உளவுத்துறை குழுவை அமைத்து தேர்தல்
ஆணையம் அதிரடி
மக்களவைத் தேர்தலில் கருப்புப் பண புழக்கதைத் தடுக்க நடவடிக்கை
மக்களவைத் தேர்தலில் கருப்புப் பண புழக்கதைத் தடுப்பதற்காக வருவாய் மற்றும் பாதுகாப்பு உளவுத்துறை உயர் அதிகாரிகள் அடங்கிய புதிய குழுவை தேர்தல் ஆணையம்
உருவாக்கியுள்ளது. முதல் முறையாக இக்குழுவை தேர்தல் ஆணையம் ஏற்படுத்தியுள்ளது. வருமானவரித்துறை உள்ளிட்ட 10 நிதி சார்ந்த உளவுத்துறைகள் மற்றும் எல்லை பாதுகாப்புப் படை அதிகாரிகள் இடம்பெற்றுள்ள இந்த குழுவினர் வாரம் இருமுறை டெல்லியில் உள்ள தேர்தல் ஆணைய தலைமை அலுவலகத்தில் கூடி ஆலோசனை நடத்துவார்கள். கருப்புப்ப பண புழக்கம் தொடர்பாக கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை இக்குழுவினர் பரிந்துரைப்பார்கள் என்றும் தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் அளிக்கும் விரிவான அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிற
No comments:
Post a Comment