ஆறாவது ஊதிய குழுவினால் பாதிப்பு இடைநிலை ஆசிரியர்களுக்கு மட்டுமல்ல. பதவி உயர்வில் சென்றுள்ள மூத்த ஆசிரியர்களுக்கும் தான் என்பதை விளக்கும் கட்டுரை
TO DOWNLOAD GOVT LTR.23373/S/2011-2 DATED.09.08.2011 CLICK HERE...
அரசாணை 234 நாள்:1.6.2009 இல் இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்படாதபோதே சமரசமின்றி தொடர்ந்து போராடி இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை போராடி பெற்றிருந்தால், அதன்பின்னர் பல்வேறு ஊதிய முரண்பாடுகளை சரிசெய்ய முயன்றிருக்க வாய்ப்புண்டு. ஏதோ இடைநிலை ஆசிரியர்களுக்கு பாதிப்பு என்றுமட்டும் நினைத்துவிட்டார்களோ என்னவோ? குறை சொல்வதற்காக இப்படி குறிப்பிடவில்லை. மூத்த ஆசிரியர்களுக்கும் ஊதிய பாதிப்பு ஏற்படுவதால் இப்படி குறிப்பிடுகிறோம்.
முந்தைய ஊதிய குழுவில் ஒத்த ஊதிய விகிதங்களில்
பணியாற்றிய காலத்தை கணக்கிட்டு தேர்வு/சிறப்பு நிலை கணக்கிடலாம். அதாவது
ஒரு இடைநிலை ஆசிரியர் பத்தாண்டு பணி முடித்த பின்னர் தேர்வு நிலை
அடைந்திருப்பார். அதாவது 4500 அடிப்படை ஊதியத்திலிருந்து 5300 அடிப்படை
ஊதியத்தில் இருந்திருப்பார். இந்த தேர்வுநிலையில் ஐந்தாண்டுகள் பணிபுரிந்த
பின்னர் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவிஉயர்வினை பெறும்போது,
அப்பதவியில் ஐந்தாண்டுகள் பணிபுரிந்தாலே அவர் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்
பதவியில் தேர்வு நிலை பெற்றுவிடலாம். ஏனெனில் அவர் ஏற்கனவே இடைநிலை
ஆசிரியர் தேர்வுநிலையில் ஐந்தாண்டுகள் பணிபுரிந்துள்ளார்.( இடைநிலை
ஆசிரியர் தேர்வு நிலை ஊதியமும், தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் அடிப்படை
ஊதியமும் ஒன்றாகும். ( ஒத்த ஊதியம் - IDENTICAL SCALE என்று
சொல்லப்படும்.)
தற்போது தேர்வு/சிறப்பு நிலைகளுக்கு தனி ஊதிய
விகிதங்கள் வரையறுக்கபடாததால், ஒத்த ஊதிய விகிதங்களில் பணியாற்றியதாக
எதனையும் கணக்கிட முடியாது. எனவே எத்தனை ஆண்டுகள் பணியாற்றியிருந்தாலும்,
பதவி உயர்வில் செல்லும் போது, அப்பதவியில் பணியேற்று பத்தாண்டுகள்
பணியாற்றிய பின்னரே அப்பதவியில் தேர்வுநிலை பெற இயலும் என்ற நிலை தற்போது
ஏற்பட்டுள்ளது. இதனையே மூத்த ஆசிரியர்களுக்கும் ஊதிய பாதிப்பு என்று
குறிப்பிடுகிறோம்.
இப்பொருள் சார்ந்த தெளிவுரைகள் பணியாளர்
மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை கடித எண்.23373/S/2011-2, DATED
09.08.2011 இல் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் "பார்வையில்" ஒத்த
ஊதிய விகிதங்களை கணக்கிட்டு தேர்வு/சிறப்பு நிலைகளை கணக்கிட
பயன்படுத்தப்பட்ட அரசாணைகள் குறிப்பிடப்பட்டு, அவைகளை குறிப்பிடும்போது -
Cannot be made applicable in the revised scales என்று
குறிப்பிடப்பட்டுள்ளது.
நேரடி நியமன பட்டதாரிகளை தவிர தொடக்க
கல்வித்துறையில் பெரும்பாலும் இடைநிலை ஆசிரியர்களாக இருந்து அதன்
பின்னர்தான் அடுத்த நிலைக்கு பதவி உயர்வில் சென்றிருப்பர். எனவே ஒன்றுபட்டு
இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய பாதிப்புகள் நீக்கிட போராடுவோம்.
வெற்றிபெறுவோம்.
திருத்திய ஊதிய விகித விதிகள் 2009-இல்
தேர்வு/சிறப்பு நிலைக்கு என தனி ஊதிய விகிதம் அனுமதிக்கப்படாததால் 1.1.2006
-க்கு பிறகு உயர்பதவியில் தேர்வு/சிறப்பு நிலை கணக்கிட ஒத்த ஊதிய விகித
பணிக்காலத்தை எடுத்துக்கொள்ள இயலாது என்பதை விளக்கு P.& A.R. Govt. Lr.
ஐ உங்களுக்காக வெளியிடுகிறோம்.
நன்றி : திரு. தாமஸ் ராக்லேண்டு
No comments:
Post a Comment