தலைமை ஆசிரியர் பதவி உயர்வு: விதிகளை திருத்த பள்ளிக்கல்வி இயக்குனர் பரிந்துரை
மொழி ஆசிரியர்கள் (தமிழ், தெலுங்கு) தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற, பள்ளிக் கல்வித்துறை கட்டுப்பாடுகளை விதித்தது. இதை திருத்தம் செய்ய, பள்ளிக்கல்வி முதன்மைச் செயலருக்கு, இயக்குனர் பரிந்துரை செய்துள்ளார்.
மொழி ஆசிரியர்கள், பி.எட்., பட்டம் பெறாமல், ஆசிரியர்களாக நியமனம் செய்யப்படுகின்றனர். பின், பி.எட்., பட்டம் பெறுகின்றனர். தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு, பி.எட்., பட்டம் பெற்ற நாளில் இருந்தே, பணி மூப்பு கணக்கிடப்படுகிறது.
இதனால், அவர்களுக்குப்பின் பணியில் சேர்ந்தவர்கள், பதவி உயர்வில், தலைமை ஆசிரியர்களாகி விடுகின்றனர். இந்நடைமுறையை மாற்ற, தமிழாசிரியர் கழகம் சார்பில், வழக்கு தொடரப்பட்டது. இதன்படி, தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு, இடைக்கால தடை விதித்து, கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதனால், தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பட்டியல், நிலுவையில் கிடக்கிறது.
இந்நிலையில், "பணியில் சேர்ந்த நாளில் இருந்தே, பணி மூப்பு கணக்கிடும் வகையில், பணி விதிகளில் திருத்தம் செய்ய வேண்டும்&' என, பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலருக்கு, அத்துறையின் இயக்குனர் பரிந்துரை செய்துள்ளார்.

No comments:
Post a Comment