PAGEVIEWERS

ஆசிரியர் தகுதி மதிப்பெண்ணில் சலுகை கோரிய வழக்கு: அரசு பதிலளிக்க ஐகோர்ட் "நோட்டீஸ்'

சென்னை: ஆசிரியர் தகுதித் தேர்வில்இட ஒதுக்கீட்டு பிரிவினருக்குதகுதி மதிப்பெண்களில்சலுகை வழங்கக் கோரி,மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவுக்கு பதிலளிக்கும்படி,அரசுக்குஐகோர்ட்
உத்தரவிட்டுள்ளது.

மத்திய - மாநில அரசுகளில் பணியாற்றும்ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின ஊழியர் சம்மேளனத்தின் நிறுவனர் கருப்பையா என்பவர்தாக்கல் செய்த மனு: ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெறஒருவர்60 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் வெளியிட்டுள்ள வழிமுறைகளின்படிஆதி திராவிடர்பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்குதகுதி மதிப்பெண்ணில் சலுகை வழங்கலாம். தேசிய கவுன்சிலின் வழிமுறைப்படிஆந்திராவில்,ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு தகுதி மதிப்பெண்40 சதவீதம்ஒடிசாவில்50 சதவீதம்உத்தர பிரதேசத்தில்55 சதவீதம்மணிப்பூரில்50 சதவீதம் எனநிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால்தமிழகத்தில் தான்ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சிலின் வழிமுறைகள் பின்பற்றப்படவில்லை. ஆதி திராவிடர்பழங்குடியினர்பிற்படுத்தப்பட்டோர்மிகவும் பிற்படுத்தப்பட்டோர் எனஇட ஒதுக்கீட்டின் கீழ் வருவோருக்கு,தகுதி மதிப்பெண்ணில்சலுகை வழங்கப்படவில்லை. ஆசிரியர் தகுதி தேர்வு குறித்துகடந்தமே மாதம்ஆசிரியர் தேர்வு வாரியம் விளம்பரம் வெளியிட்டுள்ளது. அதில்இட ஒதுக்கீட்டில் வருவோருக்குதகுதி மதிப்பெண்களில் எந்த சலுகையும் வழங்கவில்லை. அவர்களுக்கு சலுகை வழங்கக் கோரிகடந்த,ஏப்ரல் மாதம் மனுக்கள் அனுப்பினேன். ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளதகுதித் தேர்வு தொடர்பான நடவடிக்கைகளுக்கு,தடை விதிக்க வேண்டும். இட ஒதுக்கீட்டின் கீழ் வருவோருக்கு,தகுதி மதிப்பெண்ணில் சலுகை வழங்கஉத்தரவிட வேண்டும். இவ்வாறுமனுவில் கூறப்பட்டுள்ளது. இம்மனுதலைமை நீதிபதி(பொறுப்பு) அகர்வால்நீதிபதி சத்தியநாராயணன் அடங்கிய, "முதல் பெஞ்ச்முன்விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு பதில் அளிக்ககல்வித்துறை சார்பில்சிறப்பு அரசு பிளீடர் கிருஷ்ணகுமார்ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில்கூடுதல் அரசு பிளீடர் சஞ்சய்காந்திநோட்டீஸ் பெற்றுக் கொண்டனர். விசாரணைசெப்.19ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

No comments:

Post a Comment