PAGEVIEWERS





இங்கிலாந்தின் புகை பிடிப்பவர்களை மையமாகக் கொண்டு அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

இங்கிலாந்தில் கடந்த 50 ஆண்டுகளில் சிகரெட் பிடிப்பவர்களின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்துள்ளது. ஆனால் புகை பழக்கத்திலிருந்து விடுபடுபவர்களின் எண்ணிக்கை மட்டும் குறைந்துகொண்டே வந்தது.


இதைத் தொடர்ந்து ராயல் மருத்துவக் கல்லூரியும், ராயல் மனநிலை மருத்துவ கல்லூரியும் இணைந்து புகை பழக்கம் உள்ள ஆண்கள் மற்றும் பெண்களிடம் ஆய்வு மேற்கொண்டனர்.

அந்த ஆய்வில், இங்கிலாந்தில் புகைபிடிக்கும் பழக்கம் உடைய 1 கோடி பேரில், 30 லட்சம் பேர் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளார்கள் எனவும் 20 லட்சம் பேர் மனநலம் பாதிக்கும் வகையிலான போதை பொருட்களை புகைப்பவர்கள் எனவும் 10 லட்சம் பேர் பல வருடங்களாக மனநோய் பாதித்து அதன்மூலம் சிகரெட் பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களாக இருப்பதும் கண்டறியப்பட்டது.

இதுகுறித்து கூறிய இங்கிலாந்து நுரையீரல் அறக்கட்டளை அமைப்பின் துணைத்தலைவர் பேராசிரியர் ஸ்டீபன் ஸ்பிரோ, சிகரெட் பழக்கம் ஒருவித மனநோயின் அறிகுறியாக தெரிகிறது. அதிக அளவில் சிகரெட் பிடிப்பவர்கள், மனநல மருத்துவரை சந்தித்து சிகிச்சை பெறுவதே சிறந்த வழி என தெரிவித்தார்.

No comments:

Post a Comment