PAGEVIEWERS

எந்ததெந்த ஆசிரியர்கள் எவ்வாறு நியமிக்கப்படுகிறார்கள்?

பள்ளிக்கல்வித் துறை, உயர்கல்வித் துறை மற்றும் சட்டத்துறை ஆகியவற்றில் ஆசிரியர்களை நியமிப்பதற்காக நடைபெற்றுவரும் பணிகள் பற்றிய விபரங்களை அறிதல் அவசியம்.
பள்ளிக் கல்வித்துறையின் விபரங்கள்
* இடைநிலை ஆசிரியர் - இப்பணிக்கான காலியிடங்களின் எண்ணிக்கை 1,743 - இப்பணிக்கு தேர்வுப் பட்டியல் தயாராக உள்ளது. ஆனால் ஐகோர்ட் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

* இடைநிலை ஆசிரியர் - இப்பணிக்கான காலியிடங்களின் எண்ணிக்கை 5,451 - இவர்கள் டி.இ.டி தேர்வு மூலம் தெரிவுசெய்யப்படுவர்.
* சிறப்பு ஆசிரியர் - இப்பணிக்கான காலியிடங்களின் எண்ணிக்கை 1,555 - தேர்வுப் பட்டியல் தயாரிக்கும் பணி நடக்கிறது.
* பட்டதாரி ஆசிரியர் - இப்பணிக்கான காலியிடங்களின் எண்ணிக்கை 4,367 - இதுவரை 4,006 நபர்கள் தேர்வு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட துறையிடம் பட்டியல் வழங்கப்பட்டு விட்டது. மீதியுள்ள இடங்களுக்கு 23, 24ல் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது.
* பட்டதாரி ஆசிரியர் - இப்பணிக்கான காலியிடங்களின் எண்ணிக்கை 18,343 - டி.இ.டி தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.
* வேளாண் ஆசிரியர் - இப்பணிக்கான காலியிடங்களின் எண்ணிக்கை 25 - தேர்வு முடிவை வெளியிட அரசிடம் சில விளக்கங்கள் கேட்கப்பட்டுள்ளன.
* பி.ஆர்.டி - இப்பணிக்கான காலியிடங்களின் எண்ணிக்கை 634 - டி.இ.டி தேர்வு மூலம் தேர்வுசெய்யப்படுவர்.
* ஏ.இ.இ.ஓ - இப்பணிக்கான காலியிடங்களின் எண்ணிக்கை - 34 - 18ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு நடந்துள்ளது.
* முதுநிலை விரிவுரையாளர் - இப்பணிக்கான காலியிடங்களின் எண்ணிக்கை 34 - 18ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு நடந்துள்ளது.
* முதுகலை ஆசிரியர் - இப்பணிக்கான காலியிடங்களின் எண்ணிக்கை - 1,347 - ஒரு கட்ட தேர்வு முடிவு வெளியீடு. மீதமுள்ள இடங்களுக்கு 24ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது.
* முதுகலை ஆசிரியர் - இப்பணிக்கான காலியிடங்களின் எண்ணிக்கை 2,895 - மே 27ம் தேதி தேர்வு நடந்தது. விரைவில் முடிவு வெளியிடப்படும்.
இத்துறையிலுள்ள காலியிடங்களின் மொத்த எண்ணிக்கை 36,428
உயர்கல்வித் துறை
* உதவிப் பேராசிரியர்(பொறியியல் கல்லூரி) - இப்பணிக்கான காலியிடங்களின் எண்ணிக்கை 154 - தேர்வு முடிவை வெளியிடும் பணி நடக்கிறது.
* உதவிப் பேராசிரியர்(பாலிடெக்னிக்) - இப்பணிக்கான காலியிடங்களின் எண்ணிக்கை 139 - தேர்வு முடிவை வெளியிடும் பணி நடக்கிறது.
* உதவி பேராசிரியர்(கலை அறிவியல் கல்லூரி) - இப்பணிக்கான காலியிடங்களின் எண்ணிக்கை 1,025 - உயர்கல்வித் துறையிடம் விளக்கங்கள் கோரப்பட்டுள்ளன.
இத்துறையிலுள்ள காலியிடங்களின் மொத்த எண்ணிக்கை 1,318
சட்டத்துறை
* விரிவுரையாளர் - இப்பணிக்கான காலியிடங்களின் எண்ணிக்கை 45 - தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.
 இந்த 3 துறைகளிலும் மொசேர்த்து காலியாக உள்ள இடங்களின் எண்ணிக்கை 37,791.

No comments:

Post a Comment