ஈஸ்டர் பண்டிகையையொட்டி இன்று அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். இயேசு, பாவிகளை ரட்சிக்க சிலுவையில் அறையப்பட்டு அடக்கம் செய்யப்பட்டார். பின்னர், மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார். இந்நாள் ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. ஈஸ்டர் பண்டிகையையொட்டி அனைத்து தேவாலயங்களிலும் இன்று அதிகாலை சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. சாந்தோம், பெசன்ட் நகர், அடையாறு உள்ளிட்ட தேவாலயங்களில் நடந்த சிறப்பு வழிபாட்டில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். இதில் ஞானஸ்தானத்தை புதுப்பிக்கும் வகையில், மெழுகுவர்த்தி ஏந்தியபடி கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். உயிரோடு எழுந்த இயேசுவை பற்றிய தேவசெய்தி அளிக்கப்பட்டது.
சிலுவையில் அறைப்படுவதற்கு முன்பு இயேசு, 40 நாட்கள் உபவாசம் இருந்தார். இதை நினைவு கூரும் வகையில் பெரும்பாலான கிறிஸ்தவர்கள் கடந்த 40 நாட்களாக அசைவ உணவை தவிர்த்து உபவாசம் இருந்தனர். ஈஸ்டர் பண்டிகையான இன்று கிறிஸ்தவர்கள் உபவாசத்தை நிறைவு செய்து அசைவ உணவை சாப்பிட்டனர். இதனால் இறைச்சி கடைகளிலும் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பேக்கரி கடையிலும் ஈஸ்டர் கேக், ஈஸ்டர் முட்டை என்ற ஈஸ்டர் ஸ்பெஷல் இனிப்பு வகைகள் விற்பனை படுஜோராக நடந்தது.

No comments:
Post a Comment