PAGEVIEWERS

10ம் வகுப்பு மதிப்பெண் சான்றுகளில் எந்தவித மாற்றமும் செய்யக்கூடாது என முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக்கல்வி இயக்குனர் மணி உத்தரவிட்டுள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது: பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றுகளில் பதிவு செய்யப்பட்ட பிறந்த தேதி, பெயர், தந்தை பெயர், இன்ஷியல், ஜாதி போன்றவைகளை பள்ளி நிர்வாகங்கள் மாற்றம் செய்யக் கூடாது.
மாணவர்கள் சேர்க்கையின்போதே பெயர், பெற்றோர் பெயர், பிறந்த தேதியை சரியாக பெற்று பதிவு செய்ய வேண்டும். மாற்றம் செய்ய முடியாது என்பதை தெளிவாக எடுத்து கூற வேண்டும். பிறப்பு, ஜாதி சான்றுகளை பெற்று, அதில் உள்ள தேதி, விபரங்களை சரி பார்த்து பின்னரே பதிவு செய்ய வேண்டும். இதை தலைமையாசிரியகளும் சரி பார்த்து கையெழுத்திட வேண்டும்.
மதிப்பெண் சான்றுகளில் திருத்தம் செய்ய முடியாது என்பதை மாணவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். கோர்ட் உத்தரவிட்டாலும் கூட, இயக்குனர் அனுமதி இல்லாமல் திருத்தம் செய்ய கூடாது. ஜாதி, பெயர், பிறந்த தேதி குறித்து அதிக அளவில் விண்ணப்பிக்கின்றனர். பலர் கோர்ட்டுகளுக்கு செல்கின்றனர். ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன.
பள்ளி கல்வி செயலரையும் வழக்கில் சேர்த்து சம்மன் பெற்றால், அவரது பெயரை நீக்க அரசு வக்கீல்களை சந்தித்து நடவடிக்கை எடுக்க, முதன்மை கல்வி அலுவலர்கள் முன் வர வேண்டும். மதிப்பெண் சான்றுகளை திருத்தம் செய்ய, பள்ளி கல்வி இயக்குனர் பரிந்துரைபடி, அரசு தேர்வுத்துறை இயக்குனர் தான் திருத்தம் செய்ய முடியும். 2012- 13ம் ஆண்டில் இது போன்ற குறைபாடுகள் வராமல் பார்த்து கொள்ள, அனைத்து தலைமை ஆசிரியர்களையும் அறிவுறுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment