கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 4043 ஆசிரியர் தேர்வு 29 முதல் விண்ணப்பிக்கலாம்
கேந்திரிய வித்யாலயா சங்கதன் (கேவிஎஸ்) வாயிலாக கேந்திரியவித்யாலயா பள்ளிகளில் 4043 ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வுசெய்யப்பட உள்ளனர். இதற்காக ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கவேண்டும். வரும் 29ம் தேதி முதல் ஆகஸ்ட் 28ம் தேதி வரைவிண்ணப்பிக்கலாம். ஆங்கிலம், இந்தி, இயற்பியல், வேதியியல்,பொருளாதாரம், வணிகவியல், கணிதம், உயிரியல், வரலாறு, புவியியல்,கணினி அறிவியல், சமஸ்கிருதம் உள்ளிட்ட பாடங்களுக்கு ஆசிரியர்கள்தேர்வு செய்யப்பட உள்ளனர். உடற்கல்வி, இசை ஆசிரியர், நூலகர் உள்ளிட்டபணியிடங்களுக்கும் ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
கல்வி தகுதி, பிஇ, பிடெக், பிஎஸ்சி, எம்எஸ்சி, எம்சிஏ, பிசிஏ, பிஜி டிகிரி,டிப்ளமோ, இளநிலை அல்லது முதுநிலை பட்டப்படிப்புகள் உள்ளிட்டபடிப்புகளில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருப்பதுடன் மத்திய ஆசிரியர்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். உடற்கல்வி, இசை ஆசிரியர்,நூலகர் பதவிகளுக்கு விண்ணப்பிப்போர் அந்தந்த துறை சார்ந்த தேர்ச்சிபெற்றிருக்க வேண்டும். எழுத்து தேர்வு, திறன் தேர்வு மற்றும் நேர்முக தேர்வுமூலம் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவர்.விண்ணப்ப கட்டணம் 750 வங்கிவழியாக செலுத்தி ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விபரங்களை http://jobapply.in/kvs அல்லது www.kvsangathan.nic.in ஆகியஇணையதளங்களில் இருந்துதெரிந்துகொள்ளலாம்.
No comments:
Post a Comment