PAGEVIEWERS

மைக்ரோ பயாலஜி பட்டம் பெற்றவர்கள் ஆசிரியர் பணியில் சேரும் கனவு தகர்ந்தது

மைக்ரோ பயாலஜி, சமூக பணி இளநிலை பட்டம் பெற்று, பி.எட்., முடித்தவர்கள், ஆசிரியர் தகுதி தேர்வு எழுத அனுமதிக்கப்படாததால், அவர்களின் ஆசிரியர் கனவு தகர்ந்துள்ளது.

ஆசிரியர் பணிக்காக, தகுதி தேர்வு எழுத, மைக்ரோ பயாலஜி, சமூக பணி, சமூகவியல், வணிகவியல் பாடப்பிரிவுகளில் இளங்கலை பட்டத்துடன், பி.எட்., முடித்தவர்களுக்கு இந்த ஆண்டு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் அவர்களின் ஆசிரியர் கனவு தகர்ந்துள்ளது.

புதுச்சேரியில் தனியார் மற்றும் அரசு கல்லூரிகளுக்கு பி.எட்., டி.டி.எட்., படிப்புக்கு கடந்த 2007 வரை சென்டாக் கவுன்சிலிங் மூலம் இடங்கள் நிரப்பட்டது. அதில், மைக்ரோ பயாலஜி, சமூகப் பணி உள்ளிட்ட பட்டப் படிப்பு முடித்தவர்களுக்கு அரசு இடங்களை வழங்கியது. அரசே, இட ஒதுக்கீடு வழங்கிவிட்டு, தற்போது தகுதியில்லை என்று கூறுவது, பட்டதாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கல்வித்துறை இயக்குநர் வல்லவன் கூறுகையில், "தமிழகம் நடத்தும் ஆசிரியர் தகுதி தேர்வையே, புதுச்சேரி ஆசிரியர்கள் எழுதுகின்றனர். தமிழகத்தில் ஆசிரியர் தேர்வாணையத்தின் விதிமுறைகளின் படியே தேர்வு நடத்தப்படுகிறது.

தமிழக அரசின் ஆசிரியர் தேர்வாணையத்தின் வழிகாட்டுதலில் உள்ள பாடப்பிரிவுகளுடன், பி.எட்., முடித்தவர்களுக்கு மட்டுமே ஆசிரியர் தகுதி தேர்வு நடக்கிறது. இளங்கலை பட்டப்பிரிவில் மைக்ரோ பயாலஜி, உயிர் வேதியியல், சமூகவியல், சமூகபணி ஆகிய பாடபிரிவுகளை தேர்வு செய்து படித்து பி.எட் முடித்தவர்கள் ஆசிரியர் தகுதி தேர்வில் பங்கேற்க முடியாது" என தெரிவித்தார்.

தகுதியில்லை என ஏற்கனவே நிராகரித்திருந்தால், நாங்கள் படித்திருக்க மாட்டோம். படித்து முடித்து 7 ஆண்டுகள் கடந்த பின் தற்போது, அந்த பாடப்பிரிவுகள் ஆசிரியர் தகுதி தேர்வுக்கு தகுதியில்லை என்றால் என்ன செய்வது, முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பாதிக்கப்பட்டவர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment