புதிய
கல்வி கொள்கை
7 நாள் மட்டுமே
அவகாசம்----TATA சங்கம் அனுப்பிய மனு
உங்கள் பார்வைக்கு ....தன் செயல்பாட்டை 100%
வெளிப்படையாக காட்டும் ஒரே சங்கம் டாட்டா
மட்டுமே....
மத்திய அரசின், புதிய கல்வி கொள்கை குறித்த கருத்துக்களை அனுப்ப, ஒரு வாரம் மட்டுமே அவகாசம் உள்ளது. கடந்த, 1968ல் உருவாக்கப்பட்ட கல்வி கொள்கைக்கு பதிலாக, மத்திய அரசு, புதிய கல்வி கொள்கையை அமல்படுத்த முடிவு செய்துள்ளது. இதற்காக, தமிழகத்தை சேர்ந்த, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன் தலைமையில், ஐந்து பேர் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.
கமிட்டி பரிந்துரைப்படி, புதிய வரைவு கல்வி கொள்கையை, மத்திய அரசு உருவாக்கி, ஜூனில் வெளியிட்டது. அதன் முக்கிய அம்சங்கள் குறித்து கருத்து கூற, ஒரு மாதம் அவகாசம் அளிக்கப்பட்டது; பல தரப்பிலும் கூடுதல் அவகாசம் கேட்டதால், செப்., 30 வரை நீட்டிக்கப்பட்டது. இன்னும் ஒரு வாரம் மட்டுமே அவகாசம் உள்ளதால், கல்வியாளர்கள், ஆசிரியர்கள், nep.edu.@gov.in என்ற இ - மெயில் முகவரிக்கு, கருத்துக்களை அனுப்பலாம் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment