தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம்
உண்ணாவிரதம் மேற்கொள்ள முடிவு.
மதுரையில் நேற்று நடந்த கூட்டத்தில் தீர்மானம்.
இந்த உண்ணாவிரதம் மூலம், 1.1.2009 -க்கு பின்னர் பணியேற்றவர்களை பொருத்தவரையில் ஆறாவது ஊதிய குழுவினால் ஊதிய இழப்பே ஏற்பட்டுள்ளது என்பதையும், அதனை களைய ஊதிய குறை தீர்க்கும் பிரிவு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதையும், மேலும் 1.1.2009 - க்கு முன்னர் பணியேற்றவர்களை பொருத்தவரையில், ஊதிய விகிதம் மாற்றியமைக்கப்படாததால் அடிப்படை மற்றும் தர ஊதியத்தில் பெரும் இழப்பு ஏற்ப்பட்டுள்ளது என்பதை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல உள்ளதை குறித்தும் விரிவாக விளக்கி பேசி உண்ணாவிரதத்தில் அனைவரும் கலந்துகொள்ள வேண்டியதின் அவசியம் குறித்தும் விளக்கிப் பேசினார்.
உண்ணாவிரதம் மேற்கொள்ள முடிவு.
மதுரையில் நேற்று நடந்த கூட்டத்தில் தீர்மானம்.
நேற்று 03.08.2013 அன்று மதுரை Y.M.C.A SCHOOL COMPOUND - இல் (T.A.T.A.) தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்க கூட்டம் மாநில தலைவர் திரு. கார்த்திகேயன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து பெண் ஆசிரியைகள் உட்பட பல்வேறு ஆசிரியர்களுடன் இயக்கப் பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் 3 நபர் ஊதிய குறை தீர்க்கும் பிரிவின் அறிக்கைக்குப் பின்னரும் தீர்க்கப்படாத இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு குறித்து விவாதிக்கப்பட்டது. பாதிப்புகள் ஆசிரியர்களுக்கு எடுத்துகூறப்பட்டது. கலந்து கொண்டவர்களின் கருத்துக்களும் கேட்கப்பட்டு முதல்கட்டமாக உண்ணாவிரதம் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது.
தமிழக அரசின் கவனத்திற்கு இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய பாதிப்புகள், ஊதிய குறைதீர்க்கும் பிரிவின் அறிக்கையை தொடர்ந்து வெளியிடப்பட்டஅரசானைகளுக்குப் பின்னரும் தொடர்வது குறித்து பொதுசெயலாளர் திரு.கிப்சன் எடுத்து கூறினார். மேலும் இதனை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல நாம் மேற்கொள்ள இருக்கும் ஜனநாயக முறையிலான உண்ணாவிரதத்திற்கு பெருந்திரளாக ஆசிரியர்கள் கலந்துகொள்ளவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.
இந்த உண்ணாவிரதம் மூலம், 1.1.2009 -க்கு பின்னர் பணியேற்றவர்களை பொருத்தவரையில் ஆறாவது ஊதிய குழுவினால் ஊதிய இழப்பே ஏற்பட்டுள்ளது என்பதையும், அதனை களைய ஊதிய குறை தீர்க்கும் பிரிவு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதையும், மேலும் 1.1.2009 - க்கு முன்னர் பணியேற்றவர்களை பொருத்தவரையில், ஊதிய விகிதம் மாற்றியமைக்கப்படாததால் அடிப்படை மற்றும் தர ஊதியத்தில் பெரும் இழப்பு ஏற்ப்பட்டுள்ளது என்பதை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல உள்ளதை குறித்தும் விரிவாக விளக்கி பேசி உண்ணாவிரதத்தில் அனைவரும் கலந்துகொள்ள வேண்டியதின் அவசியம் குறித்தும் விளக்கிப் பேசினார்.
முதல்கட்டமாக உண்ணாவிரதம் 31.8.2013 அன்று திருவாரூர் மாவட்டத்தில் மேற்கொள்ள முடிவுசெய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து இதுகுறித்த விவரங்கள் ஆசிரியர்களுக்கு பொறுப்பாளர்கள் மூலம் தெரிவிக்கப்படும் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
கூட்டத்தில் பங்குபெற்ற அனைவருக்கும் மாநில செய்தி தொடர்பாளர் திரு. கார்கில் ராஜேந்திரன் அவர்கள் நன்றிகூற கூட்டம் நிறைவடைந்தது.
No comments:
Post a Comment