PAGEVIEWERS

முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில், முறைகேடு செய்துள்ள, தனியார் மருத்துவமனைகளின் பெயரை, அரசு, பகிரங்கமாக வெளியிடுவதுடன், அவற்றின் மீது, சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கருத்து எழுந்துள்ளது.

தி.மு.க., அரசு கொண்டு வந்த, மருத்துவ காப்பீடு திட்டத்தை மேம்படுத்தி, கடந்த ஆண்டு, ஜனவரி முதல், முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.மாநில அளவில், 700க்கும் மேற்பட்ட தனியார்

அரசு ஊழியர்கள் பணிப்பதிவேடுகளை மின்னணு குறிப்புகளாக மாற்ற உத்தரவு


சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை கொள்கை விளக்க குறிப்பில் இடம் பெற்றுள்ள விவரம் வருமாறு: பணியாளர்கள் பெற்ற சலுகைகள் மற்றும் பயன்களை கண்காணிக்கும் வகையில் அனைத்து பணியாளர்களின் பணிப்பதிவேடுகளில்

உள்ள பதிவுகள் கம்ப்யூட்டரில் பயன்படுத்தும் வகையில் மின்னணு குறிப்புகளாக மாற்றி பதிவு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, அனைத்து பதிவுகளையும் நாளது தேதி வரை ஏற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. உதவி இயக்குனர் மற்றும் மேல்நிலை அலுவலர்களின் சொந்த மாவட் டம், தற்போது பணி புரியும் இடம், அதற்கு முந்தைய பணியிடம் ஆகியவை கொண்ட குறிப் பிட்ட விவரங்களை உள்ளடக்கிய மின்குறிப்பு படிவம் வெளியிடப்பட்டுள்ளது. இதில் விவரங்களை மேம்படுத்தி 2013,14 ம் ஆண்டில் பணி விவரங்கள், தகுதி காண் பருவம் முடித்தது, துறை தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற விவரம், ஜிபிஎப் விவரங்கள், நிலுவையில் உள்ள, முடிக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள், போன்ற விவரங்களையும் பதிவு செய்யப்படும். பின்னர், மாவட்ட வாரியாக குறியீட்டு எண், பாஸ்வேர்டு அளித்து, கண்காணிக்கவும், பணியாளர்கள் தாமதமின்றி தகுதிப்பயன்களை பெறவும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது

CPS வழக்கில் மேலும் ஒரு வெற்றி சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.


CLICK HERE TO DOWNLOAD CHENNAI HIGH COURT ORDER AGAINST W.P.NO.5872/2013


CONDUCT -kipson76@yahoo.in

CPS தொடர்பாக "CITU" தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி இடைக்கால உத்தரவிட்டுள்ளது. அவ்வுத்தரவில் இறந்தவருக்கு எந்த மாதிரியான செட்டில்மென்ட் என்பதை இரண்டு வாரத்திக்குள் பதிலளிக்க வேண்டும் எனவும், அதுவரை புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் மனுதாரர் கட்டிய சந்தாவை பங்கு சந்தையில் மூதலீடு செய்ய கூடாது எனவும், இறந்தவரின் பங்களிப்பு தொகையினை வட்டி தரக்கூடிய வைப்பு நிதியாக வைக்க உயர்நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.


கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் படி அனைத்து தனியார் சிறுபான்மையல்லாத (CBSE/ ICSE) பள்ளிகளில் சமூகத்தில் பின்தங்கியுள்ள 25% மாணவர்களுக்கு சேர்க்கையில் இட ஒதுக்கீடு வழங்க முழுமையான வழிக்காட்டு நெறிமுறைகள் மற்றும் படிவங்களோடு அரசாணை வெளியீடு


அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியங்களில் பதிவு பெற்ற தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு தொழிற் கல்வி பட்டப்படிப்பு, தொழிற்கல்வி பட்டமேற்படிப்பு மற்றும் இதர பட்டமேற்படிப்புகளுக்கு தற்போது ஆண்டு தோறும் வழங்கப்படும் கல்வி உதவித் தொகையுடன் மேலும் 2000 ரூபாய் கூடுதலாக உயர்த்தி வழங்குதல் - அனுமதி அளித்து ஆணை


"ஒரே நேரத்தில், இரண்டு வெவ்வேறு பட்டங்களைப்

 படித்த பெண்ணுக்கு, முதுகலை ஆசிரியர் பணி

 வழங்க மறுத்தது சரி தான்" என, சென்னை ஐகோர்ட்

 உத்தரவிட்டு உள்ளது.


முதுநிலை ஆசிரியை (ஆங்கிலம்) பணிக்கு, ஜெகதீஸ்வரி என்பவர் விண்ணப்பித்து இருந்தார். இவர், 2001ம் ஆண்டு, பி.எஸ்சி., (இயற்பியல்), 2003ம் ஆண்டு எம்.ஏ., (ஆங்கிலம், 2009-10ம் ஆண்டில், பி.எட்., படிப்பு, 2011ம் ஆண்டில், அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வியில் பி.ஏ., (ஆங்கிலம்) படித்தார். பி.எட்., படிக்கும் போது, பி.ஏ., ஆங்கிலப் படிப்பும் படித்து, இரண்டு பட்டங்களை பெற்றுள்ளார்.

ஏப்ரல் 3ந் தேதி முதல் பொறியியல், 'கலை மற்றும் அறிவியல்' கல்லூரிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மாணவர்கள் போராட்டம் காரணமாக கல்லூரிகளை மூடத் தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது வரும் ஏப்ரல் 3 ஆம் தேதி முதல் பொறியியல் கல்லூரிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இலங்கை அரசை கண்டித்து தமிழக முழுவதும் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 



சன் குழுமத்திற்கு மாணவர்கள் கடும் எச்சரிக்கை


ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் இலங்கை வீரர்கள் கலந்து கொள்ள கூடாது என்பதை வலியுறுத்தி நாளை தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது.
சென்னையில் தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன் செய்தியாளர்களை சந்தித்தார்.




இங்கிலாந்தின் புகை பிடிப்பவர்களை மையமாகக் கொண்டு அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

இங்கிலாந்தில் கடந்த 50 ஆண்டுகளில் சிகரெட் பிடிப்பவர்களின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்துள்ளது. ஆனால் புகை பழக்கத்திலிருந்து விடுபடுபவர்களின் எண்ணிக்கை மட்டும் குறைந்துகொண்டே வந்தது.
தர்மபுரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 25 போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அஸ்ரா கார்க் உத்தரவின்பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் சோதனை நடத்தி இவர்களை கைது செய்தனர். 

தர்மபுரி டவுன் போலீசார் தர்மபுரி குப்பாண்டி தெருவைச் சேர்ந்த ரத்தினசாமி (வயது 65), அன்பழகன் (49) ஆகிய இரண்டு பேரை கைது செய்தனர். சவுளுர் ஜம்புகளக்கோட்டை பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் (39) என்பவரை மதிகோன்பாளையம் போலீசார் கைது செய்தனர். 

Tomorrow Is Fools Day


முட்டாள்கள் தினம் என்று அழைக்கப்படும் ஏப்ரல் 1ம் தேதி நாளை. இதனால் பலரும் பல ரூபங்களில் உங்களை ஏமாற்றலாம். எனவே ரொம்ப கவனமாக இருக்க வேண்டியது அவசியம். உலகம் முழுவதும் ஏப்ரல் 1ம் தேதியை

பத்தாம் வகுப்பு விடைத் தாள்கள் ரயில் தண்டவாளத்தில் விழுந்து சேதமடைந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு தமிழ் முதல் தாள் மதிப்பெண் அடிப்படையில் இரண்டாம் தாளுக்கு மதிப்பெண் வழங்க அரசு தேர்வுத் துறை முடிவெடுத்துள்ளது. பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மறு தேர்வு கிடையாது என்றும் தேர்வுத் துறை அறிவித்துள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த 27-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 
திருநெல்வேலி:சங்கரன்கோவில் அருகே கொதிக்கும் சாம்பார் கொட்டியதில் ஒன்றரை வயது குழந்தை சிகிச்சை பலனின்றி பலியானது.
சங்கரன்கோவில் ராமசாமியாபுரம் 2வது தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன்(35). இவரது மனைவி சரோஜா(32). அவர்களது ஒன்றரை வயது குழந்தை முத்துமாரி, தவழ்ந்து சென்று சாம்பார் பாத்திரத்தை பிடித்து இழுத்தது. கொதிக்கும் சாம்பார் கொட்டியதில் படுகாயமடைந்த குழந்தை சங்கரன்கோவில் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டது. மேல்சிகிச்சைக்காக பாளை.ஐகிரவுண்ட் ஆஸ்பத்திரி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக இறந்தது. இதுகுறித்து சங்கரன்கோவில் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தொகுப்பு ஊதியத்தில் பணி புரிந்த காலத்தை

 நிரந்தரம் செய்யப்பட்ட இடைநிலை, பட்டதாரி,

 முதுநிலை ஆசிரியர்களின் பணிக்காலமாக

 கணக்கீட வேண்டும்

பள்ளி கல்வித்துறையில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டி கடந்த 2003ஆம் ஆண்டு 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடைநிலை, பட்டதாரி, முதுநிலை ஆசிரியர்கள் தொகுப்பு ஊதியத்தில்

பூமியைப் போன்ற தோற்றமுடைய புதிய கிரகம். 



பூமியைப் போன்ற தோற்றமுடைய புதிய கிரகத்தை ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த கிரகத்தில் உயிர் வாழ்வதற்குத் தேவையான தட்ப வெப்ப நிலையும், தண்ணீரும் இருப்பதாக அந்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
    தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் 

                   சங்கம் (T.A.T.A.)

ஈழ    தமிழர் ,மற்றும்  தமிழக 

                                            மீனவர்களுக்கு 

ஆதரவாக  ஒரு நாள்  

                                        உண்ணாவிரதம்    

நாள் : 07.04.2013.

இடம் : மார்கட் திடல் ,பாளையம்கோட்டை.

             திருநெல்வேலி  

அனைவரையும் வருக வருக என  

    அன்புடன் வரவேற்கிறோம்.

தொடர்புக்கு ,9443464081,9840876481.

ஆசிரியர்கள் இடமாறுதல் தொடர்பான ஆணையை செயல்படுத்த மறுத்ததாக பள்ளிக் கல்வித் துறை மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


மதுரை மாவட்டம், நாட்டாமங்கலம் கள்ளர் சீரமைப்பு
 அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் சிவக்குமார்
 உள்பட12 பேர் தாக்கல் செய்துள்ள மனு விவரம்:

Central Teacher Eligibility Test (CTET) CENTRAL BOARD OF SECONDARY EDUCATION-Previous year Question Paper


Central Teacher Eligibility Test (CTET)
CENTRAL BOARD OF SECONDARY EDUCATION
CTET JUNE – 2011
CTET JAN – 2012
CTET MAY – 2012
CTET NOV – 2012


TNPSC- Departmental Test Bulletin MAY 2011 /2012

Bulletin No.View/Download
Bulletin No. 15 dated 7th August 2012(contains results of Departmental Examinations, May 2012)View/Download
Bulletin No. 16 dated 16th August 2012(contains results of Departmental Examinations, May 2012)View/Download
Bulletin No. 17 dated 7th August 2011(contains results of Departmental Examinations, May 2011)View/Download
Bulletin 18 dated 16th August 2011
(contains results of Departmental Examinations, May 2011)
View/Download
Results of Departmental Examinations - DECEMBER 2012

Results of Departmental Examinations - DECEMBER 2012
(Updated on 25 Mar 2013)
Enter Your Register Number :                                                         
















எம்.பில் பகுதி நேர படிப்பாக பல்வேறு பல்கலைக்கழகங்கள் மற்றும் அவற்றின் உறுப்பு கல்லூரிகளில் வழங்குகின்றன.திருச்சிராப்பள்ளியில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளில் எம்.பில் பகுதி நேர படிப்பாக வழங்கப்படுகிறது. வழங்கப்படும் கல்லூரிகளை காண http://www.bdu.ac.in/admission/mphil2012/MPhil_Prospectus_2012_v6.pdf என்ற வலைதளத்தில் பார்க்கலாம்.

பெரியார் பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளிலும் எம்.பில்.பகுதி நேர மற்றும் முழுநேர படிப்பாக வழங்கப்படுகிறது. வழங்கப்படும் கல்லூரிகளின் விவரங்களை காணhttp://www.periyaruniversity.ac.in/files/course_structure_mphil.pdf என்ற இணையதளத்தை அணுகலாம்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஜூலை 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.


1 முதல் 8 வகுப்புகளுக்கு CCE எனும் தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை நடைமுறையில் உள்ளது. வரும் கல்வியாண்டு முதல் இது 9ஆம் வகுப்பிற்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது. இதில் வகுப்பாசிரியர்

உலகை வாழ வைக்கும் அமிர்தம், தண்ணீரை சேமிப்போம்.. பாதுகாப்போம்

Today is World Water Day. 'The world can be dry,' Come to the New Century. 'Water is the elikcar of Life' is. I mean, the world, the world will live lives like Amirtham water

இன்று உலக தண்ணீர் தினம். ‘நீரின்றி அமையாது உலகு’ என்பது வள்ளுவர் வாக்கு. ‘வாட்டர் ஈஸ் தி எலிக்சர் ஆப் லைப்’ என்பார்கள். அதாவது, இந்த உலகை, உலக உயிர்களை வாழவைக்கும் அமிர்தம் போன்றது நீர். கடந்த 1992ம் ஆண்டு ஐ.நா. சுற்றுச்சூழல் வளர்ச்சி கழக கூட்டத்தில் நீர்வள பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும் என்று அறிவித்தது. அதன் பேரில் ஆண்டுதோறும் மார்ச் 22-ம் தேதி உலக தண்ணீர் தினம் கொண்டாடப்படுகிறது






 






ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டம் ஜெனிவாவில் தொடங்கியது. ஐ.நா., மனித உரிமை ஆணையத்தில், மனித உரிமை உரிமை மீறல் குறித்து இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை அமெரிக்கா கொண்டுவந்தது.
இலங்கைக்கு எதிரான அமெரிக்கத் தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு தெரிவித்து வாக்களித்துள்ளது.

புதுச்சேரி, காரைக்காலில் உள்ள அனைத்து பள்ளிகள், பாலிடெக்னிக், மருத்துவம், பொறியியல், சட்டம் என அனைத்துக் கல்லூரிகள் என ஒட்டுமொத்த கல்வி நிறுவனங்களுக்கும் புதன்கிழமை (மார்ச் 20) முதல் மார்ச் 22-ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பிளஸ் 2 தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் பள்ளி கல்வித்துறை இயக்குநர் இ.வல்லவன் அறிவித்துள்ளார்




மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவதாக கூறி தி.மு.க., நாடகம் ஆடுவதாக முதல்வர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.


கல்வியில் பின் தங்கியுள்ள ஒன்றியங்களில் உள்ள மாணவர்கள், மற்ற மாணவர்களுக்கு இணையான கல்வி பெற, மாதிரிப் பள்ளிகள் துவங்கும் பணிகள் நடந்து வருகின்றன. வரும் கல்வி ஆண்டு முதல், 26 ஒன்றியங்களில், மாதிரி பள்ளிகள் துவங்கப்படுகின்றன. இப்பள்ளிகளில், ஆறாம் வகுப்பிலிருந்து, 12ம் வகுப்பு வரை, மாணவர்கள் சேர்க்கப்படுவர். இவற்றுக்கு சொந்தக் கட்டடம் கட்டும் வரை, அருகில் உள்ள மேல்நிலைப் பள்ளிகளில், மாதிரி பள்ளிகள் இயங்கும். இப்பள்ளிகளுக்கு, தலைமை ஆசிரியர், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், இசை, உடற்கல்வி, கணினி, ஓவிய ஆசிரியர்கள் என, 17 ஆசிரியர் பணியிடங்களும், இளநிலை உதவியாளர், நூலகர், ஆய்வக உதவியாளர், அலுவலக உதவியாளர், துப்புரவு பணியாளர், காவலாளி, தோட்டக்காரர் என, ஏழு ஆசிரியர் அல்லாத பணியிடங்களும் உருவாக்கப்படும்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(TNPSC) நடத்தும் குரூப் 2 மற்றும்VAO தேர்வில் இருந்து பொதுத் தமிழ் பகுதி நீக்கப்பட்டுள்ளது. குரூப் 4 தேர்வுகளிலும் தமிழ் பாடத்திற்கான மதிப்பெண்கள் குறைக்கப்பட்டுள்ளன. அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்–1, குரூப்–1–ஏ, குரூப்–1–பி, குரூப்–2, குரூப்–4 உள்ளிட்ட தேர்வுகளுக்கும் இதர தொழில்நுட்ப தேர்வுகளுக்கும் பாடத்திட்டம் முற்றிலும் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக 72 பக்கங்கள்

 கூட்டுறவு சங்க தேர்தல் தொடர்பான சந்தேகங்களை அறிய, தொலைபேசி எண்கள் அறிவிப்பு


கூட்டுறவு சங்க தேர்தல் தொடர்பான சந்தேகங்களை அறிய, தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு கூட்டுறவு சங்க தேர்தலை நடத்த, கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் ஆணையாளராக ஓய்வு ஐ.ஏ.எஸ். அதிகாரி மோகன் நியமிக்கப்பட்டுள்ளார். தேர்தல் தொடர்பான சந்தேகங்கள், புகார்கள் தெரிவிக்க, கட்டுப்பாட்டு அறைகளும் செயல்பட்டு வருகிறது. மாநில அளவிலான சந்தேகங்களை 044 2435 1403,

விருதுநகர் மாவட்ட தொடக்க கூட்டுறவு சங்கங்கள் தொடர்புடைய தேர்தல் சந்தேகங்களுக்கு 04562 252 680, ஸ்ரீ வில்லிபுத்தூர் துணை பதிவாளர் அலுவலகம் 04563 260 312, அருப்புக்கோட்டை துணை பதிவாளர் 04566 228 220 ஆகிய எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

 மத்திய அரசின் வேலைவாய்ப்பு மற்றும் கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு (OBC) வழங்கப்பட்டுள்ள 27 சதவீத இடஒதுக்கீட்டை பெறுவதற்கான வருமான வரம்பு ரூ.4.5 லட்சத்திலிருந்து ரூ.6 லட்சமாக உயர்வு


அரசின் வேலைவாய்ப்பு மற்றும் கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. இது செல்லாது என அறிவிக்கக்கோரி இடஒதுக்கீடு எதிர்ப்பாளர்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.