PAGEVIEWERS


 டீ கடை பெஞ்சு
தினமலர் 


வியாழன் ,ஜனவரி,9, 2014



'இப்போதைக்கு எல்லாத்தையும் நிப்பாட்டுங்க!' '

'தி.மு.க., ஆட்சியில இருந்ததை விட, மூணு மடங்கு அதிகமாயிருச்சுங்க...'' என்றபடி, நாயர் கடைக்கு வந்த அந்தோணிசாமியிடம், ''என்னது பா... நெல்லா, கரும்பு விளைச்சலா...'' என, கிண்டலாகக் கேட்டார் அன்வர்பாய்.

''நல்லா கேட்டீங்களே... லஞ்சம் தான்... கோவை நகர ஊரமைப்புத் துறையில, தி.மு.க., ஆட்சியில, கார்ப்பரேஷன், எல்.பி.ஏ., - டி.டி.சி.பி., ஆபீஸ்ன்னு ஒட்டு மொத்தமா, சதுர அடிக்கு, 35 ரூபாய் வரைக்கும் லஞ்சமாகக் கொடுக்க வேண்டியிருந்துச்சு... இப்போ, கீழயிருந்து மேல வரைக்கும் கொஞ்சம் கொஞ்சமா கூடி, சதுர அடிக்கு, 110லேர்ந்து, 130 ரூபாய் வரைக்கும் குடுக்க வேண்டி இருக்கு... கொடுத்தாலும், 'பைல்'கள் சீக்கிரமா நகர்றதே இல்லே... இதுக்காக சென்னைக்கு அலைஞ்சு அலைஞ்சே, புரமோட்டர்கள் எல்லாம், ஒரு வழியாயிடுறாங்க...'' என்றார் அந்தோணிசாமி.



''டாக்டருங்களுக்கே தெரியலியாம்... 'திருதிரு'ன்னு முழிச்சாவ வே...'' என்று அடுத்த மேட்டரை ஆரமபித்தார், பெரியசாமி அண்ணாச்சி.

''என்ன தெரியல... ஏன் முழிச்சாங்க... விவரமா சொன்னாத்தான எங்களுக்கு தெரியும்...'' என்று விவரம் கேட்டார் அந்தோணிசாமி.

''சொல்லுதேன் கேளும்... சென்னைல, திருவல்லிக்கேணில இருக்கற ஆஸ்பத்திரிக்கு, சமீபத்துல, சுகாதாரத் துறை மந்திரி, சோதனைக்கு போயிருந்தாரு... மந்திரி வந்ததும் டாக்டருங்க உஷாராயிட்டாவ... எல்லாத்தையும் ஒழுங்குபடுத்தி, ஆஸ்பத்திரி சுத்தமா இருக்குன்னு காட்டுததுக்கு பாத்தாவ... சூட்சுமத்தை தெரிஞ்சிக்கிட்ட மந்திரி, அங்கேயிருந்த டாக்டர்களை கூப்பிட்டாரு... 'இந்தியாவோட பிறப்பு, இறப்பு விகிதம் என்ன?'ன்னு கேட்டாரு... 'பேறு காலத்துல இறந்து போன பெண்களோட விகிதாச்சாரம் எவ்வளவு?'ன்னு, கேள்வி மேல கேள்வி கேட்டு துளைச்சு எடுத்துட்டாரு... யாருக்கும் சரியான பதில் தெரியலேங்கறது தான் வேதனை...

''நொந்து போன மந்திரி, விடையையும் அவரே சொன்னாரு... 'இந்த லட்சணத்துல நீங்க, ஆரம்ப சுகாதார பணிக்கு வர்றவங்களுக்கு, பயிற்சி வேற கொடுக்கறீங்க... எல்லா தகவலையும், 'அப்டேட்' பண்ணிக்கோங்க'ன்னு புலம்பித் தீத்தபடியே, வெளியே போயிட்டாரு வே...'' என, முழு விவரத்தையும் கூறி முடித்தார் பெரியசாமி அண்ணாச்சி.

''கொடநாட்டில் இருந்து, சி.எம்., கிளம்புற வரைக்கும், விதிமீறிய கட்டட, 'கலெக்சன்' விஷயங்களில், அடக்கி வாசிக்க, உள்ளாட்சி அமைப்பின் நிர்வாகிகளும், அதிகாரிகளும் அறிவுரை வழங்கி இருக்கா ஓய்...'' என, கடைசி மேட்டருக்கு மாறினார் குப்பண்ணா.

''இல்லேன்னாலும், விதிமீறிய கட்டடங்கள் விஷயம், முதல்வருக்கு தெரியாமலா போகும்...'' என, கேள்வி எழுப்பினார் அன்வர் பாய்.

''தெரியுமோ, இல்லியோ... இப்போதைக்கு அடக்கி வாசிக்கணும்ங்கறது, அஜெண்டா... ஊட்டி, குன்னுார், கோத்தகிரி பகுதிகளில், விதிமீறிய கட்டடங்கள், தீப்பெட்டி அடுக்கினா மாதிரி, ஒசந்துண்டே போறது... இதைக் கண்டுக்காம இருக்க, வார, 'வீக்எண்டு'களில், அதிகாரிகள் கலெக்சன் கொடி கட்டிப் பறக்கறது... இதைத் தான், இப்போதைக்கு வேண்டாம்ன்னு, ஒத்திப் போட்டிருக்கா... கட்டுமானப் பணிகளையும் நிறுத்தி வச்சிருக்கா ஓய்...'' எனக் கூறி முடித்தார் குப்பண்ணா.

No comments:

Post a Comment