PAGEVIEWERS

புதுக்கோட்டை இடைத் தேர்தல்: அதிமுக 71448 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி!

புதுக்கோட்டை தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க 1,01,948 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றுள்ளது.இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி மாலை வரை நடைபெற்றது. 23-வது மற்றும் இறுதிச் சுற்று முடிவில் அ.தி.மு.க வேட்பாளர் கார்த்திக் தொண்டைமான் 1,01,948 வாக்குகளும், தே.மு.தி.க வேட்பாளர் ஜாகீர் உசேன் 30,500 வாக்குகளும் பெற்றனர். இதையடுத்து 71448 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment