கம்ப்யூட்டர் ஆசிரியர் மற்றும் சத்துணவு பணியாளர்களை பட்டதாரி ஆசிரியர்களாக பணி நியமனம் செய்வதல். பிரிவு கண்காணிப்பாளர் பதவி உயர்வு, இருக்கைப் பணி கண்காணிப்பாளர் பதவி உயர்வு கவுன்சிலிங், 21ம் தேதி முதல் நடைபெறுகிறது.
* டி.ஆர்.பி., தேர்வு மூலம் தேர்வான, 185 கம்ப்யூட்டர் ஆசிரியர் பணி நியமன கவுன்சிலிங், 21ம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது.
* பதவி உயர்வு மூலம், பிரிவு கண்காணிப்பாளர்களாக பணி நியமனம் செய்யப்படும், 75 பேருக்கான கவுன்சிலிங், 22ம் தேதி காலை 10.30 மணிக்கும்; இருக்கைப் பணி கண்காணிப்பாளர்களாக பதவி உயர்வு பெறும், 45 பேருக்கான கவுன்சிலிங், 22ம் தேதி காலை 10 மணிக்கும் நடைபெறுகிறது.
* சத்துணவு பணியாளர்களில், பட்டதாரி ஆசிரியர் தகுதி வாய்ந்தவர்களுக்கு சிறப்புத் தேர்வு நடத்தப்பட்டு, 136 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கான பணி நியமன கவுன்சிலிங், 23ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.
* டி.என்.பி.எஸ்.சி., மூலம், பள்ளிக் கல்வித் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட, 36இளநிலை உதவியாளர் மற்றும் 16 தட்டச்சர்களுக்கு பணி நியமனம் வழங்கும் கவுன்சிலிங், 23ம் தேதி பகல் 2 மணிக்கு நடக்கிறது.
அனைத்து கவுன்சிலிங் நிகழ்ச்சிகளும் , சென்னை, டி.பி.ஐ., வளாகத்தில் உள்ள மாநில பெற்றோர் ஆசிரியர் கழகத்தில் நடக்கும் என, பள்ளிக்கல்வி இயக்குனர் தெரிவித்துள்ளார்.
அனைத்து கவுன்சிலிங் நிகழ்ச்சிகளும் , சென்னை, டி.பி.ஐ., வளாகத்தில் உள்ள மாநில பெற்றோர் ஆசிரியர் கழகத்தில் நடக்கும் என, பள்ளிக்கல்வி இயக்குனர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment