PAGEVIEWERS

          SSA    ---SSA  ----SSA -----SSA----SSA


"சர்வ சிக்ஷா அபியான் - எஸ்.எஸ்.ஏ., - எனும் திட்ட அலுவலர்கள், வேறு பணிக்கு மாத்திக்கிட்டு போயிடலா மான்னு யோசிக்கிறாங்க பா...'' என, கடைசி தகவலைக் கூறினார் அன்வர்பாய்.

""ஏன் வே... இந்த திட்டம் தான், நாடு முழுக்க, "ஓஹோ'ன்னு, கொடி கட்டிப் பறக்குதே...'' எனக் கேட்டார் அண்ணாச்சி.

""திட்டம் நல்லது தான்... அதுல இருக்கற கருத்தாளர்களுக்கு, இப்ப, புதுப் பணி ஒண்ணு போட்டிருக்காங்க... நம் மாநிலத்துல முப்பருவ கல்வி முறை சம்பந்தமா, ஆசிரியர்களுக்கு இவங்க தான் பயிற்சி கொடுக்கறாங்க... இதுக்கான ஏற்பாட்டை, மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தான் செய்யுது... இதுக்கு, எஸ்.சி.இ.ஆர்.டி.,ன்னு பேரு...""ஆனா, பயிற்சி நடக்குற இடங்கள்ல, குடிநீர், சாப்பாடு, நாற்காலின்னு எந்த அடிப்படை வசதியுமே இல்லியாம்... ஆசிரியர்கள் பசிக்குதுன்னு கேட்டா, கருத்தாளர்கள், சொந்த பணத்தைச் செலவு செய்ய வேண்டி இருக்கு... ரெண்டு திட்ட அதிகாரிகளும் கண்டுக்கறதே இல்லியாம்... அதனால தான், இந்தப் பணியே வேண்டாம், வேறு வேலைக்குப் போயிறலாம்ங்கற மனநிலைல, இந்த கருத்தாளர்கள் இருக்காங்க பா...''
 என, மூச்சு விடாமல் கூறி முடித்து எழுந்தார் அன்வர்பாய்; பெஞ்ச் கலைந்தது.

 நன்றி:

டீ கடை பெஞ்சு

No comments:

Post a Comment