PAGEVIEWERS

அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு புதிய சீருடை 

வழங்கப்படுகிறது  

அரசு பள்ளியில் படிக்கும் மாணவ & மாணவிகளுக்கு புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள மெரூன் கலர் சீருடை இந்த மாத இறுதிக்குள் வழங்கப்பட உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் சத்துணவு திட்டத்தின் கீழ் பயன்பெறும் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவ & மாணவிகளுக்கு இலவச சீருடை வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு மாணவர்களுக்கு காக்கி கலர் அரைக்கால் சட்டை, வெள்ளை சட்டை, மாணவிகளுக்கு நீல நிற பாவாடை, நீல நிற தாவணி, வெள்ளை சட்டை வழங்கப்பட்டது.

இந்த ஆண்டு மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட உள்ள இலவச சீருடையின் நிறம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி மாணவர்களுக்கு மெரூன் கலர் பேன்ட், வெளிர் பிரவுன் நிற மேல் சட்டையும், மாணவிகளுக்கு மெரூன் நிற சல்வார் கமீசும், வெளிர் பிரவுன் நிற துப்பட்டாவும் வழங்கப்பட உள்ளது. இந்த கல்வி ஆண்டில் 48.63 லட்சம் மாணவ & மாணவிகளுக்கு 4 செட் இலவச சீருடை வழங்க 329.89 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


தமிழகம் முழுவதும் நேற்று முதல் அரசு பள்ளிகள் திறக்கப்பட்டன. கடந்த ஆண்டு வழங்கப்பட்ட சீருடைகளையே மாணவ & மாணவிகள் அணிந்து வந்தனர். புதிதாக அறிமுகப்படுத்தப்பட உள்ள மெரூன் கலர் சீருடைகள் நேற்று வரை பள்ளிகளுக்கு வந்து சேரவில்லை.


இதுகுறித்து, பள்ளி கல்வித்துறை அமைச்சரக உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், புதிய கலர் சீருடைகள் சமூகநலத்துறை மூலம் தைக்கப்பட்டு வருகிறது. இன்னும் ஒரு சில வாரங்களில் அந்த பணிகள் முடிவடையும். புதுக் கோட்டை தேர்தல் பணியில் அமைச்சர்கள் ஈடுபட்டுள்ளனர். ஜூன் 15ம் தேதிக்கு பிறகுதான் அரசு பள்ளி மாணவ & மாணவிகளுக்கு இலவச சீருடைகள் வழங்கும் பணி குறித்து முடிவு செய்யப்படும். இந்த மாத இறுதிக்குள் ஒன்று அல்லது இரண்டு செட் சீருடை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

பெற்றோர் கூறுகையில், தனியார் பள்ளிகள் போன்று கோடை விடுமுறை நாட்களிலேயே அரசு பள்ளி மாணவ & மாணவிகளுக்கு இலவச சீருடைகள் வழங்கும் நடைமுறையை கல்வித்துறை அதிகாரிகள் பின்பற்ற வேண்டும். அப்போதுதான் தனியார் பள்ளிக்கு இணையாக அரசு பள்ளிகளும் உள்ளது என்று பெயர் எடுக்க முடியும். பள்ளி திறக்கும் முதல் நாளில் புதிய சீருடைகளை அணிந்து மாணவ & மாணவிகள் ஆர்வமு
டன் பள்ளிக்கு வருவார்கள், என்றனர்.

No comments:

Post a Comment