PAGEVIEWERS

சுரேஷ் கல்மாடி டெல்லி சிஎம் மாக தேர்வு -ஷீலா தீட்சித் ராஜினாமா

ஆகஸ்ட் 8, புது தில்லி
இன்று காங்கிரஸ் தலைவர் த்விவேதி பத்திர்க்கையாளர்களை சந்தித்து  காங்கிரஸ் காரிய கமிட்டி கூடி சுரேஷ் கல்மாடியை டெல்லி முதல் மந்திரியாக தேர்வு செய்தது  அறிவித்தார். ஷீலா தீட்சித் பெயர் மத்திய சி.ஏ.ஜி ரிப்போர்டில் காமன்வெல்த் கேம்ஸ் ஊழலில் அடிபட்டதாலேயே காங்கிரஸ் கட்சி இந்தஅ திரடி முடிவை எடுத்ததாக தெரிகிறது. ஆரம்பத்தி தயங்கிய ஷீலாவை கட்சி மேலிடம் ராஜினாமா செய்ய சொன்னதாகவும் அவர் ஒப்புக் கொண்டதாகவும் தெரிகிறது.

காங்கிரஸ் கட்சி எந்தஅ ளவிற்கு ஊழலை எதிர்க்கிறது என காட்டவே ஷீலா உடனே ராஜினாமா செய்வதாகவும் ஆனால் இதையே  பிஜேபி சொல்லியும்  யெட்டியூரப்பா  ஒரு வார காலம் ராஜினாமா செய்ய எடுத்துக் கொண்டதையும் த்விவேதி நினைவு கூர்ந்தார்.
கல்மாடி டெல்லி முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டதின் பின்னணியில் ஒரு சுவையான பின்னணி இருப்பதாக சொல்லப்படுகிறது. காங்கிரஸ் கட்சியின் ஜனநாயக முறைப்படி அடுத்த டெல்லி சி.எம் யார் என மேலிடத்திடம் கேட்டதாகவும் மேலிடம் ஐசியுவிலிருந்து அப்போதுதான் வெளியே வந்ததால் “கல்” என சொன்னதாகவும் காங்கிரஸ் கமிட்டி கூகிளில் காங்கிரஸ் + கல் என தேடியதில் ஏற்கனவே காமன் வெல்த் கேம்சின் மூலம் பிரபலமான சுரேஷ் கல்மாடி பெயரே முதலி வந்ததாகவும் ஹை கமாண்டேநேரில் வந்து ஆசி வழங்கியதைப் போல் எடுத்துக் கொண்டு காரிய கமிட்டி கல்மாடியின் பெயரை முன்மொழிந்ததாக எடுத்துக் கொண்டதாக தெரிகிறது.
பூனேவைச் சேர்ந்த சுரேஷ் கல்மாடி எப்படி தில்லி சி.எம் ஆக முடியும் என கேட்ட போது மன்மோகன் சிங்க் ” நான் எந்த அளவுக்கு அசாமை சேர்ந்தவனோ அதே அளவு சுரேஷ் கல்மாடியும் தில்லியைச் சேர்ந்தவர்” என்றார்.
ஊழல் குற்றச்சாட்டு வந்தவுடனேயே காங்கிரஸ் எடுத்திருக்கும் இந்த முடிவால், ஷீலா தீட்சித் விலக சுரேஷ் கல்மாடி எப்போது பதவி ஏற்பாரரென்பது அவருக்கு எவ்வளவு சீக்கிரம் பெயில் கிடைக்குமோ அதைப் பொறுத்து இருக்கிறது என அதிகார பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
( சும்மா கப்சா செய்தி , நம்பிடாதீங்க.. உல்லுலாயி ! )

No comments:

Post a Comment