உச்சநீதிமன்றம் கருத்து...
எப்.ஐ.ஆர்.-ல் பெயர் இல்லாதவரை கூட விசாரணைக்கு அழைக்கலாம்..
டெல்லி: ஆதாரத்தின் அடிப்படையில் குற்றப்பத்திரிகையில் இடம்பெறாதவர்களை கூட நீதிமன்றம் விசாரணைக்கு அழைக்க முடியும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. விசாரணை நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து, தொழிலதிபர் ஒருவர் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த தலைமை நீதிபதி பி.சதாசிவம் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு,
ஆதாரம் இருந்தால் குற்றவாளி என்று கருதப்படும் நபரை முதல் தகவல் அறிக்கை அல்லது குற்றப்பத்திரிகையில் பெயர் இடம்பெறாத நிலையிலும், நீதிமன்றம் விசாரணைக்கு அழைக்க முடியும் என்று தெரிவித்துள்ளது. குற்றவியல் சட்டப்பிரிவு 310ன் படி முதல் தகவல் அறிக்கை அல்லது குற்றப்பத்திரிகையில் இடம்பெறாத நபரை கூட, ஆதாரத்தின் அடிப்படையில் விசாரணை நடத்தும் அதிகாரம் நீதிமன்றத்திற்கு உள்ளதாக நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் எந்த தீர்ப்பையும் அளிக்கவில்லை. இதனிடையே மற்றொரு பொதுநல வழக்கில் மக்கள் வெங்காயம் சாப்பிடுவதை 2 மாதங்களுக்கு நிறுத்தினால் அதன் விலை குறைந்துவிடும் என்று உச்சநீதிமன்றம் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment