PAGEVIEWERS

இயக்குனரக செய்தி....................


....... .தொடக்கக் கல்வித்துறை கட்டுபாட்டில் 6000 க்கும் மேற்பட்ட நிதியுதவி பெரும் தனியார் பள்ளிகள் உள்ளது இப்பள்ளிகளில் தமிழகம் முழுவதும் 3000 க்கும் மேற்பட்ட உபரி ஆசிரியர்கள் உள்ளதாக 2015 டிசம்பர் மாதம் மாநிலம் முமுவதும் உள்ளதாக AEEO , SSA பணியாளர்களை கொண்ட குழு அமைத்து கண்டறியப்பட்டு உள்ளது. தற்போது இந்த பட்டியலில் உள்ளவர்களை வெளிமாவட்டங்களில் தேவை உள்ள நிதி உதவி பெறும் தனியார் பள்ளிகளுக்கு மாற்றம் செய்திட இயக்குனரால் அனுமதி வேண்டி பள்ளிக் கல்வி செயலாளருக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஏற்கனவே 2004 ஆண்டு இதுபோல் உபரி ஆசிரியர்கள் வெளி மாவட்டங்களுக்கு பணி நிரவல் செய்யப்பட்டனர்.அதன் பின் 12 வருடங்களுக்கு மேலாக பணி நிரவல் செய்யப்படாத்தால் தென் மாவட்டங்களில் அதிக அளவில் தனியார் பள்ளிகள் உள்ளதால் அங்கு உபரி ஆசிரியர்களும் அதிகமாக உள்ளனர்.நெல்லை மாவட்டத்தில் தொடக்கக் கல்வித்துறையில் மட்டும் 524 பேர் உபரி ஆசிரியர்கள் என கண்டறியபட்டுள்ளனர்.
இதனால் அரசுக்கு பல கோடி ரூபாய் ஆண்டுதோறும் நிதி இழப்பு ஏற்படுகிறது.எனவே விரைவில் இவர்கள் வெளிமாவட்டங்களுக்கு பணி நிரவல் செய்யப்பட உள்ளதாக தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்கள் தெரிவித்து உள்ளார்கள்இந்த மாறுதல்கள் உள்ளாட்சி தேர்தல் முடிந்த்தும் .வெளிமாவட்டங்களுக்கு மாற்றப்படும் ஆசிரியர்கள் பணி ஓய்வு வரை திரும்ப தன் மாவட்டத்திற்கு மாறுதல் பெற முடியாது........டாடா கிப்ஸன்

No comments:

Post a Comment