செவிலியர் பட்டயப் படிப்புக்கான விண்ணப்பங்கள் வரும் திங்கள்கிழமை (ஆக.12) முதல் விநியோகிக்கப்படவுள்ளன.
தமிழகம் முழுவதும் 23 அரசு
நர்சிங் கல்லூரிகளும்
200-க்கும் மேற்பட்ட தனியார் நர்சிங் கல்லூரிகளும்
உள்ளன. அனைத்து
மருத்துவக் கல்லூரிகளிலும் மொத்தம் 68 ஆயிரம் இடங்கள்
உள்ளன.இதற்கான
விண்ணப்பங்கள் தமிழகம்
முழுவதும் உள்ள
அரசு மருத்துவக்
கல்லூரிகளில் திங்கள்கிழமை முதல் விநியோகிக்கப்படவுள்ளன.
தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு
விண்ணப்பக் கட்டணம் கிடையாது. சாதி சான்றிதழ்களின்
இரண்டு நகல்கள்,
விண்ணப்பக் கடிதத்துடன் விண்ணப்பங்களை நேரில் சென்று
பெற்றுக் கொள்ளலாம்.
மற்ற பிரிவினருக்கான விண்ணப்பக்
கட்டணம் ரூ.200.
செயலாளர், தேர்வுக்
குழு, மருத்துவக்
கல்வி இயக்க
அலுவலகம், கீழ்ப்பாக்கம்,
சென்னை- 10 என்ற முகவரிக்கு வரைவோலை எடுத்து
அதனுடன் விண்ணப்பக்
கடிதத்தையும் இணைக்க வேண்டும்.
ஆகஸ்ட் 22-ஆம் தேதி
வரை விண்ணப்பங்கள்
விநியோகிக்கப்படும்.
சென்னை மருத்துவக் கல்லூரி
(எம்.எம்.சி), ஸ்டான்லி
மருத்துவக் கல்லூரி மற்றும் கீழ்ப்பாக்கம் மருத்துவக்
கல்லூரியில் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும்.
சென்னை மருத்துவக் கல்லூரி
கருத்தரங்க கூடத்தில் திங்கள்கிழமை காலை 10 மணி
முதல் மாலை
5 மணி வரை
விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும்.
No comments:
Post a Comment