாம் வலியுறுத்துவோம். அதற்கான சட்டத்தை கொண்டுவர பாடுபடுவோம்.

No comments:

Post a Comment