PAGEVIEWERS


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(TNPSC) நடத்தும் குரூப் 2 மற்றும்VAO தேர்வில் இருந்து பொதுத் தமிழ் பகுதி நீக்கப்பட்டுள்ளது. குரூப் 4 தேர்வுகளிலும் தமிழ் பாடத்திற்கான மதிப்பெண்கள் குறைக்கப்பட்டுள்ளன. அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்–1, குரூப்–1–ஏ, குரூப்–1–பி, குரூப்–2, குரூப்–4 உள்ளிட்ட தேர்வுகளுக்கும் இதர தொழில்நுட்ப தேர்வுகளுக்கும் பாடத்திட்டம் முற்றிலும் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக 72 பக்கங்கள் அடங்கிய புதிய பாடத்திட்டத்தை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நேற்றிரவு வெளியிட்டுள்ளது. பத்தாம் வகுப்பு தேர்ச்சியை தகுதியாகக் கொண்டு எழுதும் குரூப் 4 மற்றும் வி.ஏ,ஓ தேர்வுகளில் புதிய மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

வி.ஏ.ஓ. தேர்வில் இதுவரை பொது அறிவு, புத்தி கூர்மை , சிந்தித்து விடை அளித்தல் உள்ளடக்கிய பகுதியில் இருந்து 150 வினாக்களும், கிராம நிர்வாகம் தொடர்பான பகுதிகளில் இருந்து 50 வினாக்களும், பொதுத் தமிழ் பகுதிக்கு 100 வினாக்களும் ஒதுக்கப்பட்டிருந்தன. தற்போது புதிய பாடத்திட்டத்தின் படி, பொதுத் தமிழ் பகுதி முழுவதுமாக நீக்கப்பட்டுள்ளது. இதேபோல், குரூப் 2 தேர்வில், அனைத்து மதிப்பெண்களும் பொது அறிவுப்பகுதிக்கே ஒதுக்கப்பட்டுள்ன.

குரூப் 4 தேர்வில் இதுவரை 100 வினாக்கள் பொது அறிவு பகுதிகளுக்கும், 100 வினாக்கள் பொதுத் தமிழுக்கும் ஒதுக்கப்பட்டது. புதிய பாடத்திட்டத்தின் படி, பொது அறிவு, சிந்தித்து விடை அளித்தல், புத்தி கூர்மை உள்ளடக்கிய பகுதியில் இருந்து 150 வினாக்கள் கேட்கப்படும். இதற்காக 225 மதிப்பெண்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள 50 வினாக்கள் மட்டுமே பொதுத் தமிழில் இருந்து கேட்கப்படவுள்ளது. இதற்காக 75 மதிப்பெண்கள் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

இதுவரை தனியாக நடத்தப்பட்டு வந்த மாவட்ட கல்வி அதிகாரி (டி.இ.ஓ.) தேர்வு மட்டும் குரூப்–1 தேர்வுடன் சேர்க்கப்பட்டு உள்ளது.

முன்பு அறிவிக்கப்பட்டபடி, நகராட்சி கமிஷனர் (கிரேடு–2), சார்–பதிவாளர் (கிரேடு–2), துணை வணிகவரி அதிகாரி, இளநிலை வேலைவாய்ப்பு அதிகாரி ஆகிய பதவிகள் குரூப்–1 தேர்வுடன் சேர்க்கப்படவில்லை. எனவே, இந்த பதவிகள் முன்பு போல குரூப்–2 தேர்வில்தான் இடம்பெற்று இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குரூப்–2 தேர்வில் நேர்காணல் கொண்ட பதவிகளுக்கு மட்டும் முதல்நிலைத்தேர்வுடன் கூடுதலாக மெயின் தேர்வு (Objective Type) நடத்தப்படும்.

No comments:

Post a Comment