ஆசிரியர்கள் இடமாறுதல் தொடர்பான ஆணையை செயல்படுத்த மறுத்ததாக பள்ளிக் கல்வித் துறை மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம், நாட்டாமங்கலம் கள்ளர் சீரமைப்பு
அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் சிவக்குமார்
கள்ளர் சீரமைப்புத் துறையின் கீழ் மதுரை, தேனி,
வரும் அரசு பள்ளிகளின் ஆசிரியர்கள் சொந்த
மாவட்டங்களுக்கு இடமாறுதல் பெற முடியாத நிலை
உள்ளது.
இது தொடர்பாக அரசிடம் வலியுறுத்தியதன்பேரில்,
பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும்
பள்ளிகளுக்கு இடமாறுதல் பெறக்கூடிய வகையில் 2011
பிப்ரவரி 23-ல் அரசு ஒரு ஆணை வெளியிட்டது.
அதில், தெரிவிக்கப்பட்டுள்ள 9 நிபந்தனைகளையும்
ஏற்றுக்கொண்டோம். ஆனால் இது வரை அரசு அந்த
ஆணையின்படி இடமாறுதல் அளிக்காமல் தாமதித்து
வருகிறது. புதிய ஆசிரியர் நியமனத்தின்போதும்
எங்களை இடமாறுதல் செய்யவில்லை.
அரசு ஆணையை செயல்படுத்துமாறு பள்ளிக் கல்வித்
துறைச் செயலர், இயக்குநர், இணை இயக்குநர்
உள்ளிட்ட அதிகாரிகளுக்கு ஜனவரி 3 ஆம் தேதி உயர்
நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
இந்த உத்தரவை அதிகாரிகள் செயல்படுத்த உத்தரவிட
வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளனர். நீதிபதி
ஹரிபரந்தாமன் முன்பு இந்த மனு விசாரிக்கப்பட்டது.
விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார்.
No comments:
Post a Comment