PAGEVIEWERS

இந்த முறை  குரூப் 2 தேர்வில் அதிரடியாக 

 மாற்றம் வந்துள்ளது.......

முன்பெல்லாம் குரூப் 2 தேர்வில் எழுத்து தேர்வில் மட்டுமே தேர்வானால் போதும் அடுத்ததாக நடக்கும் நேர்முகத்தேர்வில் பங்கு பெறலாம்.ஆனால் இப்போது அப்படி இல்லை.இரண்டு கட்ட எழுத்துத் தேர்வில் தேர்வானால் மட்டுமே நேர்முகத்தேர்வுக்கு செல்ல முடியும்.இது ஆரோக்கியமான போக்கு.முதற்கட்டமாக சரியான விடைகளைத் தேர்ந்தெடுத்து எழுதுதல், இதில் தேர்வானால் அடுத்தது விரிவான விடையளிக்கும் தேர்வு, இதிலும் தேர்வானால் மட்டுமே நேர்முகத் தேர்வு, இதில் தேர்வானால் பணி நியமனம்.இனி நடக்கும் குரூப் 2 தேர்வுகளில் சாதாரணமாக தேர்வாக முடியாது. அ,ஆ என விடைகளை பெட்டியில் நிரப்பினால் மட்டும் போதாது. இரண்டாம் கட்ட தேர்வில் விரிவான விடையளித்தால் மட்டுமே வெற்றி சாத்தியம். தேர்வுக்கு தயாராகும் இத்தனை லட்சம் பேரில் எத்தனை பேருக்கு விரிவான விடைகள் தெரியும்?.அப்படித் தெரிந்தாலும் எத்தனை பேரால் என்ணியதை எழுத முடியும்?.அப்படி எழுதினாலும் எத்தனை பேரால் கொடுத்திருக்கும் நேரத்திற்குள் எழுதி முடிக்க முடியும்.?யோசிக்க வேண்டிய விஷயம். இன்று குரூப் 2 தேர்வுக்கு தயாராகும் பல பேர் பேனா பிடித்து எழுதும் பழக்கத்தையே மறந்தவர்களாக இருப்பீர்கள்.இந்த நிலை தேர்வுக்குஉபயோகப்படாது.எனவே படிப்பது என்பது எவ்வளவு முக்கியமோ அதைப் போல எழுதி பயிற்சி எடுப்பது முக்கியம். அனைத்தையும் படித்து கரைத்து குடித்திருந்தாலும் எழுத முடியவில்லையென்றால் சிரமம் தான். முன்பு ஒரே தேர்வில் நேர்முகத்தேர்வில் வென்றவர்கள் போக ஏனையோரை நேர்முகத்தேர்வு அல்லாத பணிகளுக்கு தேர்வு செய்வர்.ஆனால் புதிய தேர்வின் படி அதற்கு தனித் தேர்வே நடத்தப்படுகிறது. இந்த பாடத்திட்ட மாற்றமும் தேர்வு முறை மாற்றமும் சில பேருக்கு கடினமாக இருந்தாலும் இதை பல பேர் வரவேற்கிறார்கள்.இனி நன்றாகப் படித்து தேர்வு எழுதினால் மட்டுமே பணி என்ற நிலை இருக்கிறது.எனவே திட்டமிட்டு படியுங்கள்.. தேர்வில் வெற்றி பெறுங்கள்..வாழ்த்துகள்.

No comments:

Post a Comment