அன்பார்ந்த இடை நிலை ஆசிரியர் தோழர்களே !
TNPTF என்ற சங்கம் 2 வது முறையாக நமது TATA சங்கத்தின் வழக்கையும் ,சங்கத்தையும் நேற்று பெய்த மழையில் முளைத்த காளான் என்றும் லெட்டர் பேடு சங்கம் அல்வாவுக்கு பெயர் பெற்ற ஊர்க்காரன் என்றும் ஏளனம் செய்து எழுதியுள்ளது .
போராட்டம் என்ற பெயரில் இடை நிலை ஆசிரியர்களை ஏமாற்றியவர்கள் நாங்கள் அல்லவே !
நீதிமன்ற நடவடிக்கையை அந்த அந்த நாளில் ஒளிவு மறைவு இல்லாமல் வெளியிட்டது தவறு என்றால் அதை நாங்கள் ஏற்கிறோம் . பிற சங்கம் போல நமது TATA சங்கம் இடை நிலை ஆசிரியர்களை ஏமாற்றியது இல்லை .நீதிமன்றம் மூலம் TATA சங்கம் ஊதிய பிரச்சனையை தீர்த்து விட்டல் இவர்கள் சங்கத்தில் உள்ள இடை நிலை ஆசிரியர்கள் TATA சங்கத்திற்கு போய்விடுவார்கள் என்ற பயத்தில் தான் விமர்சிக்கிறார்கள் .
உண்மையான கம்யூனிஸ்ட் யார் என்றால் லெனின் மற்றும் மாவோ வின் வாழ்கை வரலாறு படித்து அது போல் நடப்பவனே ! கம்யூனிஸ்ட் கட்சியின் தொழில் சங்கமான TNPTF நம்மையும் நமது வழக்கையும் எள்ளி நகையாடுவதற்கு கண்டிப்பாக காலம் இவர்களுக்கு பதில் சொல்லும் ,
இடை நிலை ஆசிரியர்களின் ஊதிய பிரச்சனையை நமது TATA சங்கம் 172 பக்கம் கொண்ட ஆவணங்களை 3 வருடமாக சேகரித்துவழக்கு தாக்கல் செய்து வட்டிக்கு கடன் வாங்கி நடத்தி வருகிறோம் . சில தோழர்கள் மூலம் நமது வழக்கிற்கு நன்கொடை ரூ 48,000 மட்டுமே கிடைத்து உள்ளது ஆனால் இது வரை வழக்கிற்கு ரூ 2,68,650 செலவு ஆகியுள்ளது வழக்கின் இறுதியில் கண்டிப்பாக வெற்றி நமது இடை நிலை ஆசிரியரின் சமுதாயத்திற்கே !
நமது ஊதிய வழக்கு நீதிபதி மாற்றம் காரணமாக விசாரணைக்கு வருவதில் கால தாமதம் ஏற்பட்டது .அதை சரி செய்து உள்ளோம் .நமது மூத்த வழக்கறிஞர் மூலம் கடிதம் கொடுக்க பட்டு உள்ளது அதனால் வருகிற வாரம் முதல் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கிறோம்
No comments:
Post a Comment