PAGEVIEWERS

புதுகோட்டை மாவட்டம் -கிள்ளு கோட்டை -மேல்நிலை பள்ளி .-த.ஆ .-நிதி முறைகேடு நடவடிக்கை எடுக்க -ஊழல் தடுப்பு காவல்துறை -பரிந்துரை ..

 பள்ளிக் கல்வி இயக்குநர் திரு மதிப்பு மிகு இராமேஸ்வர முருகன் 
அவர்களை சந்தித்து TATA பொதுச்செயலாளர் திரு S.C கிப்ஸன் 08-04-2014 
அன்று அளித்த கோரிக்கையில் புதுக்கோட்டை மாவட்டம் , 
கிள்ளுக்கோட்டை,அரசினா் மேல்நிலைப்பள்ளி, தலைமையாசிரியர் நிதி 
நிர்வாக சீர்கேடுகள் பற்றி புகார் தெரிவிக்கப்பட்டது.

மீண்டும் நிர்வாக சீர்கேடுகள் தொடர்வதால்  புதுக்கோட்டை மாவட்ட
முதன்மைக் கல்வி அலுவலர் திரு நா.அருள் முருகன் ,முனைவர் 
அவர்களுடன்  TATA  மாநில தலைவர் திரு நா.கார்த்திகேயன் மற்றும்
 புதுக்கோட்டை மாவட்ட TATA பொறுப்பாளர்கள்  திரு .சு.யோவேல்,
திரு அ.சேவியர் ராஜேஸ் 06-05-2014 அன்று பேச்சு வார்தை நடத்தினர்.
புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கொடுத்த 
வாக்குறுதியின் பேரில் தற்காலிகமாக தீர்வு தீர்மானிக்கப்பட்டது.

 03-06-2014 அன்று காழ்புணர்ச்சி அடைந்த புதுக்கோட்டை மாவட்டம் , 
கிள்ளுக்கோட்டை,அரசினா் மேல்நிலைப்பள்ளி, தலைமையாசிரியர் 
திரு.கோ.அசோகன் சில உள்ளுர் ஆசிரியர்கள் மூவர் உதவியுடன்( ஆண் 
இருவர் ,பெண் ஒருவர் அவரது கணவர்) பொது மக்களை வன் முறை 
செய்தி்ட துண்டி அப்பள்ளி ஆசிரியரும் புதுக்கோட்டை மாவட்ட TATA 
பொறுப்பாளர் திரு .சு.யோவேல்,  என்பாரை.பள்ளி வளாகத்தில் 
உள்ளே தலைமையாசிரியர் திரு.கோ.அசோகன்  மற்றும் அப்பள்ளி 
ஆசிரியர்கள் முன்னிலையில் தாக்கினர் .


 புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வாய்மொழி 
விசாரணை நடத்தினார் . கிள்ளுக்கோட்டை,அரசினா் மேல்நிலைப்பள்ளி, 
தலைமையாசிரியர் திரு.கோ.அசோகன் என்பாருக்கு கட்டாய விடுப்பு 
(05-06-2014 முதல் ) அளிக்கப்பட்டது.                                                                             
2013-2014 கல்வியாண்டு  கிள்ளுக்கோட்டை,அரசினா் மேல்நிலைப்பள்ளி, 
தலைமையாசிரியர் திரு.கோ.அசோகன்  தலைமையாசிரியர் நிதி 
நிர்வாக 
சீர்கேடுகள் மற்றும் கையாடல்  பற்றி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு 
துறை விசாரணை கோரி TATA  மாநில தலைவர் திரு நா.கார்த்திகேயன் 
அவர்களால் புகார் தெரிவிக்கப்பட்டது.
ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை இயக்குநர் இப்புகார் 
தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரை நடவடிக்கை எடுக்க கடிதம் 
அனுப்பியுள்ளார்
 துறை விசாரணைக்கு பயந்து கிள்ளுக்கோட்டை,அரசினா் 
மேல்நிலைப்பள்ளி, தலைமையாசிரியர் திரு.கோ.அசோகன் என்பார் 
திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி,அரசினா் மேல்நிலைப்பள்ளிக்கு 
பணியிட மாறுதல் பெற்றுள்ளார். 


No comments:

Post a Comment