தனியார் பள்ளிகளில் பஸ் கட்டணம் முறைப்படுத்த ஆர்டிஓ அலுவலகம் மூலம் பயண அட்டை ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்....நெல்லை: தனியார் பள்ளி களில் பஸ் கட்டணம் வசூலிப்பதை வரன்முறைப்படுத்த ஆர்டிஓ அலுவலகம் மூலம் பணம் செலுத்தி பயண அட்டை வழங்கும் முறையை அமல்படுத்த வேண்டும் எனஅனைத்து ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இது குறித்து சங்க பொது செயலாளர் கிப்ஸன் விடுத்துள்ள அறிக்கை: அரசு நிர்ணயம் செய்த கல்வி கட்டணத்தை மெட்ரிக் பள்ளிகள் வசூலிக்கின்றனவா என்பதை கண்காணிக்க லஞ்ச ஒழிப்பு காவல்துறைக்கு அதிகாரம் வழங்க வேண்டும். கல்வி உரிமைச் சட்டத்தின்படி 25 சதவீத மாணவர்களுக்கு மெட்ரிக் பள்ளியில் இலவச கல்வி உறுதி செய்யப்பட வேண்டும். பள்ளி, கல்லூரி வாகனங்களில் மாணர்களிடம் அதிக கட்டணம் வாங்குவதை அரசு தடுக்க வேண்டும். பள்ளி பஸ்சில் பயணிக்க மாதாந்திர மற்றும் வருடாந்திர பயண அட்டையை வட்டார போக்குவரத்து ஆய்வாளரிடம் பணம் செலுத்தி பெறும் முறை உருவாக்கப்பட வேண்டும். மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள் பெற்றோரை சந்தித்து பள்ளி மீதுள்ள குறைகள், பள்ளி வாகன குறைகளை கேட்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். |
No comments:
Post a Comment